விண்டோஸ்10 பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவல்
.
விண்டோஸ் 10 தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் புதிய இணையப்பக்கத்தை மைக்ரோசோப்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் கணணிகளுக்கான மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக திகழ்ந்துவருகிறது.
இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான விண்டோஸ் 10 இயங்குதளம் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் விண்டோஸ்10 இயங்குதளம் குறித்த புதிய மேம்படுத்தல்கள், தகவல்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் வழங்க மைக்ரோசோப்ட் நிறுவனம் முடிவு செய்திருந்தது.
தற்போது இதற்காக புதிய இணையப்பக்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த பக்கத்தில் விண்டோஸ்10 குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.
மேலும் அங்கீகாரம், மேம்படுத்தல்களை நிறுவுதல், மற்றும் இயங்குதளத்தை நிறுவுதல் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மைக்ரோசோப்ட் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, எங்கள் வாடிக்கையாளர்களையும் அவர்களின் கருத்துகளையும் இணைப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இதன் காரணமாக விண்டோஸ்10 மேம்படுத்தல் குறித்த பல்வேறு தகவல்களை விண்டோஸ் மேம்படுத்தல் பக்கத்தில் தெரிவிக்கவுள்ளோம்.
எனவே மேம்படுத்தல் போன்ற முக்கிய தகவல்களின் சுறுக்கங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் முழு தகவலையும் அறிந்துகொள்ளலாம்.
மேம்படுத்தல் குறித்த புதிய அறிவிப்புகள் வெளியாகும் போதெல்லாம் இந்த பக்கம் புதுப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆண்ட்ராய்ட் போனில் புதிய சொற்களை இணைக்க
நம்முடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனில், பல பெயர்கள், சுருக்குச் சொற்கள் (acronyms) மற்றும் நாமாக உருவாக்கும் சொற்களை டைப் செய்திடுவோம். இவற்றை எழுத்துப் பிழைகள் கொண்ட சொற்களாக, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் எடுத்துக் கொண்டு, அவற்றைத் திருத்த முயற்சி எடுக்கும். அப்போது நமக்கு எரிச்சலாக இருக்கும். இவற்றை எல்லாம் நம்முடைய custom words and phrases ஆக, போனில் உள்ள அகராதியில் சேர்த்துவிட்டால், இந்த எரிச்சல் தரும் திருத்தும் முயற்சி மேற்கொள்ளப்படாது. இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
மிக எளிதான வழி, கீ போர்டில் இருந்தே இவற்றை இணைப்பதாகும். எடுத்துக் காட்டாக, ஜிமெயில் அப்ளிகேஷனில் நீங்கள் ஒரு மெயிலை டைப் செய்வதாக வைத்துக் கொள்வோம். அகராதியில் இல்லாத சொல் ஒன்றை நீங்கள் டைப் செய்கையில், அதனை அடுத்து ஒரு ஸ்பேஸ் விட்டவுடன், அந்த சொல் தவறு என்று, சொல்லின் கீழாக சிகப்பு வண்ணத்தில் அடிக்கோடு காட்டப்படும். எந்த சொல்லை, அகராதியில் இணைக்க வேண்டுமோ, அதில் இருமுறை டேப் செய்திடவும். டூல் பார் ஒன்று, பல ஆப்ஷன்களுடன் காட்டப்படும். அதில் “Replace” என்பதில் டேப் செய்திடவும். பின்னர், கிடைக்கும் பாப் அப் மெனுவில் “Add to dictionary” என்பதில் டேப் செய்திடவும். இப்போது “Add to dictionary” டயலாக் பாக்ஸ் காட்டப்படும். நீங்கள் விருப்பப்பட்டால், குறிப்பிட்ட சொல்லில், ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ள விருப்பப்பட்டால், அதனை மாற்றவும். பின்னர், ஓகே கிளிக் செய்திட்டால், அந்த சொல் அகராதியில் சேர்க்கப்பட்டு, அடுத்த முறை அதனை டைப் செய்திடுகையில் அது தவறான சொல்லாகக் காட்டப்பட மாட்டாது.
செட்டிங்ஸ் அமைப்பின் வழி மாற்றுதல்: நீங்கள், இது போல கீ போர்ட் வழி மாற்ற முடியாத, ஏதேனும் அப்ளிகேஷன் ஒன்றில் செயல் பட்டால், மேலே சொன்ன வழியில், சொல்லை இணைக்க முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை மொத்தமாகவும் இணைக்க முடியாது. இதற்கு “Settings” பயன்படுத்தி, சொற்களை இணைக்கலாம். இதற்கு, முதலில் திரையின் மேலிருந்து ஸ்வைப் செய்து, செட்டிங்ஸ் ஐகான் மீது டேப் செய்திடவும். இங்கு “Personal” என்ற பிரிவில், “Language & input” என்பதில் டேப் செய்திடவும். இந்த “Language & input” பிரிவில், குறிப்பில் உள்ள மொழியின் பெயரைக் காணவும். இங்கு “English (United States)” என்று இருக்கும். இதில் “Personal dictionary” என்பதில் டேப் செய்திடவும். இந்த திரையில், “Language & input” என்பதில் நீங்கள் கண்ட மொழியில் டேப் செய்திடவும். “Personal dictionary” நீங்கள் ஏதேனும் சொல்லை இதுவரை இணைக்காமல் இருந்தாலும், சொல்லை இணைக்கவா என்ற செய்தி தரப்படும். மேல் வலது மூலையில் உள்ள “+ Add என்பதில் டேப் செய்திடவும். “Type a word” என்று முதல் வரியில் இருப்பதில் டேப் செய்திடவும். இங்கு நீங்கள் இணைக்க வேண்டிய, இதுவரை அகராதியில் இல்லாத சொல்லை டைப் செய்திடவும். நீங்கள் விரும்பும் சொல், முற்றிலும் புதிய மற்றும் வழக்கில் இல்லாத சொல்லை டைப் செய்திடுங்கள். உடன் பின் செல்லும் (back) பட்டனை அழுத்துங்கள். இந்த சொல் அகராதிக்குச் சென்று விடும். இந்த சொல், இனி அந்த மொபைல் போனில் என்றும் திருத்தப்பட மாட்டாது.
இந்த தனிப்பட்ட அகராதியிலிருந்து (“Personal dictionary”) ஒரு சொல்லை நீக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த பட்டியலில் உள்ள அந்த சொல்லில் ஒருமுறை விரலால் அழுத்தவும்(டேப்). பின்னர் திரையில், வலது மேலாக உள்ள “Delete” என்பதில் ஒருமுறை தட்டவும். இவ்வாறு நீக்கப்பட்ட பின்னரும், கூகுள் நினைவில் அந்த சொல் இருக்கும். நீங்கள் அதனை டைப் செய்திட முயற்சிக்கையில், கூகுள் கீ போர்டில் மேலாகச் சொற்கள் திருத்தப்படும் பட்டையில், இந்த சொல் காட்டப்படும். எனவே, ஒரு முறை நீங்கள் கூகுள் மெமரியில் கொண்டு சென்றுவிட்டால், அது காட்டப்படாமல் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், திருத்தப்படும் முயற்சியில் கூகுள் இறங்காது. ஆனால், நாமாக, கூகுள் தரும் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் குறிப்பு: போனஸாக இன்னும் ஒரு குறிப்பு தருகிறேன். வேகமாக டைப் செய்திட நாம் இந்த தனிப்பட்ட அகராதிக்கு குறுக்கு (ஷார்ட் கட்) வழிகளை அமைக்கலாம். ஏதேனும் ஒரு நீண்ட சொல்லை அல்லது சொல் தொகுதியை நீங்கள் அடிக்கடி டைப் செய்திட வேண்டியதிருந்தால், அதன் பிரதிநிதி போல, ஓரிரு எழுத்துகள் அடங்கிய சொல்லை அதற்கான குறுக்கு வழியாக அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, “Department of Education” என்ற சொற்கள் அடங்கிய தொகுதியை நீங்கள் அடிக்கடி டைப் செய்திட வேண்டியதிருந்தால், என்ன செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம்.
இதற்கு “Optional shortcut” என்ற வரியில் ஒருமுறை தட்டவும். இங்கு நீங்கள் முடிவு செய்திடும் ஷார்ட் கட் சொல்லை அமைக்கவும். அது “doe” ஆக வைத்து, அதனை டைப் செய்திடவும். இதனை டைப் செய்தவுடன், பின் நோக்கிச் செல்வதற்கான அம்புக் குறி பட்டனைத் தட்டவும். இது நாம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, முந்தைய திரைக்கு வந்துவிடும். நாம் விரும்பும் நீண்ட சொல் தொகுதி பட்டியலில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்கான ஷார்ட் கட், அந்த சொல் அல்லது சொல் தொகுதியின் கீழாக அமைக்கப்படும். பின், நீங்கள் எப்போதெல்லாம் doe என டைப் செய்கிறீர்களோ, அப்போது, அதற்கான முழு சொல் தொகுதி என நீங்கள் அமைத்த “Department of Education” காட்டப்படும். காட்டப்படும் சொல் தொகுதியில் நீங்கள் தட்டினால், இதனை நீங்கள் ஏற்றுக் கொண்டு அதற்கான பட்டனை அழுத்தினால், உடன் இந்த நீண்ட சொல் தொகுதி டெக்ஸ்ட்டில் அமைக்கப்படும். இது நீங்கள் எந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தினாலும் கிடைக்கும்.
ஆனால், நீங்கள் ஏதேனும் ஒரு தர்ட் பார்ட்டி கீ போர்டினைப் பயன்படுத்தினால், (Sellinam, Swype அல்லது Swiftkey போன்றவை), அதிலும் இந்த வசதி இருக்கும். ஆனால், அமைக்கும் முறை மாறுபடலாம். அதனை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.