அறிந்து கொள்ள வேண்டிய விண்டோஸ் 10 வேர்ட் டிப்ஸ்!-இடைக்கோடுகள்:

18 Apr,2016
 

       

      


ஒரு சிலர் தாங்களாகவே, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டுள்ளனர். சிலரோ, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொடர்ந்த தூண்டுதல்களால் மாறிக் கொண்டு இயக்கி வருகின்றனர். புதிய சிஸ்டம் எதிர்பாராத வகையில் சில மாற்றங்களைக் கொண்டிருக்கும். பழகாத இது போன்ற விஷயங்கள், நமக்கு ஒரு வித ஏமாற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக, நீங்கள் விண்டோஸ் 8 அல்லது

 

8.1 பயன்படுத்தாமல் இருந்தால், விண்டோஸ் 10 பல விஷயங்களில், சிறிய அளவில் ஏமாற்றம் கொடுக்கலாம். “இங்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையே” என நீங்கள் பலமுறை ஆதங்கப்படலாம். இது போன்ற அனுபவம் சில நாட்களே இருக்கும். நாம் எரிச்சல் கொண்ட விஷயங்களே, பின்னர், நமக்குப் பிடித்த செயல்பாடாகவும் மாறலாம். இதற்கு சில தந்திரமான முயற்சிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
இலவச விண்டோஸ்: நீங்கள் வரும் ஜூலை 29, 2016க்குள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை, லேப்டாப் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அதன் பின், கட்டணம் செலுத்தித்தான் விண்டோஸ் 10 சிஸ்டம் பெற வேண்டியதிருக்கும். இலவசமாக, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பெறுவது நல்லதுதானே. எனவே, நீங்கள் தற்போது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 / 8.1 பயன்படுத்திக் கொண்டிருந்தால், உடனே, விண்டோஸ் 10க்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே மாறிவிட்டீர்களா? உங்கள் கம்ப்யூட்டரை விண்டோஸ் 10க்கு மாற்றிவிட்டீர்களா? முன்பு, விண்டோஸ் 7 பயன்படுத்தி வந்தீர்களா? அப்படியானால், நிச்சயம் விண்டோஸ் 10 இயக்கம் தொடக்கத்தில் மிக விரைவாக இயக்க நிலைக்கு வருவதனை உணர்ந்திருப்பீர்கள். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது நிறைய நேரத்தினை எடுத்துக் கொள்ளும். விண்டோஸ் 10 சில நிமிடங்களில் அல்ல, சில நொடிகளிலேயே இயக்க நிலைக்கு வந்துவிடும். அதே போல, ஷட் டவுண் செய்வதும் அதி வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
விண்டோஸ் பட்டன்: உங்களுடைய பழைய சிஸ்டத்தில், விண்டோஸ் பட்டனை அழுத்தி நீங்கள் பெற்ற அனுபவத்திற்கும், அதே செயல்பாட்டினை விண்டோஸ் 10 ல் மேற்கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகளைக் காணலாம். விண்டோஸ் 10ல் கிளிக் செய்திடுகையில், நீங்கள் சற்று முன்பு பயன்படுத்திய புரோகிராம்களின் பட்டியலைக் காணலாம். சென்று வந்த இணைய தளங்களையும் காணலாம்.
டெஸ்க்டாப் எங்கே? சிறிய வண்ண ஓடுகளாகத் திரையில் காட்டப்படுகிறதா? இந்த ஓடுகள் வந்த பின்னர் என்ன செய்திட வேண்டும் எனத் தெரியவில்லையா? விண்டோஸ் பட்டனில் மீண்டும் ஒரு முறை கிளிக் செய்திடுங்கள். ஆஹா! இதோ உங்கள் டெஸ்க்டாப் திரை காட்சி அளிக்கும்.
