விண்டோஸ் 7 சில வேறுபட்ட வழி கள்எக்ஸெல் டிப்ஸ்ஸகுறிப்பிட்ட

24 Oct,2015
 

             



விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கும் சில மாறுதலான வசதிகள் குறித்த டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளர்களிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், பெரும்பாலானவர்கள் இதற்கு மாறிக் கொண்டு, இது தரும் வசதிகளை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளன. இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல் இருப்பதுதான். பொதுவாகவே, கம்ப்யூட்டர் இயக்கத்தில், Undocumented Features எனச் சில உண்டு. இவற்றைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் மற்றவர்களுக்கு டாகுமெண்ட் செய்து வெளியிட்டால் தான் உண்டு. மேலும், இந்த சிஸ்டத்தினை வடிவமைத்தவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்திடும் வகையில் சில விசேஷ அம்சங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். அவற்றை Easter Eggs என அழைப்பார்கள். அப்படிப்பட்ட சில வசதிகள் குறித்தும், Easter Eggs குறித்தும் இங்கு காணலாம்.

 

1. சில ஷார்ட்கட் கீகள்: புரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட் அல்லது பழைய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.
2. ஐகான் அழுத்துகையில், ஷிப்ட்+ கண்ட்ரோல் கீகளை அழுத்திக் கொண்டு செய்தாலும், மேலே கூறிய செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதில் என்ன வேறுபாடு என்றால், இந்த விண்டோ, முற்றிலும் அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையுடன் திறக்கப்படும்.
3. கண்ட்ரோல் பட்டனை அழுத்திக் கொண்டு, இதே போல புரோகிராம் ஐகான் ஒன்றில் கிளிக் செய்தால், திறந்து செயல்படுத்தப்படும் விண்டோக்களில், இறுதியாகத் திறந்த விண்டோ திறக்கப்படும்.
திறக்கப்பட்ட விண்டோவின் மேல் பட்டியில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், அது மினிமைஸ் செய்யப்படும். இதனை மானிட்டர் திரையில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று அமைக்கலாம். இதன் அளவினை நாம் விரும்பும் வகையில் சிறிதாக்கலாம்; பெரியதாகவும் அமைக்கலாம். இதனை மவுஸ் தொடாமலும் அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ அவை:
விண்டோஸ் லோகோ கீயினை அழுத்திக் கொண்டு அப் (UP) அம்புக்குறியினை அழுத்தினால், விண்டோவின் அளவைப் பெரிதாக்கலாம்.
அதே போல, விண்டோஸ் லோகோ கீயினை, வலது அல்லது இடது அம்புக் குறியுடன் அழுத்த, விண்டோ திரையின் இடது அல்லது வலது பக்கமாக நகர்த்தப்படும்.
பிரச்னைகளை மற்றவருக்குத் தெரிவிக்க: கம்ப்யூட்டரில் பிரச்னை ஒன்று ஏற்படுகையில், அதனை மற்றவருக்கு இதனால் தான், அல்லது இந்த செயல்பாட்டின் போதுதான் பிரச்னை ஏற்பட்ட து என்று சொன்னால் தான் புரியும். இதனை எப்படி சொல்வது? பிரச்னை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டில், என்ன என்ன ஏற்பட்ட்து என நமக்குத் தெரியுமா? இதனைப் பதிவு செய்திடும் வகையில், டூல் ஒன்றை விண்டோஸ் 7 கொண்டுள்ளது. இந்த டூலின் பெயர் Problems Step Recorder. இதனை அணுக, ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்து, தேடல் கட்டத்தில் “Problem Record” என டைப் செய்து எண்டர் தட்டவும். அடுத்து, Record steps to reproduce a problem என்பதில் கிளிக் செய்திடவும். இது Problem Steps Recorder டூலை இயக்கத் தொடங்கும். உடன் என்பதில் அழுத்த, நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் அனைத்தும், டெஸ்க்டாப்பில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு முறை மவுஸால் கிளிக் செய்திடும்போதும், டெஸ்க்டாப் திரை, ஸ்கிரீன் ஷாட் ஆகப் பதிவு செய்யப்படும். இவை அனைத்தும் “problem steps” என்றபடி வரிசையாக, தானாகவே பதிவு செய்யப்படும். பதிவு செய்தது போதும் என்று அதை நிறுத்தினால், பைலை ZIP file ஆக, சேவ் செய்திடும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அதே போல் பதிவு செய்திடலாம். பின்னர், தேவைப்படுகையில், இதனை விரித்து, ஸ்கிரீன் ஷாட்களை ஒவ்வொன்றாகப் பார்த்து, எப்போது பிரச்னை ஏற்பட்டது என்று அறியலாம். அல்லது, பிரச்னைகளை அறிந்து தீர்க்கக் கூடிய தொழில் நுட்பவியலாளருக்கு, இந்த பைலை அனுப்பலாம். அவர் அதனை விரித்துப் பார்த்து, பிரச்னையை உணர்ந்து கொண்டு, அதற்கான தீர்வினைத் தருவார். இப்படி ஒரு டூல் உள்ளது என, பல தொழில் நுட்ப வல்லுநர்களுக்கே தெரியாது.
அடுத்து சில விந்தையான, ஆனால் அதே சமயம் பயனுள்ள விண்டோஸ் 7 ஈஸ்டர் எக்ஸ் எனப்படும் சில குறுக்கு வசதிகளைக் காணலாம்.
1.GodMode: இது ஒரு மிக மிகப் பயனுள்ள டூல். விண்டோஸ் 7 சிஸ்டத்தின் இயக்க செயல்பாடுகள் அனைத்தையும் இதன் மூலம் செட் அப் செய்திடலாம். ஏறத்தாழ 270 சிஸ்டம் அமைப்பு செயல்பாடுகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம். இதற்கு டெஸ்க்டாப்பில், புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.இதன் பெயராக “GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}” என்பதனை அமைக்கவும் (மேற்கோள் குறிகள் இல்லாமல்). இந்த போல்டரின் ஐகான் படம் மற்றவற்றிலிருந்து
சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் அமைந்திருக்கும். கண்ட்ரோல் பேனலுக்கான ஐகான் போலக் காட்சி அளிக்கும். பின்னர் அந்த போல்டரைத் திறந்து பார்க்கவும். கம்ப்யூட்டர் இயக்க செயல்பாடுகள், ஏறத்தாழ 45 பிரிவுகளில்
பிரிக்கப்பட்டுத் தரப்படும்.
அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்ஸ், பாண்ட்ஸ், விண்டோஸ் பயர்வால், அப்டேட், யூசர் அக்கவுண்ட்ஸ் எனப் பல பயனுள்ள பிரிவுகளில், 270க்கும் மேற்பட்ட செட் அப் செயல்பாடுகளுக்கான லிங்க் கிடைக்கும். இவற்றில் தேவையானதில் கிளிக் செய்து, நாம் புதிய செட் அப் வழியை மேற்கொள்ளலாம். இந்த டூல் அதன் பெயருக்கேற்ப, நம்மை நம் கம்ப்யூட்டரின் கடவுளாக மாற்றுகிறது.
2. பைல்களைச் சுவடு இன்றி அழிக்க: நாம் அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கம்ப்யூட்டரை, அடுத்து நம் இருக்கையில் அமர்ந்து செயல்படப் போகும் இன்னொருவரிடம் தர வேண்டியதிருக்கும். நம் கம்ப்யூட்டரில் நம் சொந்த பைல்களைப் பதிந்து வைத்திருக்கலாம். என்ன தான் அழித்தாலும், Recuva போன்ற புரோகிராம்களால், அவற்றை மீண்டும் பெற்றுவிடலாம். இவ்வாறு இல்லாமல் சுவடே இல்லாமல், மொத்தமாக, முழுமையாக நீக்க விண்டோஸ் 7 வழி ஒன்று கொண்டுள்ளது. இதற்கு கமாண்ட் ப்ராம்ப்ட் (Command Prompt) செல்லவும். ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் cmd என டைப் செய்து எண்டர் அழுத்தினால், இந்த கட்டளைப் புள்ளி கொண்ட விண்டோ கிடைக்கும். இதில் “cipher /w:C” என டைப் செய்து எண்டர் தட்டவும். அழிக்கப்பட்ட அல்லது அழிக்கப்படாத பைல்கள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும். இந்தக் கட்டளையை எந்த ட்ரைவில் உள்ள பைல்களுக்கு என செயல்படுத்துகிறோமோ, அதற்கான ட்ரைவ் எழுத்தினை, கட்டளையில் அமைக்க வேண்டும்.
இன்னும் சில ஷார்ட் கட் கீகளை இங்கு குறிப்பிடலாம்.
உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய விண்டோக்கள் திறந்த நிலையில் உள்ளதா? ஒவ்வொன்றிலும் ஏதேனும் புரோகிராம் ஒன்று திறக்கப்பட்டு, பைல் ஒன்று செயல்பாட்டில் உள்ளதா? அல்லது எந்த செயல்பாடும் இன்றி திறக்கப்பட்ட நிலையில் உள்ளதா? இவற்றை மூடிட, Windows Logo + Home என்ற கீகளை அழுத்தவும். ஒவ்வொரு முறை அழுத்தும்போதும்,
ஒவ்வொரு விண்டோ மூடப்படும். நீங்கள் அப்போது டெஸ்க்டாப்பில் திறந்து வைத்து செயல்படும் விண்டோ மட்டும் திறந்தபடியே இருக்கும்.
திரையில் உள்ள சிறிய எழுத்துக்களைப் பார்க்க இயலவில்லையா? விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, நம் லாக் பட்டன் அழுத்திய நிலையில் + கீயை அழுத்தவும். விண்டோஸ் இயக்கத்தின் மேக்னிபையர் செயல்படத் தொடங்கும்.
முதலில் இருந்த விண்டோவிற்கு மேலாக ஒரு சிறிய விண்டோ காட்டப்படும். பழைய விண்டோவில் கர்சர் இருக்கும் பகுதி மட்டும் இங்கு பெரிது படுத்தப்பட்டு காட்டப்படும். மைனஸ் கீ அழுத்தினால், காட்டப்படும் அளவு குறைத்துக் காட்டப்படும்.

