வேர்ட் டிப்ஸ்!-க்ளவ்ட் கம்ப்யூட்டிங்

26 Dec,2015
 

             

ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: ஒரு வாசகர், தான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களை “text highlight color” பயன்படுத்தி, ஹைலைட் செய்துள்ளதாகவும், பின்னர், அதே சொற்களை, ஹைலைட் எடுத்துவிட்டு, அடிக்கோடுடன் அமைத்து மாற்றும் வேலையை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் எழுதி உள்ளார். தொடர்ந்து டெக்ஸ்ட் எழுத்தின் அளவையும் மாற்ற வேண்டும் என்றும், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள இயலுமா? எனக் கேட்டுள்ளார். இவருக்கான பதிலை அனைவரும்

 

படிக்கும் வகையில் டிப்ஸாக இங்கு தருகிறேன்.
இவர் விரும்பும் அனைத்து மாற்றங்களையும் மேற்கொள்ள Find and Replace டூல் மிக உதவியாக இருக்கும். கீழே தந்துள்ளபடி செயல்பட வேண்டும்.
1. முதலில் Ctrl+H அழுத்தவும். இப்போது Find and Replace பாக்ஸில், Replace டேப் அழுத்தப்பட்டு திறக்கப்படும் வகையில் காட்டப்படும்.
2. தொடர்ந்து More பட்டன் இருந்தால், அதனை அழுத்தவும்.
3. இப்போது, கர்சர், Find What என்ற காலியான பெட்டியில், துடித்துக் கொண்டிருக்கும்.
4. தொடர்ந்து No Formatting என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Format பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் அதில் Highlight என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
6. இப்போது “Highlight” என்ற சொல், Find What என்ற பெட்டியில் காட்டப்படும்.
7. தொடர்ந்து Replace With என்ற பாக்ஸில் கிளிக் செய்திடவும். அந்த பெட்டி காலியாக இருப்பதனை உறுதி செய்திடவும்.
8. அடுத்து Format கிளிக் செய்து, Highlight என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Highlight” என்ற சொல், Replace With பாக்ஸில் கீழாக இருக்கும்.
9. Format பட்டன் கிளிக் செய்து, Highlight என்பதை இரண்டாவதாகத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Highlight” என்ற சொல் “Not Highlight” என மாறியிருக்கும்.
10. மீண்டும் Format பட்டன் அழுத்தி, தொடர்ந்து Font என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
11. வேர்ட் Replace Font டயலாக் பாக்ஸில், Font என்பதைக் காட்டும்.
12. இந்த டயலாக் பாக்ஸில், கண்ட்ரோல் கீகளை அழுத்தி, எழுத்தின் அளவை நிர்ணயிக்கவும். அதே போல அடிக்கோடிட ‘Underline’ என்பதையும் தேர்ந்தெடுக்கவும்.
13. ஓகே கிளிக் செய்து Replace Font டயலாக் பாக்ஸை மூடவும்.
14. அடுத்து Replace All என்பதில் கிளிக் செய்திடவும்.
மேலே சொல்லப்பட்ட செயல்பாடுகளில், உங்கள் வேர்ட் தொகுப்பினைப் பொறுத்து, சில மாறுதலான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கலாம்.
டாகுமெண்ட் எடிட் செய்யப்படும் நேரம்: வேர்ட் புரோகிராம், ஒரு பைலில் நீங்கள் எவ்வளவு நேரம் அதனை எடிட் செய்திட எடுத்துக் கொள்கிறீர்கள் என்று தொடர்ந்து கணக்கிட்டுக் கொண்டே இருக்கும். இதனை நீங்கள் அறிய வேண்டுமானால், டாகுமெண்ட் பைல் பெயரில், ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Statistics கிளிக் செய்தால், இந்த நேர விபரம் அறியலாம். இந்த நேரத்தை, அந்த டாகுமெண்ட்டில், அவ்வப்போது ஒரு எடிட்டிங் முடியும்போது, பதிவு செய்திட எண்ணினால், அதனையும் மேற்கொள்ள வேர்ட் வழி தருகிறது.
கீழ்க்காணும் செயல்முறைகளைக் கையாளவும்.
1. கர்சரை டாகுமெண்ட்டில் எந்த இடத்தில் நேரத்தைப் பதிவு செய்திட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த இடத்தில் நிறுத்தவும்
2. ரிப்பனில் Insert டேப் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து டெக்ஸ்ட் குரூப்பில் (Text Group) Quick Parts டூல் என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Fields என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Categories பட்டியலில் Date and Time என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. கிடைக்கின்ற பீல்ட் வகைகளில் EditTime என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
6. பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேக்ளவ்ட் கம்ப்யூட்டிங்