என் பைல்கள் எங்கே?: விண்டோஸ் 10 நீங்கள் உருவாக்கிய பைல்களை என்ன செய்கிறது? என்ற கேள்விக்கு விடை தெரியவில்லையா? எக்கச் சக்கமாக என் பைல்கள் இருந்தனவே, அவை எல்லாம் எங்கே? கவலைப் பட வேண்டாம். மஞ்சள் வண்ணத்தில் உள்ள கவர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இதுதான், பைல் எக்ஸ்புளோரருக்கான ஐகான் ஆகும். நீங்கள் இதனை விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்று முன்பு அறிந்திருப்பீர்கள். (C:) > Users > Your Name (அல்லது கம்ப்யூட்டர் எந்த பெயரில் அறியப்படுகிறதோ, அந்தப் பெயர்) என்று சென்றால், உங்கள் பழைய பைல்கள் அனைத்தும் இருப்பதனைக் காணலாம்.
இணையம் எப்படி செல்வது?: விண்டோஸ் 10க்கு மாறிக் கொண்டோம். இதில் எப்படி இணைய வெளிக்குச் செல்வது? உங்கள் திரையின் வலதுபுறம் கீழாக, ஒரு சிறிய மேல் நோக்கிய அம்புக் குறி போன்ற வகையில் கேரட் அடையாளம் (^) இருக்கும். இதில் கிளிக் செய்தால், வழக்கமாக நீங்கள் இதுவரை பயன்படுத்தி வந்த, சிஸ்டம் ட்ரேயில் இருந்த ஐகான்கள் காட்டப்படும். இதில் வயர்லெஸ் நெட்வொர்க் போலத் தோற்றமளிக்கும் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். அல்லது கம்ப்யூட்டர் திரை படத்துடன், இடது மேலாக சிறிய கட்டத்துடன் இருக்கும் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் நெட்வொர்க் அமைப்புகள் எல்லாம் காட்டப்படும். இதில் ஏரோபிளேன் நிலை என்ற வகையில் உள்ள செயல்பாட்டிற்கான ஐகானும் காட்டப்படும்.
டெஸ்க்டாப் ஷார்ட் கட் வழிகளை என்னால் உருவாக்க முடியுமா?: நிச்சயமாக உருவாக்க முடியும். நீங்கள் ஷார்ட் கட் கீ தொகுப்பு ஏற்படுத்த விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமினைத் (வேர்ட் போன்றவை) திறந்து கொள்ளுங்கள். கீழாக உள்ள டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Pin to Taskbar என்பதில் கிளிக் செய்திடவும். இனி அது எப்போதும் கீழாக அந்த ஷார்ட் கட் ஐகான் காட்சி அளிக்கும்.
எட்ஜ் பிரவுசர் பிடிக்கவில்லையா?: விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிக முக்கியமான சிறப்பான வசதி, அதனுடன் மாறா நிலையில் தரப்படும் எட்ஜ் (Edge) பிரவுசர் தான். இது முன்பு தரப்பட்ட (இப்போதும் கிடைக்கிற) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைக்
காட்டிலும் பல வகைகளில் சிறப்பானதாகும். இது புதியதாக இருப்பதால், பழைய வேகத்தில் உங்களால் தேடித் தேடி இயக்க முடியாது. எனவே, எட்ஜ் சிறிது காலத்திற்கு வேண்டாம் எனில், அதனுடன், குரோம், பயர்பாக்ஸ் அல்லது ஏதேனும் ஒரு பழைய பிரவுசரையும் வைத்து இயக்கிப் பாருங்கள். இடையே, எட்ஜ் பிரவுசரிலும் இயங்கிப் பார்க்கவும். காலப் போக்கில், எட்ஜ் பிரவுசர் பழகியவுடன், அதனையே இயக்க தொடங்கிவிடுவீர்கள்.


வேர்ட் டிப்ஸ்!-இடைக்கோடுகள்:


இடைக்கோடுகள்: வேர்ட் டாகுமெண்ட்டில், பலவகையான இடைக்கோடுகள் அமைக்கப்படுகின்றன. சாதாரணமாகப் பார்க்கையில் இவை அனைத்தும் ஒரே மாதிரியாகத் தோற்றம் கொண்டுள்ளன. இவற்றிற்கிடையேயான வேறுபாடு அதன் அகலத்தில் உள்ளது. ஒவ்வொன்றும் ஓர் அளவில் அமைந்து, பொருள் தருவதாய் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

 

நாம் மைனஸ் கீயை அழுத்துகையில், மிகக் குறுகலான இடைக்கோடு கிடைக்கிறது. சற்று நீளமான இடைக்கோடு ‘என் டேஷ்’ (en Dash) என அழைக்கப்படுகிறது. இதற்கு இந்தப் பெயர் வரக் காரணம், இந்த வகை இடைக்கோட்டின் அகலமும், என் (n) எழுத்தின் அகலமும் ஒரே அளவில் உள்ளது. இன்னும் சற்று அகலம் கொண்டது எம் டேஷ் (em Dash). மேலே சொன்னது போல, ஆங்கில எழுத்து ‘எம்’ அமையும் அகலத்தில் இதுவும் அமைந்துள்ளது. இதுதான், வாக்கியங்களில், இரு வேறு சொற்றொடர்களுக்கிடையே பயன்படுத்தப்படுகிறது.
என் டேஷ் அமைக்க வேண்டும் என்றால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, நியுமெரிக் கீ பேடில், 0150 என டைப் செய்திட வேண்டும். அதே போல, எம் டேஷ் அமைக்க வேண்டும் என்றால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, நியுமெரிக் கீ பேடில், 0151 என டைப் செய்திட வேண்டும். ஸ்பெஷல் கேரக்டர் எழுத்து குழுவிலும் இவை கிடைக்கும்.
இந்த இடைக்கோடுகளை, வேர்டில் பயன்படுத்துவது போலவே, எக்ஸெல் ஒர்க் ஷீட்டிலும் பயன்படுத்தலாம். எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், மைனஸ் அடையாளம் இல்லாத இடைக்கோடு பயன்படுத்தப்படுகையில், அதனை எக்ஸெல் டெக்ஸ்ட்டாக எடுத்துக் கொண்டு செயல்படும்.

சொற்களை அழிக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் சில சொற்களை நீக்க நினைப்போம். சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சிப்போம். சொற்களை அழிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. நாம் அதிகம் சிரமப்படாமல் இதனை நிறைவேற்ற சில வழிகள் நமக்கு உள்ளன. அவை குறித்து காணலாம்.
ஒரு சிலர், குறிப்பிட்ட சொல்லைத் தேர்ந்தெடுத்து, Delete கீயினை அழுத்தலாம். சிலர் அந்த சொல் அருகே கர்சரைக் கொண்டு சென்று, டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் அழியும் வரை அழுத்தலாம். ஆனால், இதற்கு அதிக நேரமும் முயற்சியும் வேண்டும். இதற்கு ஒரு ஷார்ட் கட் கீ உண்டு என்பதை அறிந்தால், இவர்கள் அதனைப் பயன்படுத்த விருப்பப்படலாம். கர்சரை சொல்லின் முன் வைத்து, கண்ட்ரோல் + டெலீட் (Ctrl+Del) கீகளை அழுத்தினால், கர்சர் எங்கு உள்ளதோ, அதிலிருந்து, சொல்லின் இறுதி வரை உள்ள எழுத்துகள் அனைத்தும் மறையும். எடுத்துக் காட்டாக, கர்சர் இருக்கும் இடத்திலிருந்து வலது புறமாக நான்கு சொற்கள் அழிக்கப்பட வேண்டும் என்றால், கண்ட்ரோல் + டெலீட் கீகளை நான்கு முறை அழுத்த வேண்டும்.
இந்த கீ களை அழிப்பதற்கு மட்டுமல்ல. வேகமாக எடிட் செய்திடவும் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, “sidestep” என்ற சொல்லை “sideways” என மாற்ற வேண்டும் என்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் “step” என்பதை அழித்து, அந்த இடத்தில் “ways” என டைப் செய்திடலாம். இதற்கு டெலீட் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை நான்கு முறை அழுத்த வேண்டியதிருக்கும். ஆனால், இதற்கு இன்னொரு விரைவான வழி உண்டு. “step,” என்ற சொல்லுக்கு முன்னால் கர்சரை வைத்து, கண்ட்ரோல்+டெலீட் ஒருமுறை அழுத்தினால், அந்த சொல் நீங்கிவிடும். பின்னர் “ways” என டைப் செய்துவிடலாம்.
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்:
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies