திய வடிவமைப்பில் ZTE Axon Pro-அனைத்திற்கும் விண்டோஸ்
18 Jul,2015
ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் சிறந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவரும் நிறுவனமாக ZTE உள்ளது.
இந்த நிறுவனம் ZTE Axon Pro எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD தொடுதிரை, Octa Core Qualcomm Snapdragon 810 Processor என்பனவற்றுடன் பிரதான நினைவகமாக 4GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3000 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியின் விலையானது 450 டொலர்கள் ஆகும்.
அனைத்திற்கும் விண்டோஸ்
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகப் பெரிய சாதனை, அனைத்து சாதனங்களிலும் இயங்கும் வண்ணம் அது அமைக்கப்பட்டிருப்பதே ஆகும். Windows PCs, Windows tablets, Windows phones, Windows for the Internet of Things, Microsoft Surface Hub, Xbox One and Microsoft HoloLens என அவற்றை மைக்ரோசாப்ட் குறிப்பிட்டுள்ளது. சிஸ்டம் சாப்ட்வேர் தயாரிப்பில் இது ஒரு புதிய புரட்சி ஆகும். மைக்ரோசாப்ட் இதனை "broadest device family ever," என அழைக்கிறது. ”நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் ஒரே இயக்க முறைமையைப் பயன்படுத்தி புதிய சுகமான அனுபவத்தினைப் பெறுங்கள்” என்று அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இது ஒரு
பெரிய பலத்தினைத் தருகிறது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமே ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில் முதல் இடத்தைக் கொண்டதாக இருக்கப் போகிறது. தங்கள் கம்ப்யூட்டர்களில் இந்த சிஸ்டத்தினை இயக்குபவர்கள் நிச்சயம் தங்கள் மொபைல் போன் மற்றும் அது போன்ற சாதனங்களிலும் அதனைப் பதித்து இயக்க முடிவெடுக்கலாம். அப்போது ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் பின்னுக்குத் தள்ளப்படலாம்.
இதுவரை வெளியான விண்டோஸ் தொகுப்புகளில், இதுவே மிக மிக பாதுகாப்பான ஒன்றாகும். பல பாதுகாப்பு வளையங்களை இந்த இயக்க முறைமை கொண்டுள்ளதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் மட்டுமே, ஜூலை 29 முதல் விண்டோஸ் 10 கிடைக்கும். மற்ற சாதனங்களுக்கு என்று வழங்கப்படும் என்பதனை மைக்ரோசாப்ட் பின்னர் அறிவிக்கும்.
விண்டோஸ் 10 பெறுவது குறித்து மேலதிகத் தகவல்கள் விரும்புவோர் https://www.microsoft.com/en-us/windows/windows-10-faq என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகலாம்.