க்ளவ்ட் கம்ப்யூட்டிங்

கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் இப்போது மிக எளிதாகப் பேசப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் “க்ளவ்ட் கம்ப்யூட்டிங்” (Cloud Computing) என்பதாகும். ஆனால், ஒரு சிலரோ, இதனைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது? இது எதற்கு? நம் கட்டுப்பாட்டில் இல்லாத டேட்டா நமக்கு எப்போதும் கிடைக்குமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இதன் தொடர்பாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? என்ற கேள்விகளும் எழுகின்றன. அவை குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.



க்ளவ்ட் அறிமுகம்: cloud computing என்பது 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப சொற்றொடராக இருந்தாலும், 1950 ஆம் ஆண்டிலேயே, இதன் வேர்கள் தென்பட்டன. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்களும், அதனுடன் இணைக்கப்பட்ட டெர்மினல்களையும் சற்று எண்ணிப் பார்த்தால், அன்றே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தொடங்கிவிட்டதனை அறியலாம். மெயின்பிரேம் சர்வருக்கும், அதன் டெர்மினல்களுக்குமான இன்றைய தொலைவு தான் மிக அதிகமாகி உள்ளது.
க்ளவ்ட் என்பது பல்வேறு கம்ப்யூட்டர்கள், மொத்தமாக இணைக்கப்பட்டு ஒரே ஒரு சிஸ்டத்தால் இயக்கப்படுவதாகும். க்ளவ்ட் என்பது எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளை (data storage, content delivery, or applications) வழங்கும் சாதனமாகும். இவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கம்ப்யூட்டிங் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதாவது, பயனாளர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்துகையில், எந்தவிதமான செட் அப் பணிகளையோ அல்லது க்ளவ்ட் சாதனத்தினை பராமரிக்கும் பணியினையோ மேற்கொள்ள வேண்டியதில்லை.
சரி, க்ளவ்ட் என்று ஏன் இதற்குப் பெயரிட்டனர்? யாருக்கும் இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லை. பல கம்ப்யூட்டர்கள் இணைப்பினை தூரத்திலிருந்து பார்க்கும் போது, அவை அனைத்தும் சேர்ந்து ஒரு மேகக் கூட்டமாகத் தானே தெரியும். கூட்டமாகப் பறக்கும் வெட்டுக் கிளிகள் அல்லது வெளவால்களை எண்ணிப் பார்த்தால், இது புரியும். அதே கற்பனையைக் கம்ப்யூட்டர்களுக்கும் செலுத்திப் பார்த்தால், நாம் ஏன் இதனை ‘க்ளவ்ட்’ என அழைக்கிறோம் என்பதுவும் புரியும்.
க்ளவ்ட் சாதனங்களின் அமைப்பினை இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. ஆயத்தப்படுத்தல் (Deployment) 2. சேவை தருதல் (service).
