மூளை காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் நூதன தொழில்நுட்பம்!
02 Jul,2016
மூளை காயங்களுக்கு சிகிச்சையளிக்கும் நூதன தொழில்நுட்பம்!
தற்போது ஆய்வாளர்கள் மூளை காயங்களுக்கு மருந்து மற்றும் நுண் துகள்களை செலுத்தும் நவீன தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இத் தொழில்நுட்பமானது உள்ளான மண்டயோட்டு அமுக்கம், குருதி ஒட்டத்தை சீராக்குதல் போன்ற கடுமையான மூளை நிலைமைகளுக்கெதிராக செயற்படுத்தப்படக் கூடியது என ஆய்வாளர் Aman Mann சொல்கிறார்.
இவ் ஆய்வாளர்கள் Cysteine, Alanine, Glutamine, மற்றும் Lysine போன்ற நான்கு அமினோ அமிலங்களுக்குமான பெப்ரைட் தொடரொழுங்கை கண்டுபிடித்துள்ளனர்.
இவை மூளை காயங்களை இனங்கண்டு செயற்படக் கூடியவை.
இந் நான்கு அமினோ அமிலங்களும் மருந்து மற்றும் நுண் துகள்களை மூளையின் காயப்பட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்கின்றன.
குறித்த மூலப்பொருள்களை பெப்ரைட்டுடன் இணைப்பதன் மூலம் அதனை மூளைக் காயங்களை அறிந்து செயற்படும் கருவியாக பயன்படுத்த முடியும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
மூலப்பொருட்களாக நொதியங்கள் அல்லது மரபணு அடக்க சிகிச்சைப் பொருட்களைப் பயன்படுத்தி வினைத்திறனான சிக்சையை மேற்கோள்ள முடியும் என சொல்லப்படகிறது.
இதேவேளை, மனிதர்களில் இவ் ஆய்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.