Lenovo அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
.
மடிக்கணனிகள் உட்பட டேப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் Lenovo நிறுவனம் தற்போது Vibe K5 Plus எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
முதன் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 616 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் Android 5.1 Lollipop இயங்குதளத்தினைக் கொண்ட இக் கைப்பேசியின் விலையானது 126 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய தொழில் நுட்பம்
கூகுள் நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன்களில், இணையத்தின் வேகத்தினை அதிகப்படுத்த, புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை அனைத்து தரப்பினரும், குறிப்பாக ஊடகத்தில் இயங்கும் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. இந்த தொழில் நுட்பத்தின் பெயர் Accelerated Mobile Pages (AMP). இத் தொழில் நுட்பம், மொபைல் போன்களில் உள்ள இணையப் பக்கங்களை, தற்போது கிடைக்கும் வேகத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக வேகத்தில் இணைக்கின்றன. இதற்கெனப் பயன்படுத்தும் டேட்டாவினை, பத்தில்
ஒரு பங்காகக் குறைத்து இந்த கூடுதல் வேகத்தினை இந்த தொழில் நுட்பம் தருகிறது.
கூகுள் இந்தியாவில் தரும் இந்த தொழில் நுட்ப வசதியினை நெட்வொர்க் 18, என்.டி.டி.வி, இந்தியா டுடே, ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் வரவேற்றுள்ளன. ”கூகுளின் இலட்சியமும் நோக்கும், தகவல்களை மக்களுக்கு எளிதாகக் கொண்டு சேர்ப்பதுதான். துரதிருஷ்டவசமாக, இன்றைக்குப் பயனாளர்களுக்குக் கிடைக்கும், மொபைல் வழியிலான இணையம், மக்களுக்குத் தேவைப்படும் தகவல்களை, அவர்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் தருவதில்லை” என கூகுள் நிறுவனத்தின் துணைத்தலைவர் டேவிட் கூறியுள்ளார். புதிய AMP தொழில் நுட்பமானது, வாசகர்களுக்கு, ஒரே மாதிரியான கூடுதல் வேகத்தில் ஊடகங்களின் தகவல்களைக் கொண்டு சேர்க்கும்.
கூகுள் மேற்கொண்ட ஆய்வில், பயனாளர்கள், தாங்கள் எதிர்பார்க்கும் இணைய தளம், மூன்று விநாடிகளில் மொபைல் போன் வழியாகக் கிடைக்கவில்லை என்றால், தங்கள் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, குறிப்பிட்ட இணைய தளத்தினைப் பார்க்கும் முயற்சியையே நிறுத்தி விடுகின்றனர் என்று கண்டறிந்துள்ளனர். இது போன்ற பிரச்னைகளுக்கு AMP தொழில் நுட்பம் முற்றுப் புள்ளி வைக்கிறது. இதனால், பயனாளர்கள், தகவல் தள அமைப்பாளர்கள், இணைய தள விளம்பரதாரர்கள் எனப் பலர் பலன் அடைந்துள்ளனர்.
இந்த AMP தொழில் நுட்பம், சென்ற அக்டோபர் மாதத்தில் அறிமுகமானது. அனைவரிடமும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. பல நிலைகளில், மொபைல் போன் பயன்பாடு, இணையப் பயன்பாட்டினை ஊக்குவிப்பதால், பலர், மொபைல் வழியே தங்களின் முதல் இணையப் பயன்பாட்டினை, அண்மைக் காலங்களில் மேற்கொண்டு வருவதால், இந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு முந்தைய காலத்தில் கிடைத்த, ஏமாற்றத்தினைத் தவிர்க்கிறது. 20 கோடிக்கும் மேலானவர்கள், மொபைல் போன் வழி இணையத்தைப் பயன்படுத்துவதால், 60% க்கும் மேலான பொருட்கள் விற்பனையை மொபைல் போன்களே மேற்கொள்கின்றன. பயணங்கள் சார்ந்த தேடுதல்கள், 50%க்கும் மேலாக, மொபைல் போன்களிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கூகுள் நிறுவனத்தின் யு- ட்யூப் தளம் கூட, அதன் பயனாளர்களில், 60% பேர் மொபைல் வழியாகத்தான் தங்கள் கருத்தினைத் தெரிவித்துள்ளனர். வேலை வாய்ப்புகள் கூட, மொபைல் போன்கள் வழியாகத்தான் பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றன.