முதல் வகையில் இயங்கும் க்ளவ்ட் அமைப்பினை இன்னும் சில பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அவை, 1. தன் பணிக்கான க்ளவ்ட் (Private cloud) இது ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு மட்டும் பயன்படும் வகையில் அமைக்கப்படுவதாகும். இதனை இவர்கள் இருக்கும் இடத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்பதில்லை. தூர இடங்களிலும் வைத்து இயக்கலாம். இந்த க்ளவ்ட் சேவையை, பயன்படுத்துபவர் அல்லது நிறுவனமே இயக்கலாம்; அல்லது இவர் சாராத ஒருவர் அல்லது நிறுவனம், இவர்களுக்காக அமைத்து இயக்கலாம்.
1. பொதுவான க்ளவ்ட்: பொது க்ளவ்ட் சேவை பொதுவான எவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகின்றன. முதலில் சொல்லப்பட்ட தனி நபர் க்ளவ்ட் அமைப்பிற்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. பயனாளர்கள் யார் என்பதில் மட்டுமே வேறுபாடு உண்டு.
2. கலப்பான க்ளவ்ட் இயக்கம் (Hybrid Cloud): ஒரு க்ளவ்ட் தனிநபர் மற்றும் பொதுவான எவருக்கும் என இரண்டு வகையினருக்கும் தன் சேவையினை வழங்குகையில் அது Hybrid Cloud என அழைக்கப்படுகிறது. இரண்டு க்ளவ்ட் சர்வர்கள் இணைந்து சேவைகளை, இரண்டு வகையினருக்கும் வழங்க முன்வரும்போதும், இதே பெயரில் அது அழைக்கப்படுகிறது. ஒருவர் தனக்கென ஒரு க்ளவ்ட் சர்வரை அமைத்துப் பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் பயன்படுத்த அனுமதித்தால், அது Hybrid Cloud என அழைக்கப்படும்.
3. சமுதாய க்ளவ்ட் (Community Cloud): தனிப்பட்ட க்ளவ்ட் சர்வர் ஒன்று, பல நிறுவன்ங்களால், பல தரப்பட்டவர்களால் பயன்படுத்தப்படும்போது, அது Community Cloud என அழைக்கப்படுகிறது. வேறு கோணத்தில் பார்க்கையில், ப்ரைவேட் க்ளவ்ட் பொதுவான ஒன்றாகவும் சேவை தரும் ஒரு அமைப்பாகக் கருதப்படும்.
சேவைகள் என்ற வகையில் இவை மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. தற்போது க்ளவ்ட் சேவைப் பணிகள் பலவாறாக மேற்கொள்ளப்படுவதால், இந்த பிரிவுகளும் பல வகைகளாகக் காட்டப்படுகின்றன. அவை,
1. அடிப்படைக் கட்டமைப்பு சேவை (Infrastructure- as -a -Service (IaaS)): ஒரு க்ளவ்ட் சேவையில் சர்வர் ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் அலைவரிசை அல்லது லோட் பேலன்சிங் போன்ற சேவைகள் வழங்கப்படுகையில், அது அடிப்படைக் கட்டமைப்பு சேவை என அழைக்கப்படுகிறது. அமேஸான் நிறுவனம் வழங்கும் இணைய தள சேவை இதற்கான ஓர் எடுத்துக் காட்டு.
2. சாப்ட்வேர் கட்டமைப்பு சேவை (PaaS -= Platform- as -a -Service): ஒரு க்ளவ்ட் சர்வர், அதன் பயனாளர்களுக்கு சாப்ட்வேர் தொகுப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான சூழ்நிலையை, தேவையான மென்பொருட்களைத் தந்தால், அது ஓர் மேடைக் கட்டமைப்பினைத் தருவதற்கு ஒப்பாகும். இதனால், மென்பொருட்களைத் தயார் செய்பவர், அதற்குத் தேவையான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அமைப்புகளை வாங்கி, தங்களது கம்ப்யூட்டர்களில் அமைத்துப் பயன்படுத்த வேண்டியதில்லை. இதற்கான ஓர் எடுத்துக் காட்டு Force.com
