அப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் சம்சுங்-வேர்ட் டிப்ஸ்-வரிகளை ஒழுங்கு படுத்த:
30 Oct,2015
ஏட்டிக்கு போட்டியாக மொபைல் சாதன உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்கள் என்பன ஒரு நிறுவனத்தின் உற்பத்தியை நகல் செய்தமை காரணமாக நீதிமன்றம் வரை சென்று வந்தமை தெரிந்ததே.
இவ்வாறான நிலையில் அப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் ஸ்மார்ட் கடிகாரத்திற்கான தொடுதிரையினை வடிவமைத்துக் கொடுக்க சம்சுங் நிறுவனம் சம்மதித்துள்ளது.
இதன்படி தற்போதைய மொபைல் சாதனங்களில் IPS தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைப் பயன்படுத்தும் அப்பிள் நிறுவனம் எதிர்வரும் காலங்களில் AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட திரைகளைப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வேர்ட் டிப்ஸ்-வரிகளை ஒழுங்கு படுத்த:
வரிகளை ஒழுங்கு படுத்த: டாகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில், வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், வேர்ட், வரியில் உள்ள மிகப் பெரிய எழுத்துருவினைக் கண்டறிந்து, அதன் அளவிற்கேற்ப, அதற்கேற்ற வகையில் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அமைக்கிறது. ஒரு வரியில் உள்ள எழுத்துருவுக்கும், அடுத்த வரியில் உள்ள எழுத்துருவிற்கும் அளவில் வித்தியாசம் இருந்தால், வரிகளுக்கிடையேயான இடைவெளி வேறுபாடாக அமைகிறது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காண, வரிகளுக்கிடையேயான இடைவெளியைச் சரியாக நாமே அமைக்க வேண்டும். இதற்கு ஒரு வழி உள்ளது. நாம் எந்த அளவில் எழுத்துருவினைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதன் அளவில் 120 சதவீத அளவில் வரிகளுக்கிடையே இடைவெளி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக டைம்ஸ் ரோமன் எழுத்துருவில் 10 பாய்ண்ட் அளவில் எழுத்துக்களைப் பயன்படுத்தினால், வரிகளுக்கான இடைவெளி 12 பாய்ண்ட்களாக இருக்க வேண்டும்.
கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின் உள்ள பிரிவில் ‘Display gridlines on screen’ என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டு வாக்கிற்காகவும் படுக்கை வாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள், போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்.
பாரா வடிவமைப்பை மற்றவற்றிற்கு அமைக்க: வேர்ட் தொகுப்பில் கூடுதல் பயன்களைத் தரும் ஒரு சாதனம் பார்மட் பெயிண்டர் என்னும் வசதி ஆகும். இதன் மூலம் ஒரு பாரா பார்மட்டினை இன்னொரு பாராவிற்கு மாற்றலாம். முதலில் எந்த பாராவின் பார்மட்டினைக் காப்பி செய்து இன்னொரு பாராவிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திடவும். பின் டூல் பாரில் பார்மட் பெயிண்டர் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் எந்த பாராவில் இந்த பார்மட்டினைச் செலுத்த வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதே பார்மட்டைத் தொடர்ந்து காப்பி செய்திட பார்மட் பெயிண்டரில் டபுள் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் பார்மட் பெயிண்டரை குளோஸ் செய்திடும் வரை இந்த பார்மட் தொடர்ந்து காப்பி ஆகும். குளோஸ் செய்திட பார்மட் பெயிண்டரில் இன்னொரு முறை கிளிக் செய்திட வேண்டும். அல்லது எஸ்கேப் கீயினை அழுத்த வேண்டும்.வேர்ட் 2007 தொகுப்பில், பார்மட் பெயிண்டர் பெற, ஹோம் டேப்பில், கிளிப் போர்ட் பிரிவில், வலது மூலையில் இருக்கும் பார்மட் பெயிண்டர் சென்று, மேலே காட்டப்பட்டுள்ள மாற்றங்களைச் செயல்படுத்தலாம். இந்த ஐகான், பெயிண்ட் பிரஷ் ஐகானாகக் கிடைக்கும்.