வாடிக்கையாளர்களைச் சத்தமாக முத்தமிடச் செய்யும் புதிய ஐபோன்கள்
02 Nov,2015
வாடிக்கையாளர்களைச் சத்தமாக முத்தமிடச் செய்யும் புதிய ஐபோன்கள்
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட புதிய ஐபோனின் அம்சங்களில் ஒன்று சாந்தமாக இருந்துவந்த தமது வாடிக்கையாளர்களை கொஞ்சம் சத்தம்போட வைத்திருக்கிறது.
பொதுவாக எஸ்.எம்.எஸ். மொழியில் பெரிய எழுத்தில்(upper-case) எழுதும் எழுத்துக்களுக்கு சத்தமிட்டு ஒரு தகவலை சொல்ல முற்படுவதாக அர்த்தம். ஆகவே, பெரும்பாலான கருத்துக்களை இவ்வாறு பகிரும்போது சிறிய எழுத்துக்களிலேயே பகிர்வர்.
இதேபோல, ஆங்கிலத்தின் எக்ஸ்(x) எழுத்து முத்தத்தைக் குறிப்பதாகும். தற்போது, வெளிவந்துள்ள புதிய ஐபோன் மாடல்களில் சிறிய எழுத்தில் எழுதும் எக்ஸ் அனுப்புவதற்குள் தானாகவே பெரிய எழுத்தாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு முறை நண்பர்களுடன் பேசி முடிக்கும்போது முத்தம் என்கிற அர்த்தத்தில், சிறிய எக்ஸ் எழுத்தை டைப் செய்வது பலருக்கும் வழக்கம்.
ஆனால், ஐபோனின் இந்த ‘ஆட்டோ-கரெக்ஷன்’ நண்பர்களுக்கு அனுப்பும் முத்தத்தையும் சத்தமாக இன்னும் அழுத்தமாக பதிவு செய்ய வைப்பது வாடிக்கையாளர்களிடையே சற்றே பீதியை ஏற்படுத்தி வருகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது