தவறுதலாக செய்த காரியத்தால் செய்வதறியாது திகைக்கும் நாசா
09 Aug,2016

தவறுதலாக செய்த காரியத்தால் செய்வதறியாது திகைக்கும் நாசா
முதன் முறையாக நிலவில் காலடி வைத்தது தொடர்பாக பல முரண்பாடான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற போதிலும் அமெரிக்கா தான் முதன் முதலாக காலடி வைத்தது என்று இதுவரைக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் 1969ம் ஆண்டு அப்பலோ 11 எனும் விண்கலத்தில் பயணித்த போது நிலவின் பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
இவற்றுள் சில முக்கியமான புகைப்படங்களை கடந்த வருடத்தில் ஏல விற்பனை செய்திருந்தது.
இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட புகைப்படங்களுள் அப்பலோ 17 இல் பயணித்த போது எடுக்கப்பட்டவைகளும் அடங்கும்.
எனினும் அப்பலோ 11 இலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது நாசா நிறுவனத்திற்கு தேவைப்படுகின்றன.
இதற்கு காரணம் மேற்கண்ட இரு விண்கலங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்கு ஒரே இருப்பு (Inventory) இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதனால் அவற்றினை சரிசெய்ய வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
எது எவ்வாறெனினும் நாசா நிறுவனத்திற்கு தேவையான குறித்த புகைப்படங்களை வாங்கியவர் யார்? அப் புகைப்படங்கள் மீண்டும் கிடைக்குமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.