மக்களில், 30% பேர் பாதுகாப்பற்ற பிரவுசர்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
16 Feb,2016
பாதுகாப்பற்ற பிரவுசர் ஏன்?
இணையத் தேடல்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ‘நெட்மார்க்கட் ஷேர்’ என்ற அமைப்பு, சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
இணைய வெளியில் உலாவும் மக்களில், 30% பேர் பாதுகாப்பற்ற பிரவுசர்களையே பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பு உள்ள இன்டர்நெட் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 ஐ, 25.7% மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பினை இழந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஐ, ஏறத்தாழ 9% பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதே போல, பாதுகாப்பில்லாத இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஐ, ஏறத்தாழ 7% பேரும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 ஐ 4% பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.
விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட்ட எட்ஜ் பிரவுசரை, 2% பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இது பாதுகாப்பானது மட்டுமின்றி, வேகமாக இயங்குவதும் கூட.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசராக இல்லாதவற்றில், குரோம் பிரவுசரை 21% பேர் பயன்படுத்துகின்றனர். பயர்பாக்ஸ் பிரவுசரை 9% பேரும், சபாரி பிரவுசரை 3% பேரும் தங்கள் பிரவுசராக அமைத்துள்ளனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 ஐ, இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அதற்கான இணைய தள முகவரி http://windows.microsoft.com/en-us/internet-explorer/download-ie.