உலகின் முதல் ரோபோ தொலைபேசி உருவாக்கம்
17 Oct,2015

உலகின் முதல் ரோபோ தொலைபேசி உருவாக்கம்
ஜப்பானைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான Sharp உலகின் முதல் ரோபோ தொலைபேசியை உருவாக்கியுள்ளது.
RoBoHoN எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொலைபேசியில் சாதாரண கையடக்கத் தொலைபேசியில் இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சிறிய தொடுதிரையை கொண்டுள்ள இக் கைபேசியில் நான்கு ஐகன்கள் மட்டுமே உள்ளன.
இந்த தொலைபேசியினை Sharp நிறுவனம் Robo Garage மேலதிகாரி Tomotaka Takahashi என்பவருடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்த தொலைபேசியில் முதன்மைப் பயன்பாடு வாய்வழி உத்தரவுப் படி செயற்படுவது சிறப்பச்சமாகும்.
தொடுதிரை ஒரு இரண்டாம் இடைமுகம், ரோபோ தொலைபேசியின் பின்னால் இரண்டு அங்குல திரை மற்றும் அதன் முகத்தில் உள்ளமைக்கப்பட்ட கெமரா மற்றும் ப்ரொஜெக்டர் என்பன உள்ள வகையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் கைகள் மற்றும் கால்கள் நடக்கவும், நமது உத்தரவிற்கு ஏற்ப நடனமாடும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
ரோபோ தொலைபேசியில் உள்ள சிறிய ப்ரொஜெக்டரில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை ஒளிபரப்புதல், குறிப்புக்களை எடுத்தல், புகைப்படங்கள் எடுத்தல், அழைப்புகள் ஆகியவற்றை செயல்படுத்த முடியும்.
குரல் மற்றும் முக அங்கீகாரம் ஆகிய இரண்டு முறைகளில் பயனாளிகள் இதனை உபயோகப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.