இன்று வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால்,
அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்துகொள்ளும்நிலையில் இருந்தா ல், நம்நிலை மிகமோசமாக மாறிவிடும். அதனா ல்தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து கணிணி நிபுணர்கள் பலர், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்கவேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள்.
மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம். தங்கள் நிறுவன த்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர் கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிரா ம்களை நிறுவிக்கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என் று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெ ளியில் அவற்றைமாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்த கைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதா ன் நல்லது. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிற ப்புகுறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக்கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக்கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடைஇடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
ஸ்மார்ட்போன் கேலரிக்கு பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையில் எளிதா க அமைப்பதனைக் கைவிடவேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக்கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். lalulalu என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே.
இதனை L*alu(L)alU என்றபடி இன்னும் நீளமாக அமைக்கலாம். பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட கா லத்தில் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர் நெட் பேங்கிங்சேவை, சோஷியல் நெட்வொர்க்தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப் யூட்டர்களில் வேலை என பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவ து சற்று கடினமே.
ராஜா
விண்டோஸ் ஓ.எஸ். வளர்ந்த வரலாறு
1. விண்டோஸ் 1 – 1985, நவம்பர் 20. இன்டர்பேஸ் மேனேஜர் என முதலில், 1983லேயே பில்கேட்ஸ் அறிமுகப்படுத்திய இந்த சிஸ்டம், 1985ல் பயன்பாட்டிற்கு விண்டோஸ் என்ற பெயரில் அறிமுகமானது. அப்போதைய இதன் விலை 99 டாலர்.
2. விண்டோஸ் 2 — டிசம்பர் 9, 1987. இந்த சிஸ்டத்தில் தான் முதன் முதலாக கண்ட்ரோல் பேனல் அறிமுகமானது. ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டரிலும், இரண்டு பிளாப்பி ட்ரைவ்கள் வழியாக இது இயங்கியது.
3. விண்டோஸ் 3 — மே 22, 1990. பயனாளர்களின் தேவைகளுக்கேற்ப இன்டர்பேஸ் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சிஸ்டம் உருவானது. கண்ட்ரோல் பேனல் மேம்படுத்தப்பட்டு, முதல் முதலாக சாலிடெர் கேம் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டது.
4. விண்டோஸ் என்.டி. 3.1 — ஜூலை 27,1993. இதனுடைய குறியீடுகள் அமைப்பு இன்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பில் இடம் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எம். நிறுவனத்துடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தினை முறித்துக் கொண்ட பின்னர், மைக்ரோசாப்ட் உருவாக்கிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் இது.
5. விண்டோஸ் 95 — ஆகஸ்ட் 24, 1995. நுகர்வோரை மனதில் வைத்து, எளிமையான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இது வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஸ்டார்ட் பட்டன் கொண்ட முதல் ஓ.எஸ். இதுதான். இதற்காகவே Start Me Up – என்ற பாடல் வழங்கப்பட்டது. டாஸ்க் பார், சிஸ்டம் ட்ரே, நோட்டிபிகேஷன் ஏரியா, விண்டோ மேக்சிமைஸ் / மினிமைஸ் ஆகிய வசதிகள் இந்த சிஸ்டத்தில் முதல் முதலாகத் தரப்பட்டன.
6. விண்டோஸ் என்.டி. 4 — ஆகஸ்ட் 24, 1996. ஒர்க் ஸ்டேஷன் மற்றும் சர்வர்களில் இயங்கும் சிஸ்டமாக இது கிடைத்தது.
7. விண்டோஸ் 98 — ஜூன் 25, 1998. விண்டோஸ் 95 சிஸ்டத்தைக் காட்டிலும், நுகர்வோருக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்ட சிஸ்டமாக இது வடிவமைக்கப்பட்டு கிடைத்தது. விண்டோஸ் 95 உடன் கிடைத்த யு.எஸ்.பி. சப்போர்ட், இதில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு தரப்பட்டது. ஸ்கேனர், மவுஸ், கீ போர்ட் மற்றும் ஜாய் ஸ்டிக் ஆகியவற்றை யு.எஸ்.பி. போர்ட் மூலம் பயன்படுத்த முடிந்தது. ஆனால், மோடம் சாதன இயக்கம் தரப்படவில்லை.
