குறைந்த விலையில் அறிமுகமாகும் Fitness Tracker
28 Jul,2015
உடல் ஆரோக்கியம், உடல் பயிற்சி என்பவற்றினை கண்காணிக்க உதவும் Fitness Tracker சாதனங்களை பல்வேறு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
இந் நிறுவனங்களின் வரிசையில் Acer நிறுவனமும் இணைந்து Liquid Leap+ எனும் சாதனத்தை வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது.
100 டொலர்கள் பெறுமதியான இச் சாதனத்தினை குறிப்பிட்ட காலத்திற்கு 80 டொலர்கள் எனும் சலுகை விலையில் விற்பனை செய்யவுள்ளது.
இதில் மின்னஞ்சல்கள், பாடல்கள், குறுஞ்செய்திகள் போன்வற்றினை கையாளும் வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மேலும் கறுப்பு, பச்சை, இளம் சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும் இச்சாதனத்தில் 0.94 அங்குல OLED தொடுதிரை, ப்ளூடூத் என்பன காணப்படுகின்றது.
தவிர இச் சாதனத்தை அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
விண்டோஸ் 10 சிஸ்டம் வரும் ஜூலை 29ல் வெளியாக இருப்பதனை முன்னிட்டு, அதில் இயங்கும் வகையில், தன் ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைத் தயார் செய்து, அதற்கான இன்ஸ்டாலர் பைல்களை, இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்னும் சில வாரங்களில், விண்டோஸ் 10 மக்களின் பயன்பாட்டிற்குக் கிடைத்துவிடும். மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள அனைத்து வழிகளையும் மேற்கொண்டுள்ளது. புதிய நவீன வசதிகளைப் பயனாளர்கள் பெறும் அதே வேளையில், அவர்கள் தங்கள் டேட்டா பைல்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதற்காக, தங்கள் வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 10ல் வசதியுடன் இயங்க, ஏ.வி.ஜி.
ஆண்ட்டி வைரஸ் நிறுவனம் அப்டேட் பைல்களை இப்போதே வெளியிடுகிறது. இவற்றை மேற்கொண்டு அப்டேட் செய்து, இப்போதே, விண்டோஸ் 10ல் இயங்கும் வகையில் தயாராக இருக்கலாம். இன்னும் சில வாரங்களில் இந்த அப்டேட் பைல்கள் கிடைக்கும். ஏ.வி.ஜி. பயனாளர்கள், தாங்களாக அப்டேட் செய்திடவும் தேவையில்லை. தானாகவே இத்தொகுப்புகள் அப்டேட் செய்யப்படும். தானாக அப்டேட் செய்திடும் செயல்பாட்டினை நிறுத்தி வைத்துள்ளவர்கள், இதற்கான இன்ஸ்டாலர் பைல்களைத் தரவிறக்கம் செய்து, தாங்களாகவே, அப்டேட் செய்து கொள்ளலாம்.
நீங்கள் ஏ.வி.ஜி. இன்டர்நெட் செக்யூரிட்டி, ஏவிஜி ஆண்ட்டி வைரஸ், இலவச ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைக் கொண்டிருந்தால், http://files-download.avg.com/inst/av/avg_isc_stb_all_2015_ltst_205.exe என்னும் தளத்தில் கிடைக்கும் பைலைப் பயன்படுத்த வேண்டும்.
ஏவிஜி செக்யூரிட்டி பேக்கேஜ் எவற்றையேனும் பயன்படுத்தி வருபவராக இருந்தால், http://files-download.avg.com/inst/zen/avg_gsr_stb_all_ltst_103.exe என்னும் தளத்தில் கிடைக்கும் அப்டேட் இன்ஸ்டாலரைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த இன்ஸ்டாலர் பைல்கள், தாமாகவே, உங்களுடைய பழைய பைல்களின் இடத்தில் புதிய இயக்க பைல்களைப் பதிந்து வைக்கும்.