எந்தவொரு பாகத்திற்கும் 4 மணி நேரத்தில் பயணிக்கும் விமானம்
நான்கு மணி நேரத்தில் உலகின் எந்தவொரு பாகத்திற்கும் சென்றடையக்கூடிய விமானத் தயாரிப்பில் ஐக்கிய இராச்சியம் பெரும் முதலீடு ஒன்றினை செய்துள்ளது.
Skylon எனும் இந்த விமானத்தின் வடிவமைப்பு 2020 ஆம் ஆண்டில் பூரணப்படுத்தப்பட்டு பரீட்சிப்பில் ஈடுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலியை விட 25 மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் வல்லமையை உடையதாக இருக்கக்கூடிய இந்த விமானத்தின் இயந்திரம் தற்போது உள்ள சாதாரண விமானங்களில் இயந்திரத்திலும்
100 மடங்கு வேகம் குறைவானதாகவும், இதில் உள்ளடக்கப்படும் குளிரூட்டல் முறைமையின் ஊடாக வெப்பநிலையை 1/100 செக்கன்டுகளில் 1,000 டிகிரி செல்சியசிலிருந்து 150 டிகிரி செல்சியசிற்கு குறைக்கக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேர்ட் டிப்ஸ்ஸ.டேபிள் பிரிக்க
டேபிள் பிரிக்க: வேர்ட் செயலியில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பெரிய அளவில் டேபிள் ஒன்றை முதலில் உருவாக்குவோம். பின்னர், அதனைப் பிரித்து அமைக்க விரும்புவோம். இதனை மேற்கொள்ள சிலர், காப்பி, கட், எடிட், பேஸ்ட் எனச் சுற்றிச் செல்வார்கள். நேரம் வீணாகும். இதற்கு வேர்ட் டேபிள் எடிட்டர் என்ற டூலைத் தருகிறது. டேபிள் எடிட்டர் என்ற டூலைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ளலாம். வேர்ட் 2007ல், இது தரப்பட்டுள்ளது. இதன் வழியாக, நீங்கள் உங்கள் டேட்டாவினை, அழகான, வசதியான டேபிளில் அமைக்கலாம். அந்த தேவையினை நிறைவேற்றும் வழி முறைகளைப் பார்க்கலாம்.
1. எந்த படுக்கை வரிசையிலிருந்து டேபிளைப் பிரித்து, அதனை முதல் வரிசையாக அமைக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. அடுத்து ரிப்பனில் Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். டேபிளின் உள்ளாக உங்கள் கர்சர் இருந்தால் தான், இந்த டேப்பினைப் பார்க்கலாம்.
3. அடுத்து Merge group குரூப் உள்ளாக உள்ள Split Table டூலைக் கிளிக் செய்திடவும்.
4. உடன் வேர்ட், சாதாரணமாக அமைக்கப்படும் பாரா போன்ற பார்மட் ஒன்றினை, அந்த வரிசைக்கு முன்பாக இணைக்கும். இதனால், இரண்டு டேபிள்கள் தனித்தனியாக அங்கே உருவாக்கப்படும்.
காப்பி அல்லது மூவ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டினை கிளிப் போர்டில் வைத்திருப்போம். அதனைப் பல இடங்களில் ஒட்ட வேண்டியதிருக்கும். இது சில வேளைகளில் படமாகக் கூட இருக்கலாம். அப்போது வேறு ஒரு டெக்ஸ்ட்டை எடுத்து இன்னொரு இட்த்தில் ஒட்ட எண்ணும்போது அதனை காப்பி செய்தால், கிளிப் போர்டில் உள்ள டெக்ஸ்ட் அல்லது படம் மறைந்துவிடும். ஆனால், அதனை மீண்டும் காப்பி செய்வது சற்று நேரம் எடுக்கும் செயலாக இருக்கலாம். அப்படிப்பட்ட வேளைகளில், கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடாமலேயே, டெக்ஸ்ட்டை இன்னொரு இட்த்தில் பேஸ்ட் செய்திடும் வழியைக் கடைப்பிடிக்கலாம்.
1. முதலில் வேறு ஒரு இடத்தில் ஒட்ட வேண்டிய டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. தொடர்ந்து Shift+F2 கீகளை அழுத்தவும்.
3. அடுத்து, கர்சரை, டெக்ஸ்ட்டை எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று அமைக்கவும். இனி, என்டர் தட்டினால், டெக்ஸ்ட் கர்சர் இருக்கும் இடத்தில் ஒட்டப்படும்.
மொத்த பக்க எண்ணிக்கை: வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.
1. எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை வர வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. ரிப்பனுடைய Insert டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. Text குரூப்பில் Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் Field என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. அடுத்து Categories கீழ்விரி பட்டியலில், Document Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Field Names என்பதில் NumPages என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து டயலாக் பாக்ஸை மூடி, பீல்டை இணைக்க ஓகே, கிளிக் செய்திடவும்.
இனி, மொத்த பக்க எண்கள் எண்ணிக்கை உங்கள் டாகுமெண்டில் காட்டப்படும்.