வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது.
பூமியை போலவே சுற்றுச்சூழல். நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வீடியோவில் ஆதாரம் காணப்படுகின்றது.
நட்சத்திரமும் கிரகங்களும்
ஒரு குள்ள சிவப்பான நட்சத்திரமும் அதனைச் சுற்றுகிற பூமியைவிட சற்று பெரியதுமான மூன்று கிரகங்களும் அண்டவெளியில், கடந்த மே மாதத்தில் வானியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒன்றுக்கொன்று வெகுதூரங்களில் காணப்படும் மூன்று கிரகங்களில். நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகத்தில், நம் பூமியில் உள்ளது போன்ற பாறைகளும் சுற்றுச்சூழலும் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
அதனால், அங்கிருந்துதான் வேற்றுக்கிரக வாசிகள் என்று நாம் கூறிவரும் விவரிக்க முடியாத அமைப்புகொண்ட பறக்கும் தட்டுகளில், பூமிக்கு வந்து செல்லும் மர்ம இனம் வாழக்கூடும் என முடிவுசெய்துள்ளனர்.
இதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பார்த்து, உறுதி செய்துள்ளனர்.
அந்த நட்சத்திரத்திற்கு ட்ராப்பிஸ்ட்-1 என பெயரிட்டுள்ளனர். அதைச் சுற்றும் கிரகங்களும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஆய்வுகள் தொடர்ந்த நிலையில், இப்போழுதுதான் ட்ராப்பிஸ்ட்- 1 க்கு மிக அருகில் உள்ள கிரகத்தில், பூமியில் அமைந்திருப்பது போல, உயிர்கள் வாழக்கூடிய பாறை நிலங்களும், சிறிய சுற்றுச்சூழலும் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது செவ்வாய் கிரகத்தோடு ஒப்பிடுகையில், சராசரியாக அதன் சுற்றுவட்டப்பாதையை விட, 12.5 ஒளி நிமிடங்கள் தூரத்தில் உள்ளது.
மேலும், அந்த கிரகம் நம் பூமியைவிட தோராயமாக மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வு வரலாற்றிலே மிகச்சிறந்த முன்னேற்றமாக விஞ்ஞானிகளே வியக்கின்றனர்.
மாசசூசெட்ஸ் தொழில்கல்வி நிறுவனத்தில் இந்த கிரகங்களை பார்த்து மேலும், ஆய்வு செய்துவரும் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, சூரியனை பூமி சுற்றுவதுபோல, அந்த நட்சத்திரத்தையும் அந்த கிரகங்கள் சுற்றுகின்றன.
ஆனால், அந்த நட்சத்திரம் வெப்பமின்றி குளிர்ந்தும் பிரகாசமான செந்நிற ஒளியுடனும் காணப்படுகிறது. அதற்கு, அந்த நட்சத்திரத்தை சுற்றியுள்ள அகச்சிவப்பு அடுக்கே காரணம்.
அந்த கிரகங்களின் அளவும் வெப்பநிலையும் உயிர்கள் வாழ தகுதியானது. மேலும், ப்ரவுன் நிறத்தில் ஒளிரும் அந்த நட்சத்திரம் சூரியனில் எட்டில் ஒரு பகுதி நிறையுடையது.
மறையாத, உறுதியான சமிஞைகள் அந்த சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து பெறப்படுவதால், வாழத்தக்க உலகங்களின் பிரதான இலக்குகள் அங்கு நிச்சயம் இருக்க வேண்டும் என வானியல் வல்லுனர் லீஜ்(Liege) வாதிடுகிறார்.
பூமிக்கும் நட்சத்திரத்திற்கும் போக்குவரத்து
மேலும், அந்த நட்சத்திரம் ஒரு ஒழுங்கான கால இடைவெளியில், மறைந்து பின் தோன்றுகிறது. அது நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் இடையில் பல பொருள்கள் இங்கும் அங்குமாக செல்வதை உணர்த்துவதாக உள்ளது.
சுழற்சியின்போது, கிரகங்களுக்குள்ளும் நட்சத்திரத்துடனுமான நேரும் நேர்க்கோட்டு சந்திப்பு வெவ்வேறு காலங்களில் நடக்கிறது.
நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகங்கள் 1.5 நாள் மற்றும் 2.4 நாளில் சுற்றி முடிக்கின்றன. மூன்றாவது கிரகம் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு 4 லிருந்து 73 நாட்கள் வரை ஆகலாம்.
ட்ராப்பிஸ்ட்-1 நட்சத்திரத்தை சுற்றிலும் மேலும் 60 குள்ள நட்சத்திரங்கள் காணப்படுவதாக பெல்ஜியம், லீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் கில்லான் கூறுகிறார்.
ஸ்பெக்ட்ரம் சோதனை
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, அந்த இரண்டு கிரகங்களில் போக்கு மற்றும் வரத்து என இருமுறையிலும் எடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் பதிவில், அவற்றின் உள் சுற்றுச்சூழலின் தன்மையும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்பெக்ட்ரமும் எதிர்பார்த்தபடி கிடைத்துள்ளது என்கின்றனர்.
மேலும், கிரகத்துக்குள் செல்லும் ஒளியின் அலைநீளத்தில் (Wavelength) நிறைய மாறுபாடுகள் ஏற்படுவதால், அங்கு ஒளியும், பெரிய மற்றும் அடர்த்தியான கார்பன் டை ஆக்ஸைடு அதிகமுள்ள வளிமண்டலமும், அடர்த்தியான மேகங்களும் இருக்கக்கூடும்.
அது பூமி, செவ்வாய், வியாழன் கிரகத்தைப் போல சுற்றுச்சூழல் கொண்டது என்பதை ஆய்வுகள் உறுதிசெய்கிறது.
அங்கு வாழ்பவர்கள் வாழ்க்கைமுறையும் பூமியில் இருப்பதுபோல, பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட கலாசாரமாக இருக்கும்.
அந்த கிரகத்தின் உட்பகுதி சுற்றுச்சூழலை மேலும் ஆராய்வதற்கு, இன்னும் துல்லியமான, பெரிய இடவசதிகள் கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்குவது சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என டாக்டர் டி விட் கூறுகிறார்.
மனிதரிலும் மேலானவர்கள்
அங்கு வேற்றுக்கிரக வாசிகள் இருந்தால், மனிதர்களைவிட சக்தி மிக்கவர்களாகவே நிச்சயம் இருப்பார்கள். எப்படி என்கிறீர்களா?
பூமியின் துணை கிரகமான நிலவுக்கே சமீப காலத்தில்தான் நாம் சென்றிருக்கிறோம். ஆனால், 40 ஒளி ஆண்டுகள் தூரத்திலிருந்து நம் பூமிக்கு விதவிதமான பறக்கும் தட்டுகளில் வந்து அடிக்கடி பயமுறுத்துகிறார்களே அவர்களுடைய விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு சக்திகொண்டதாக இருக்கும். அது அவர்களின் சுய சக்திக்கும் சான்று.