மோட்டோ இ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
20 Jul,2016
.
மோட்டோரோலா மோட்டோ இ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதி பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் குறிப்புகளை அறிவித்துள்ளது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட மோட்டோரோலா மோட்டோ இ3 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. 5.0 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. மோட்டோரோலா மோட்டோ இ3 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 2800mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் ரூ.8,800 விலையில் விற்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.