3. சாப்ட்வேர் சேவை (Software as a -Service (SaaS)): அப்ளிகேஷன்கள் மற்றும் புரோகிராம்களைத் தன்னகத்தே கொண்டு, அவற்றைத் தேவைப்படும் பயனாளர்கள் அணுகிப் பெற்றுப் பயன்படுத்தும் சேவையை வழங்கும் க்ளவ்ட் சேவை இந்தப் பிரிவில் வரும். Gmail, Basecamp, and Netflix ஆகியவை இதற்கான எடுத்துக் காட்டுகளாகும்.
க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பணிகளின் எதிர்காலம்: மேலே சொல்லப்பட்ட க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிகள் மற்றும் எடுத்துக் காட்டுக்களையும் பார்க்கையில், வரும் எதிர்காலத்தில் இவை இல்லாமல் இயங்க முடியாது என்பது உறுதி. மொபைல் அப்ளிகேஷன்கள், தங்கள் பேக் அப் பைல்களை, க்ளவ்ட் ஸ்டோரேஜில் தான் வைத்துப் பாதுகாக்கின்றன. ட்ராப் பாக்ஸ், கூகுள் ட்ரைவ் மற்றும் இது போன்ற க்ளவ்ட் சர்வர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். அமேஸான், யு ட்யூப் போன்றவை க்ளவ்ட் கட்டமைப்பு சேவைக்கு அடையாளங்களாகும். க்ளவ்ட் இல்லை என்றால், இன்றைக்கு நாம் அனைவரும் பயன்படுத்தும் பாதிக்கு மேற்பட்ட இணைய அப்ளிகேஷன்களை இழக்க வேண்டியதிருக்கும். அப்படியானால், இவற்றின் எதிர்காலப் பணிகளும், அவற்றிற்கான இடங்களும் எப்படி இருக்கும்?
இதில் உள்ள அபாயம் என்ன? க்ளவ்ட் ஸ்டோரேஜ் பயனாளர் அனைவருக்கும், அதில் அவர்கள் சேவ் செய்துள்ள டேட்டாவிற்கு அணுக்கத்தினைத் தருகிறது. பயனாளர்களின் கம்ப்யூட்டர்களின் இயக்கம் முடங்கிப் போனாலும், வேறு கம்ப்யூட்டர்கள் அல்லது பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் இருந்து கூட இவற்றை இயக்கலாம். ஆனால், நாம் க்ளவ்ட் ஸ்டோரேஜ் சேவையைத் தரும் நிறுவனத்தை நம்பி, அனைத்து டேட்டாக்களையும் தருகிறோம். இது என்றைக்கும் அபாயம் தான் என்று பலரும் கருதுகின்றனர். இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், க்ளவ்ட் சர்வர்கள் புதிய தொழில் நுட்பத்தினை உருவாக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையைப் பின்பற்றுவார்கள்.
அனைத்துமே இணையமாய்: இனி வருங்காலம், நமக்கு அனைத்துமே இணையம் தான் என்ற சூழ்நிலையை உருவாக்கும். நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும், கம்ப்யூட்டர் மட்டுமின்றி, டி.வி., மியூசிக் பாக்ஸ், மைக்ரோ ஓவன் அடுப்பு, ஏ.சி. மின் சாதனங்கள் என அனைத்தும் க்ளவ்ட் சர்வர்களுடன் இணைக்கப்பட்டு, நாம் எங்கு சென்றாலும், அவற்றை இயக்கும் வகையிலான ஒரு சூழ்நிலை கிடைத்தால் எப்படி இருக்கும்? எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. க்ளவ்ட் சர்வர்கள் நம்மைச் சுற்றி அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து நாம் சேவைகளை மேற்கொள்வோம். இன்றைய தொலைபேசி இணைப்பகங்களைப் போல, நம் அருகிலேயே அவை அமைக்கப்படலாம். அதன் மூலம் நம் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகலாம். வாழ்க்கை தரம் உயரலாம்.
றவும்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies