விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மக்களிடையே பரவலாகப் புகழ் பெறுகிறதோ இல்லையோ, வைரஸ் உருவாக்கும் ஹேக்கர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் இணைந்து தரப்படும் எட்ஜ் பிரவுசரை, மால்வேர் செயலிகளைத் தயாரித்து அனுப்பும் குழு ஒன்று தாக்கியுள்ளது. Dyreza அல்லது Dyre என்ற பெயர் கொண்ட ட்ரோஜன் வைரஸ் ஒன்று, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இலக்காகக் கொண்டு அனுப்பப்பட்டு பரவி வருகிறது. Heimdal Security என்னும் நிறுவனம் தெரிவித்தபடி, இந்த வைரஸின் கூடுதல் வடிவம் ஒன்றும் வேகமாக, விண்டோஸ் 10 இயங்கும் கம்ப்யூட்டர்களைப் பற்றி வருகிறதாம்.
ADVERTISEMENT
இந்த மால்வேர் புரோகிராம், தகவல்களைத் திருடி அனுப்புகிறது. பாதுகாப்பு தரும் சாப்ட்வேர் புரோகிராம்களை இலக்காக்கி திறன் இழக்கச் செய்கிறது. இதன் மூலம், கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் வேகமாக இதனால் நுழைய முடிகிறது. Heimdal Security நிறுவனத்தின் அறிக்கையின்படி, இதுவரை, 80 ஆயிரம் விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்களில் இந்த மால்வேர் வைரஸ் பரவி உள்ளது. Upatre என்ற டவுண்லோடிங் புரோகிராம் மூலம், இது கம்ப்யூட்டருக்குள் பரவியதும் கண்டறியப்பட்டுள்ளது.
பன்னாட்டளவில், விண்டோஸ் 10 பயன்படுத்துபவர்கள், 8% மட்டுமே என்பதால், இந்த மால்வேர் புரோகிராமினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இதுவரை பரவவில்லை. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டவர்களை, இது சற்று தாமதப்படுத்த வைக்கும் என்று பலரும் கருதுகின்றனர்.
ஷிப்ட், ஆல்ட், கண்ட்ரோல் கீகளை கேப்ஸ் லாக் கீ போல அமைக்க
விண்டோஸ் சிஸ்டத்தில் டாகிள் கீ (Toggle Key) என ஒரு பயன்பாடு உள்ளது. கீ ஒன்றை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஒரு பயன்பாடும், மீண்டும் அதனை அழுத்தினால், முன்பிருந்த பயன்பாடும் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேப்ஸ் லாக் கீயினைச் சொல்லலாம். இதனை ஒருமுறை அழுத்திவிட்டால், தொடர்ந்து ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாகவே கிடைக்கும். மீண்டும் அழுத்தி விட்டால், வழக்கம் போல சிறிய எழுத்துகள் கிடைக்கும். குறிப்பிட்டபடி செட் செய்தால், இதனை அழுத்தும் போதும், நீக்கும் போதும், வேறுபாடான ஒலி எழுப்பி, சிஸ்டம் நம்மை எச்சரிக்கும்.
ஒரு சிலர், ஏன் இதனை மற்ற கீகளிலும் செயல்படும்படி செய்யக் கூடாது. குறிப்பாக, ஷிப்ட், ஆல்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளை அமைக்க முடியுமா? என்று கேட்கின்றனர். இந்த கீகளை இவ்வாறு அமைப்பது, சீரான பயன்பாட்டினைத் தரும் செயலாக இருக்க முடியாது. இருப்பினும், எப்படி இவற்றை டாகிள் கீகளாக அமைக்க முடியும் எனப் பார்க்கலாம்.
விண்டோஸ் அமைப்பில் ஸ்டிக்கி கீ (Sticky Keys) என்று ஒரு அமைப்பு உண்டு. இதனை இயக்கித்தான் கீ பயன்பாட்டினை டாகிள் கீயாக அமைக்கலாம்.
ஸ்டிக்கி கீ பயன்பாட்டினை எப்படி செயல்பாட்டிற்குக் கொண்டு வருவது எனப் பார்க்கலாம். முதலில் கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். இது Classic View வில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து கண்ட்ரோல் பேனல் ஐகான்களும் காட்டப்படுகின்றனவா என்று பார்க்கவும். இந்த வியூவில் இல்லை என்றால், கண்ட்ரோல் பேனலின் இடது பக்கப் பிரிவில் சென்று, Switch to Classic View என்ற டேப்பினை அழுத்தி, இந்த வியூவிற்குக் கொண்டு வரவும்.
அடுத்து Accessibility என்பதனைத் திறக்கவும். இப்போது Accessibility ஆப்ஷன்ஸ் என்ற டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இனி கீ போர்ட் டேப்பில் அழுத்தி, Use Sticky Keyss என்ற செக் பாக்ஸினைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Settings. என்ற இடம் பெற S என்பதனை அழுத்தவும். ஸ்டிக்கி கீ டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். அந்த டயலாக் பாக்ஸில் கீழ்க்கண்ட வசதிகள் தரப்பட்டிருக்கும்.
Use shortcut செக் பாக்ஸ் கிடைக்க U அழுத்தவும். இதனை அழுத்திவிட்டால், ஷிப்ட் கீயை ஐந்து முறை அழுத்தி, ஸ்டிக்கி கீஸ் இயக்கத்தினைத் தொடங்கவும் நிறுத்தவும் இயலும்.
P அழுத்தினால், Press modifier key யை இருமுறை அழுத்த செக் பாக்ஸ் லாக் செய்யப்படும். இதன் மூலம், செயல்பாட்டினை மாற்றும் கீயை (Shift, Ctrl, Alt, orWin) நாம் லாக் செய்திட முடியும். இந்த கீகளை இருமுறை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் இந்த செயல்பாடு நடைமுறைக்கு வரும்.
T கீ அழுத்தினால், Turn Sticky Keys off if two keys are pressed at once செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படும். இதன் மூலம், ஸ்டிக்கி கீகளின் இயக்கத்தினை நிறுத்த முடியும். மாற்று பயன்பாடு தரும் கீகளான Shift, Ctrl, Alt, அல்லது Win key கீகளில் ஒன்றுடன், இன்னொரு கீயுடன் சேர்த்து அழுத்துகையில், ஸ்டிக்கி கீ இயக்கம் நிறுத்தப்படும்.
M கீ அழுத்த, Make sounds when modifier key is pressed என்ற செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படும். மாற்று செயல்பாட்டினைத் தரும் மாடிபையர் கீ, (Shift, Ctrl, Alt, அல்லது Win key கீ) இயக்கத்தைத் தொடங்கவோ, அல்லது நிறுத்தவோ அழுத்தப்படுகையில், ஒலி ஒன்று எழுப்பப்படும். தொடங்கும்போது ஒரு வகை ஒலியும், செயல்பாடு நீக்கப்படும்போது இன்னொரு வகை ஒலியும் எழுப்பப்படும்.
S என்ற கீ அழுத்த, Show Sticky Keys status on screen என்ற செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படும். ஸ்டிக்கி கீ செயல்பாடு இயக்கத்தில் இருக்கையில், ஸ்டிக்கி கீஸ் ஐகான் டாஸ்க் பாரில் காட்டப்படும்.