வேர்ட் டிப்ஸ்!–எக்ஸெல் டிப்ஸ்!

08 Mar,2016
 

             


திரைக் குறிப்பினை மறைக்க: வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள்.


ADVERTISEMENT


 

அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும்.வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும்.
4. இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எண்களுடன் பட்டியல் அமைக்க: நாம் டாகுமெண்ட்களை வேர்ட் புரோகிராமில் அமைக்கும் போது, எண்களுடன் கூடிய பட்டியல் வரிசைகளை உருவாக்குகிறோம். எடுத்துக் காட்டாக, கட்டுரை ஒன்றை அமைக்கையில், ஒவ்வொரு புதிய தகவலும் ஓர் எண்ணுடன் அமைக்கிறோம். வேர்ட் புரோகிராமில், இந்த செயல்பாடு மிக எளிதாக மேற்கொள்ளும் வகையில் வசதி தரப்பட்டுள்ளது. எண்களுடன் பட்டியல் வரிசை அமைக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.
1. உங்களுடைய பட்டியலை டைப் செய்திடவும். ஒவ்வொரு தகவல் அமைப்பின் முடிவிலும் என்டர் அழுத்தவும். ஒரு குறிப்பிட்ட தகவல், ஒரு வரிக்கும் மேலாக இருந்தால், ஒவ்வொரு வரி முடிவிலும், என்டர் அழுத்த வேண்டாம். அதில் உள்ள டெக்ஸ்ட் தானாக மடக்கப்பட்டு அடுத்த வரிக்கு வருமாறு அமைக்கவும்.
2. இனி, அனைத்து குறிப்புகள் அல்லது தகவல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ரிப்பனில், ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பாராகிராப் குரூப்பில், numbered list என்ற டூலில் கிளிக் செய்திடவும்.
5. இனி தானாக, எண்களுடன் கூடிய பட்டியலாக, உங்கள் தகவல்கள் அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம்.
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்:
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.
Ctrl+g: ஓரிடம் செல்ல.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட.


எக்ஸெல் டிப்ஸ்!


பேஸ்ட் ஆப்ஷன் நீக்க: எக்ஸெல் புரோகிராமில் தரப்படும் ஒரு டூல், சிலருக்கு எரிச்சலைத் தரும் வகையில் செயல்படுவதாகப் பலர் கூறியுள்ளனர். இதனை நிறுத்தத் தெரியாமல், எரிச்சலுடன் பொறுத்துக் கொள்வோரும் உண்டு. அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.
அந்த டூலுக் குப் பெயர் Paste Options. நாம் ஏதாவது ஒரு தகவலை, ஒர்க் ஷீட்டுடன் ஒட்டுகையில், ஒட்டப்பட்ட அந்த தகவலுக்கு அருகே


எக்ஸெல், மிதக்கும் பட்டன் ஒன்றை வலது பக்கம் காட்டுகிறது.
இது டூல் பாரில் உள்ள Paste tool போலக் காட்சி அளிக்கிறது. சின்ன கிளிப் போர்டில், ஒரு சிறிய பேப்பருடன் இந்த டூல் காட்சி தரும். இது தான் Paste Options பட்டன். நம்முடைய மவுஸ் பாய்ண்ட்டரை இதன் மீது சுழற்றினால், அங்கு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே, நீங்கள் ஒட்டிய தகவலை என்னவெல்லாம் செய்திடலாம் என்று சில ஆப்ஷன்கள் தரப்படும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அதில் குறிப்பிட்டுள்ளபடி, ஒட்டப்பட்ட தகவல் மாற்றப்படும்.
இந்த பட்டன் உங்களின் கவனத்தைத் திருப்புவதாக உணர்ந்தால், இதனைத் தோன்றாதபடி செய்துவிடலாம். அதற்கு, கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. Excel Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007 நீங்கள் பயன்படுத்தினால், ஆபீஸ் பட்டன் அழுத்தி, கிடைக்கும் பிரிவுகளில் Excel Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எக்ஸெல் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் File டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் இடதுபுறம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இனி, Cut, Copy, and Paste என்ற பிரிவில், Show Paste Options Buttons என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை நீக்கிவிடவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எக்ஸெல் ஸ்குரோலிங்: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது? மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். உங்களுக்கு வியப்பு! என்ன நடக்கிறது இங்கு? ஏறத்தாழ 100 வரிசைகள் தாண்டி நான் இருந்தேனே? எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் என்று தானே வியக்கிறீர்கள். புரோகிராம் ஏன் இப்படி தவறுதலாகச் செயல்படுகிறது? அதுதான் இல்லை. நீங்கள் ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப் பயன்படுத்தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி தான் மாறுகிறது. புதிய செல்களுக்கு நீங்கள் செல்லவில்லை. எனவே நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கிறது.
எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற இடத்திலிருந்து உடனடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஸ்குரோல் செய்து அடைந்த இடத்திற்கு உங்கள் கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய்திட வேண்டும். இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான்.
ஒரு செல்லில் தகவல் இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என்டர் செய்து சென்றால் எங்கு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பது மறந்துவிடும் அல்லவா? எனவே ஸ்குரோல் செய்து சுழன்று சென்று பின் மீண்டும் செயல்படும் செல்லுக்கே வரலாமே.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies