போக்கிமேன் கோ விளையாட்டுக்கு தடை!
03 Aug,2016
உலகமெங்கும் அனைவராலும் விரும்பி விளையாடப்பட்டுக் கொண்டிருக்கும் போக்கிமேன் கோ (Pokemon Go) கேமிற்கு பிரேசிலில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த போக்கிமேன் கோ விளையாட்டை ஆண்ட்ராய்டு, அப்பிள் இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் விளையாட முடியும்.
Augmented Reality தொழிநுட்பத்துடன் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற கேம்களை போல் இல்லாமல் இதை நடந்து கொண்டே தான் விளையாட முடியும்.
கமெரா, கூகுள் வரைபடம், ஜிபிஎஸ் உதவியுடன் இயங்கும் போன்களில் நீங்கள் இதை விளையாட வேண்டும். இதில் நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் உருவம் எங்கு மறைந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஜப்பானில் பிரபலமான இந்த கேம் தற்போது 30க்கும் அதிகமான உலக நாடுகளை அடிமைப்படுத்தி விட்டது.
மறைந்திருக்கும் உருவங்களை தேடி பயணிப்பதால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் உஷாரான பிரேசில் இந்த விளையாட்டை தடை செய்துள்ளது