விண்டோஸ் 10 அப்டேட் கட்டாயமாகிறது-அட்டகாசமான வசதியுடன் Outlook iOS அப்பிளிக்கேஷன்
30 Aug,2015
Outlook மின்னஞ்சல் சேவையானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை அறிந்ததே.
இச் சேவையினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்காக அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் iOS சாதனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பதிப்பில் மின்னஞ்சலில் இணைக்கும் கோப்புக்களை நேரடியாகவே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.
அதாவது மின்னஞ்சல்களுடன் இணைக்கப்படும் (Attach) Word, Excel மற்றும் PowerPoint போன்ற கோப்புக்களை மொபைல் சாதனங்களினூடாக ஒன்லைனில் வைத்தே எடிட் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப் புதிய பதிப்பினை App Store தளத்திலிருந்த தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.
விண்டோஸ் 10 அப்டேட் கட்டாயமாகிறது
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு வழக்கமாக அப்டேட் பைல்களைத் தரும். இவற்றைக் கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்கிரேட் செய்து கொள்வது நல்லது. ஒரு சிலர், தானாகவே இவை அப்டேட் செய்திடும்படி, செட்டிங்ஸ் அமைத்துக் கொள்வார்கள். சிலர், அப்கிரேட் பைல்களைத் தானாகத் தரவிறக்கம் செய்திட அனுமதித்துவிட்டு, பின்னர், தாங்கள் விரும்பும்போது, அப்டேட் செய்திடுவார்கள். இதற்கான செட்டிங்ஸ் அமைக்க, விண்டோஸ் சிஸ்டத்தில் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும்.
இந்த முறை, விண்டோஸ் 10 ஹோம் பதிப்பு பயன்படுத்துபவர்களுக்கு, அப்டேட் செய்வதனை, மைக்ரோசாப்ட் கட்டாயமாக் கியுள்ளது. இந்த பதிப்பினை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்பவர்கள், அப்டேட் செயல்பாட்டினைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். வேறு நிலைகளுக்கான ஆப்ஷன்கள் தரப்படவில்லை. இவ்வாறு கட்டாயப்படுத்தி அப்கிரேட் செய்வதனால், ஆப்பரேட்டிங் சிஸ்டம் பாதுகாப்பான சூழ்நிலையைப் பெறுகிறது. ஆனால், சில வகைகளில் இந்த அப்கிரேட் பைல்களின் இயக்க தன்மை, மற்ற செயலிகளின் இயக்கத்துடன் ஒத்துப் போவதில்லை என்ற குற்றச் சாட்டு உள்ளது. விண் 10 ஹோம் வரும்போதுதான் உண்மை நிலை என்னவென்று தெரியவரும்.