விற்பனைக்கு வந்துவிட்டது LG Gram நோட்புக்
20 Apr,2016
விற்பனைக்கு வந்துவிட்டது LG Gram நோட்புக்
ஒரே நாமத்தின் கீழ் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக எல்.ஜி விளங்குகின்றது.
இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் புதிய நோட்புக் கணினி தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தது.தற்போது LG Gram எனும் குறித்த நோட்புக் விற்பனைக்கு வந்துள்ளது.
Ultra Thin எனும் மிகவும் மெல்லிய தோற்றத்தினைக் கொண்ட இந்த நோட்புக் 2.2 பவுண்ட்ஸ் எடையுடையதாக இருக்கின்றது.
மேலும் இது Intel Core i5 மற்றும் Core i7 Processor என்பவற்றினைக் கொண்டதாக டிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் திரையானது 15 அங்குல அளவுடையதாகவும், 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொழில்நுட்பத்தினை உடையதாகவும் காணப்படுகின்றது.
இதில் பிரதான நினைவகமாக 8GB RAM தரப்பட்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 256GB மற்றும் 512GB என்பவற்றினைக் கொண்டுள்ளது.
Core i5 Processor இனைக் கொண்ட நோட்புக்கின் விலை 1,100 டொலர்களாகவும், Core i7 Processor இனைக் கொண்ட நோட்புக் 1,500 டொலர்களாகவும் காணப்படுகின்றது