அப்பிள் நிறுவனமானது iTunes எனும் சேவையின் ஊடாக மீடியா பிளேயர், மீடியா லைப்ரரி, மற்றும் ஒன்லைன் ரேடியோ என்பவற்றினை தனது பயனர்களுக்கு வழங்கி வருகின்றமையும், இதற்கு பிரத்தியேக கணக்கு அவசியம் என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் தற்போது போலியான iTunes தளம் ஒன்று உருவாக்கப்பட்டு அப்பிளின் வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் செயலில் ஹேக்கர்கள் களமிறங்கியுள்ளனர்.
பிரதானமாக மின்னஞ்சல் முகவரிகள் குறிவைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் ஊடாக iTunes தளத்தில் கொள்வனவுகள் இடம்பெறுகின்றன.
இத்தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்ட iTunes வாடிக்கையாளர் ஒருவர் அப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.
பேஸ்புக் தளத்தின் பதிவுகளில் டிஸ்லைக் பட்டன்
பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும், பேஸ்புக் சமூக வலைத் தளத்தில், பயனாளர்களின் தகவல்களை நாம் விரும்பினால், அதனை அறிவிக்க, “லைக்” (Like) பட்டன் உள்ளது. இது சென்ற, 2009 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இதே போல, விரும்பவில்லை என்றால், அதனைச் சுட்டிக் காட்ட ஏன் “டிஸ்லைக்” (Dislike) என்னும் “விரும்பவில்லை” என்ற பட்டனும் தேவை எனப் பல பயனாளர்கள் கேட்டு வந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த டிஸ்லைக் பட்டன் வைக்கப்படலாம் என்று, அண்மையில், தன் தலைமையிடத்தில் நடைபெற்ற கேள்வி- ~ பதில் நேரத்தின் போது, பேஸ்புக் நிறுவனர் மார்க் அறிவித்துள்ளார். இந்த பட்டன் வடிவமைக்கும் பணி ஏறத்தாழ முடிந்துவிட்டதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்தார். சிறிது காலம், இது சோதனை முறையில் பயனாளர்களுக்குக் கிடைக்கும்.
இது வெறுப்பினைக் காட்டுவதில் முதன்மை இடம் கொள்ளாது. சில வேளைகளில், துக்ககரமான தகவல் பதிவுகளைப் படிப்பவர்கள், தங்களை அறியாமல், அல்லது வேறு எந்த கண்ணோட்டம் குறித்த பட்டனும் இல்லாததால், லைக் பட்டனை அழுத்திவிடுகின்றனர். இது தகவலுக்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரானதாக உள்ளது. அப்படிப்பட்ட தகவலைப் படிக்கும் போது, நான் அதனை விரும்பவில்லை என்று காட்ட இந்த “டிஸ்லைக்” பட்டன் உதவலாம்.
அதுமட்டுமின்றி, சில தேவையற்ற விளம்பர பாப் அப் தகவல்களைத் தாங்கள் விரும்பவில்லை என்று காட்ட, மக்கள் ‘டிஸ்லைக்’ பட்டனை விரும்பலாம். இது போல மென்மையான எதிர்ப்பினை, எண்ணத்தைத் தெரிவிக்கவே, மக்கள் இதனைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலர் தங்களுடைய குழந்தைகள், வளர்ப்பு செல்ல பிராணிகள், தாங்கள் ரசித்த சமையல் குறிப்புகளைப் பதிகின்றனர். யாரும் இவற்றுக்கு ‘டிஸ்லைக்’ பட்டனை அழுத்த மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என சில உளவியல் நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால், டிஸ்லைக் பட்டனுக்குப் பதிலாக “Sorry” பட்டன் ஒன்றைத் தரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த பட்டன் மூலம், தகவல் பதிவின் உணர்வினை மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாம். இதனைப் பலர் பேஸ்புக் நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளனர். அவர்களின் உணர்வுகள் அனைத்தையும் பேஸ்புக் நிறுவனம் தன் கவனத்தில் கொண்டுள்ளது.