ஆப்பிள் ஐபோன் 6s செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகம்
கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக விளங்கும் ‘ஆப்பிள்’ நிறுவனம் ஐபோன் எனப்படும் நவீனரக கைபேசி விற்பனையிலும் கொடிகட்டி பறந்து வருகின்றது.
ஏற்கனவே, 6 மற்றும் 6 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் வெளியிட்ட இருரக ஐபோன்களுக்கும் சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி நிலவிவரும் நிலையில், இதன் அடுத்தகட்டமாக ‘iPhone 6S, iPhone 6S Plus’ என்ற இரு நவீன ரக ஐபோன்களை வெளியிடப் போவதாக ஆப்பிள் அறிவித்திருந்தது.
இந்நிலையில், “செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெறும் எங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் விழாவுக்கு வருகை தந்து சிறப்பியுங்கள்” என ஊடகங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அழைப்பு அனுப்பியுள்ளது. இந்த அழைப்பை வைத்துப் பார்க்கும்போது வரும் ஒன்பதாம் தேதி ‘iPhone 6S, iPhone 6S Plus’ ஆகியவற்றை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என நம்பப்படுகிறது.
விரல்ரேகை மூலம் செயல்படும் ஸ்கேனர் மூலம் உயிர்ப்பு பெறும் திரையின் செயல்பாடு, 2-ஜிபி ரேம், இமேஜ் சென்சர்களுடன் கூடிய 12 மெகாபிக்சல் கேமரா, முன்பக்க கேமரா பிளாஷ் என ஏகப்பட்ட புதிய அம்சங்களுடன் அறிமுகமாகவுள்ள ‘iPhone 6S, iPhone 6S Plus’ இரண்டுமே தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் ஒரு புதிய மைல்கல்லாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எக்ஸெல் டிப்ஸ்ஸஒரே டேட்டா – பல செல்கள்:
ஒரே டேட்டா – பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.
ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட, எக்ஸெல் புரோகிராமில் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர் கிடைப்பவற்றில், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 தொகுப்பில், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து அதில் Options என்பதனைக் கிளிக் செய்திடுக.
2. டயலாக் பாக்ஸில், இடது பக்கம், Popular (Excel 2007) அல்லது General (Excel 2010) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடுக.
3. இங்கு கிடைக்கும் ScreenTip Style கீழ்விரி பட்டியலைத் திறந்திடுக. இங்கு Don’t Show ScreenTips என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கொடுத்து வெளியேறவும். இனி ஸ்கிரீன் டிப்ஸ் தோன்றாது.
ஒர்க்புக் பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட: எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப் பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம். இதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை டயலாக் பாக்ஸின் இடது பக்கம் காட்டும்படி அமைக்கலாம். Views டூலினை அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த Open டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில், சில ஒர்க்புக்குகளுக்கு பிரிவியூ எனப்படும் முன் தோற்றக் காட்சி தரப்படவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். அனைத்து ஒர்க்புக்குகளுக்கும் பிரிவியூ காட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்தால், கீழே தந்துள்ளபடி செட் செய்திடவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Prepare மற்றும் Properties கிளிக் செய்திடவும். எக்ஸெல், உங்களுடைய ஒர்க்ஷீட் மேலாக, சுருக்காமாக properties காட்டும்.
2. அடுத்து Document Propertiesஐ அடுத்துள்ள அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். இங்கு Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
3. இங்கு Summary டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Save Thumbnails for All Excel Documents என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடுவோம்.
6. இப்போது ஒர்க்புக்கினை சேவ் செய்திடவும்