எக்ஸெல் டிப்ஸ்ஸகுறிப்பிட்ட பகுதியை மட்டும் அச்செடுக்க:

குறிப்பிட்ட பகுதியை மட்டும் அச்செடுக்க: சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், குறிப்பிட்ட சில செல்களை மட்டும், ஒரு பகுதியை மட்டும் அச்செடுக்க வேண்டியதிருக்கும். இதனை மேற்கொள்ளும் வழிகளை இங்கு பார்க்கலாம். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
1. நீங்கள் அச்செடுக்க வேண்டிய செல் வரிசைகளை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து பிரிண்ட் டயலாக் பாக்ஸைப் பெறவும். இதற்கு Ctrl+P அழுத்தலாம்.
3. அடுத்து Print What பாக்ஸில் Selection என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

 

4. பின்னர், ஓகே கொடுக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டும் அச்சாகும்.
நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 2010 ஆக இருந்தால், மேலே குறிப்பிட்ட செயல்முறைகளைச் சற்று மாற்றி அமைக்க வேண்டியதிருக்கும்.
1. அச்செடுக்க வேண்டிய செல்களை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. அடுத்து பிரிண்ட் ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ரிப்பனில், File டேப் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Print என்பதில் கிளிக் செய்திடவும். இல்லை எனில், சுருக்கமாக, Ctrl+P அழுத்தலாம்.
3. தொடர்ந்து Settings தலைப்பின் கீழ் உள்ள செவ்வக பட்டனை அழுத்தவும்.
4. உடன் சில பிரிண்டிங் ஆப்ஷன்ஸ் காட்டப்படும். அதில் Print Selection என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Print என்பதில் கிளிக் செய்திடவும்.
டேப்பின் அளவை நீட்ட: எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. Start மெனு அல்லது தேடல் கட்டத்தில் இருந்து Control Panel திறக்கவும்.
2. அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Personalization பிரிவில் Change Window Glass Color என்பதில் கிளிக் செய்திடவும்.
4. அடுத்து Advanced Appearance Settings என்பதில் கிளிக் செய்திடவும்.
5. அடுத்து Item என்ற ட்ராப் டவுண் பாக்ஸில், Scrollbar என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, நீங்கள் விரும்பும் அளவில் டேப் அமைய, அதற்கான அளவுகளைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். பெரிய அளவில் என்றால், டேப்களும் பெரியதாக அமையும். பின்னர் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது எக்ஸெல் ஒர்க் ஷீட் டேப்களின் அளவு நீங்கள் செட் செய்தபடி அமையும். இதில் என்ன பிரச்னை என்றால், உங்கள் ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்களில் தரப்பட்டுள்ள ஸ்குரோல் பார்களின் அளவும் மாற்றப்பட்டிருக்கும். சற்று பெரியதாக உள்ள ஸ்குரோல்பாரினை நீங்கள் பயன்படுத்தப் பழக வேண்டியதிருக்கும்.
டெக்ஸ்ட் டிசைன்: தாங்கள் அமைத்திடும் ஒர்க் ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும்.
இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.




Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies