தீப்பிடிக்கும் அதிநவீன செல்போனை மாற்ற விமானநிலையத்தில் விசேஷ பூத் திறக்கும் சாம்சங் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஐ போனுக்கு போட்டியாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் என்ற அதி நவீன செல்போனை அறிமுகம் செய்து விற்பனைக்கு வெளியிட்டது.
ஆனால் அந்த போன் வீடு மற்றும் விமானத்தில் திடீரென தீப்பிடித்ததாக புகார்கள் வந்தன. அதை தொடர்ந்து உலகம் முழுவதும் அந்த செல்போன் விற்பனைக்கு சாம்சங் நிறுவனம் தடை விதித்தது.
மேலும் விற்கப்பட்ட செல்போன்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தது. அந்த செல்போன் உற்பத்தியையும் நிறுத்தியது.
இந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி-7 செல்போன்களை விமானத்தில் எடுத்து செல்ல அமெரிக்கா. கனடா, இஸ்ரேல் மற்றும் ஐப்பான் நாடுகள் தடை விதித்துள்ளன.
எனவே தென் கொரியாவில் சியோல் அருகேயுள்ள இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் சாம்சங் நிறுவனம் விசேஷ பூத் அமைத்துள்ளது.
அங்கு விமான பயணிகள் கேலக்ஸி நோட்-7 செல்போன்களை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக வேறு மாடல்போன் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
40 கோடி சாதனங்களில் விண்டோஸ் 10
விண்டோஸ் 10 இயக்க முறைமை தற்போது 40 கோடிக்கும் மேலான எண்ணிக்கையிலான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக, மைக்ரோசாப்ட் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். சென்ற மே மாதம், இந்த எண்ணிக்கை 30 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் இது 20.7 கோடியாக இருந்தது. புதிய எண்ணிக்கை, பெர்சனல் கம்ப்யூட்டர்களை மட்டும் குறிப்பிடவில்லை. அவற்றுடன், டேப்ளட்
பி.சி.க்கள், ஸ்மார்ட் போன்கள், எக்ஸ் பாக்ஸ் சாதனங்கள், ஹோலோ லென்ஸ் மற்றும் சர்பேஸ் ஹப்ஸ் ஆகியவற்றையும் இணைத்தே கூறுகின்றன. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு பெருகிய வேகத்தைக் காட்டிலும் கூடுதல் வேகத்திலேயே, விண்டோஸ் 10 சிஸ்டம் தன் பயனாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 அறிமுகமான பின்னர், 2018 ஆம் ஆண்டுக்குள், நூறு கோடி சாதனங்களில், விண்டோஸ் 10 இயக்க முறைமையைக் கொண்டு வருவதே, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலக்கு என அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த இலக்கு தளர்த்தப்பட்டு, கால வரையறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அண்மையில், செப்டம்பர் இறுதி வாரத்தில், அட்லாண்டா நகரில் நடைபெற்ற, மைக்ரோசாப்ட் தொழில் நுட்ப கருத்தரங்கில் இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது.