தற்போது காணப்படும் பிளாஸ் மெரிக்களை (Flash Memory) விடவும் 1000 மடங்கு வேகம் கூடிய மெமரியினை Intel நிறுவனம் உருவாக்கியுள்ளது.
3D XPoint எனப்படும் இந்த மெமரியானது NAND தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இதேவேளை தற்போது காணப்படும் மெமரிக்களை விடவும் 10 மடங்கு அடர்த்தி கூடியதாகவும் அமைந்துள்ளது.
அதாவது சிறிய கூறுகளைக்கொண்டு உருவாக்கப்பட்டமையினால் அடர்த்தி குறைவாக இருப்பதுடன், அளவில் சிறியதாகவும் காணப்படுகின்றது.
இப்புதிய பிளாஸ் மெமரியானது விரைவில் மெமரி காரட், பென்டிரைவ், ஸ்மார்ட் கைப்பேசிகள் என்பவற்றிலும் வன்றட்டுக்கு (Hard Disk) பதிலாகவும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விண்டோஸ் 10 – வினாக்களும் விடைகளும்
கேள்வி: என்னுடைய விண்டோஸ் டெஸ்க்டாப் புரோகிராம்கள் அனைத்தும், விண்டோஸ் 10ல் இயங்குமா?
பதில்: விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களில் இயங்கும் அனைத்து டெஸ்க்டாப் புரோகிராம்களும், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் நிச்சயம் இயங்கும். பேக் அப் டூல்கள் மற்றும் ஆண்ட்டி வைரஸ் போன்ற சில வகை பழைய சிஸ்டம் பைல்களை, அவற்றை வழங்கியவர்களின் இணைய தளம் சென்று அப்டேட் செய்து கொள்ள வேண்டும். அல்லது அந்த நிறுவனங்களிடமே, அந்த செயிலிகள் விண் 10க்கேற்ற வகையில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டனவா அல்லது செய்யப்படுமா எனக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
கேள்வி: விண்டோஸ் 10ல் எவை எல்லாம் புதியது எனப் பட்டியலிட முடியுமா?
பதில்: கம்ப்யூட்டர் மலரில் இவை குறித்து அவ்வப்போது விரிவான தகவல்கள் தரப்பட்டதால், நீங்கள் விரும்பும் வகையில், சுருக்கமாக அவற்றைப் பட்டியலிடுகிறேன். மிகப் பெரிய மாற்றம் என ஸ்டார்ட் மெனு மீண்டும் தரப்படுவதனைக் கூறலாம். இதுவும், விண் 8ல் தரப்பட்ட மாடர்ன் அப்ளிகேஷன் டைல்களும் இருக்கும்.
இதுவரை விண்டோஸ் போனில் இயங்கிய ஒலிவழி இயங்கும் கார்டனா (Cortana) இனி பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் கிடைக்கும். ஸ்டார்ட் பட்டனின் வலது புறம் உள்ள சர்ச் பாக்ஸ் இடத்தில் இது கிடைக்கும். இதற்கு சில செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டியதிருக்கலாம்.
பொதுவான சிஸ்டம் செயல்பாடுகள் மற்றும் அவற்றிற்கான நோட்டிபிகேஷன் மற்றும் பட்டன்களுடன் ஒரு Action Center தரப்படும்.
கீ போர்ட் மற்றும் மவுஸ் இல்லாத டேப்ளட் பி.சி.க்களில், டேப்ளட் மோட் என்ற நிலை தரப்படும். இதில் ஸ்டார்ட் மெனு போன்றவை முழுத்திரையிலும் காட்டப்படும்.
விண்டோஸ் ஹலோ எனப்படும் புதிய பயோ மெட்ரிக் சப்போர்ட், போட்டோஸ், மெயில், காலண்டர், எம்.எஸ்.என். நியூஸ், ஸ்போர்ட்ஸ், பணம், பயணம், சீதோஷ்ண நிலை அறிவிப்பு போன்ற செயலிகளுக்கான பிரிவுகள் காட்டப்படும்.
விண்டோஸ் சிஸ்டங்கள் அனைத்திற்குமாக, ஒரே ஒரு விண்டோஸ் ஸ்டோர் அமைக்கப்பட்டு கிடைக்க இருக்கிறது. அனைத்து வகை, அனைத்து அளவில் இயங்கும் விண்டோஸ் சாதனங்கள் அனைத்திற்கும் தேவையான செயலிகள் இங்கு கிடைக்கும்.
இன்னும் ஸ்பார்டன் என்ற குறியீட்டுப் பெயருடன் அழைக்கப்படும் “எட்ஜ்” பிரவுசர் முற்றிலும் புதிய வடிவமைப்பில், புதிய இயக்க இஞ்சினில் இயங்கும் வகையில் கிடைக்க இருக்கிறது.
கேள்வி: என்னுடைய ‘ஒன் ட்ரைவ்’ பைல்கள் என்னவாகும்?
சோதனைப் பதிப்பு build 9879 முதல் ஒன் ட்ரைவ் செயல்பாட்டில் சில மாற்றங்கள் தெரிகின்றன. விண் 8.1 ல் அறிமுகமான placeholder files நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பைல் எக்ஸ்புளோரரில், க்ளவ்ட் அமைப்பில் உள்ள பைல்களும் காட்டப்பட்டன.
தற்போது ஒரு புதிய ஒருங்கிணைப்பு (new sync utility) மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், இது ஜூலை 29ல் கிடைக்குமா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் பைல்களுக்கு எந்த சேதமும் இருக்காது. பெறும் வழிகள் வேண்டுமானால், இன்னும் சற்றுப் பெரிய அளவில் தரப்படும்.
கேள்வி: ஓராண்டு கழித்து, விண்டோஸ் 10 பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், செலுத்த முடியாதவர்கள், பழைய விண்டோஸ் சிஸ்டத்திற்கும் போக முடியாது என்றும் பரவலாகச் சொல்லப்படுகிறதே, அது உண்மையா? அப்படியானால், விண் 10க்கு மாறாமலேயே இருக்கலமா?
பதில்: நிச்சயமாக இல்லை. விண்டோஸ் உரிமம் வழங்கும் அடிப்படை அமைப்பினை மைக்ரோசாப்ட் மாற்றவில்லை. இலவசமாகத் தரப்பட்டாலும், அது நிலைத்த உரிமையை, உரிமத்தை நமக்கு வழங்குகிறது. உங்கள் கம்ப்யூட்டர், மைக்ரோசாப்ட் வழங்கும் அப்டேட் பைல்களைப் பெற்று கையாளும் திறன் கொண்டிருந்தால், நிச்சயம் அதுவரை அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும். ஓராண்டு காலத்திற்குள், உரிமை இருந்தும், விண் 10க்கு மாற்றிக் கொள்ளாதவர்கள், பின் நாளில் அதற்கு மாற வேண்டும் என விரும்பினால், அப்போது மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
நூறு கோடி சாதனங்களில் விண்டோஸ் சிஸ்டம் இயங்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ள மைக்ரோசாப்ட் நிச்சயம் தன் உறுதி மொழியைக் காப்பாற்றும் என உறுதியாக நம்பலாம்.
கேள்வி: நான் எப்படி விண்டோஸ் 10 இலவச வழங்கலைப் பெற முடியும்?
பதில்: விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்கள் அப்டேட் KB3035583 பைலைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் அப்டேட் செய்திருந்தால், இந்த இலவச தொகுப்பிற்கான அப்டேட் பைல்களை, ஜூலை 29ல் இலவசமாகப் பெறலாம்.
கேள்வி; விண்டோஸ் 10 சிஸ்டத்தினை எளிதாக இன்ஸ்டால் செய்திடும் வகையில், ஐ.எஸ்.ஓ. பைல் ஒன்றினை மைக்ரோசாப்ட் தருமா?
பதில்: தரலாம். தராமலும் இருக்கலாம். மைக்ரோசாப்ட் இதுவரை இது குறித்து எந்த தகவலும் தரவில்லை.
கேள்வி: விண்டோஸ் 10 முன்னோட்ட சோதனை புரோகிராம் எப்போது முடிவிற்கு வரும்?
பதில்: ஜுலை 29, 2015ல் விண்டோஸ் 10 வழங்கப்பட்ட பின்னரும், விண்டோஸ் இன்சைடர் புரோகிராம் தொடரும். ஜனவரி, 2105ல் தரப்பட்ட இன்சைடர் புரோகிராம், அக்டோபர் 1, 2015ல் முடிவிற்க்கு வரும். அதன் பின்னர், இவை இயங்காது.
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எத்தனை வகை உள்ளன?
பதில்: சென்ற மே மாதம், மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தின் வகைகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. கம்ப்யூட்டர் மலரிலும் அது குறித்து விரிவான விளக்கங்கள் தரப்பட்டன. விண்டோஸ் 7 மற்றும் 8.1 சிஸ்டங்களின் வகைகளுக்கேற்ப, விண் 10 கிடைக்கும். அடிப்படையில் பொதுவாக விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் ப்ரோ என இருவகை உள்ளன. சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி இந்த அப்டேட் பைல்களைப் பெறலாம்.
கேள்வி: நான் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அன் இன்ஸ்டால் செய்திட முடியுமா?
பதில்: பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திடுகையில், விண்டோஸ் 8.1க்கான ரெகவரி பார்ட்டிஷன் அப்படியே மாற்றம் எதுவுமின்றி வைக்கப்படும். இந்த பார்ட்டிஷனை நீங்கள் நீக்காதவரை, நீங்கள் விண்டோஸ் 10னை அன் இன்ஸ்டால் செய்து, பழைய விண்டோஸ் 8.1க்குத் திரும்பலாம்.