2ஆம் ஆண்டு கொண்டாட்டம்.. ரூ.1க்கு ஸ்மார்ட்போன்
21 Jul,2016
சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷியாமி. இந்தியாவில் தொழில் தொடங்கி 2 வருடம் நிறைவு செய்துள்ளது. இதனையடுத்து, 2ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ரூ.1க்கு ஸ்மார்ட்போன் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஜூலை 20 முதல் 23 வரை அவர்களுடைய இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் முதலில் புக்கிங் செய்யும் 10 பேருக்கு ஒரு ரூபாய் ஸ்மார்ட்போன் மற்றும் அடுத்த 500 பேருக்கு பவர்பேங் கொடுக்கப்படும் என்று ஷியாமி ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கான பதிவு பிற்பகல் 2 மணிக்கு துவங்கும்.
http://www.mi.com/in/events/2ndanniversary என்ற இணையதளத்தில் புக்கிங் செய்யலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.