10 இலக்க மொபைல் எண்கள் விரைவில் 11 இலக்கமாக மாறப்போகிறது!
14 Oct,2016
10 இலக்க மொபைல் எண்கள் விரைவில் 11 இலக்கமாக மாறப்போகிறது!
11 இலக்க மொபைல் எண்களை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவர தொலைத்தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலைப்பேசி ஆப்ரேட்டர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 இலக்க மொபைல் எண்கள் விரைவில் தீர உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 10 இலக்க எண்களை மொபைல் எண்களாக பயன்படுத்த தொலைத்தொடர்புத் துறை 30 ஆண்டுகளுக்கான கொள்கையை கடந்த 2003 ஆம் ஆண்டு வகுத்தது. ஆனால் அதிகரித்து வரும் அலைப்பேசி எண்ணிக்கை வாடிக்கையாளர்கள் காரணமாக தனது கொள்கையை மறு பரிசீலனை செய்துள்ளது.
ஒவ்வொரு அலைப்பேசி ஆப்ரேட்டர்களுக்கும் அது கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் அடிப்படையில், 6 மாதம் அல்லது ஒரு ஆண்டிற்கு தேவையான மொபைல் எண் வரிசையை தொலைத்தொடர்புத்துறை ஒதுக்குவது குறிப்பிடத்தக்கது.