8. விண்டோஸ் 2000 புரபஷனல் — பிப்ரவரி 17, 2000. விண்டோஸ் என்.டி. 4 மற்றும் விண்டோஸ் 98 ஆகியவற்றின் இடத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
9. விண்டோஸ் மி — செப்டம்பர் 14, 2000. மிக மோசமான விண்டோஸ் இயக்கம் என அனைவராலும் கருதப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம்.
10.விண்டோஸ் எக்ஸ்பி — அக்டோபர் 25, 2001. மைக்ரோசாப்ட் வெளியிட்ட விண்டோஸ் இயக்க முறைமைகளில், மிகவும் சிறப்பானதாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் கருதப்பட்டு, இறுதிவரை அதிகமான மக்களால் பிரியத்துடன் பயன்படுத்தப்பட்ட ஓ.எஸ். இதுவாகும். இன்னும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 8, 2014 வரை, இதற்கான மேம்பாட்டு பைல்களை மைக்ரோசாப்ட் தந்து வந்தது.
11.விண்டோஸ் சர்வர் 2003 — ஏப்ரல் 24, 2003. விண்டோஸ் எக்ஸ்பியின் சர்வர் பதிப்பு இயக்கமாக இது வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது.
12.விண்டோஸ் விஸ்டா — ஜனவரி 30, 2007. ஏற்கனவே தரப்பட்ட பல வசதிகள் இதில் மேம்படுத்தப்பட்டாலும், நுகர்வோர்களின் ஆதரவைப் பெறத் தவறிய ஓ.எஸ். இதுவாகும்.
13.விண்டோஸ் சர்வர் 2008 — பிப்ரவரி 27, 2008. சர்வர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கு தனி இடம் கிடைத்தது. பல வசதிகள் இதில் மேம்படுத்தப்பட்டுத் தரப்பட்டன.
14.விண்டோஸ் 7 — அக்டோபர் 22, 2009. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா பயன்படுத்தி வந்தவர்களுக்கு, இந்த சிஸ்டம் எதிர்பார்த்த பல வசதிகளைத் தந்தது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு கிடைத்தன.
15.விண்டோஸ் சர்வர் 2012 — செப்டம்பர் 4, 2012. நான்கு வேறுபட்ட வகைகளில் இது வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது. நெட்வொர்க்கிங் பணியில் மிகச் சிறப்பான மேம்பாடுகளைக் கொண்டது.
16.விண்டோஸ் 8 — அக்டோபர் 25, 2012. மூன்று வகை இயக்கத்துடன் இது வெளியானது. குறிப்பாக, தொடு உணர் திரையில் விண்டோஸ் இயக்கத்தினைக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் வடிவமைக்கப்பட்டது. பல பழைய வசதிகள், ஸ்டார்ட் மெனு உட்பட, இதில் தரப்படவில்லை என்பதால், அதிரடியான மாற்றத்திற்கு மக்கள் தயாராகத் தயங்கினர். இதனால், விண்டோஸ் 7 தொடர்ந்து மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.
17. விண்டோஸ் 8.1 — அக்டோபர் 17, 2013. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கைவிடப்பட்ட ஸ்டார்ட் பட்டன் இதில் மீண்டும் தரப்பட்டது. ஸ்கை ட்ரைவ் மற்றும் விண்டோஸ் ஸ்டோர் ஆகியவை மேம்படுத்தப்பட்டு, இதனுடன் இணைக்கப்பட்டு கிடைத்தன.
18. விண்டோஸ் 10 — ஜூலை 29, 2015. இதற்கு முன் இல்லாத வகையில், பல லட்சக்கணக்கான பயனாளர்களால், ஆர்வத்துடன் சோதனை செய்யப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம். இனி விண்டோஸ் ஒரு சேவையாகக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் இதில் அதிகமான வசதிகளை எதிர்பார்த்துள்ளனர். பல முற்றிலும் புதிய வசதிகள் இதில் அறிமுகமாகியுள்ளன. குறிப்பாக இதனுடன் இணைந்து தரப்படும் எட்ஜ் பிரவுசரைக் கூறலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை ஓரங்கட்டும் சிஸ்டமாக இது வந்துள்ளது. இதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என இனிமேல் தான் தெரியவரும்