விரைவில் அறிமுகமாகும் iPad Pro-வேர்ட் டிப்ஸ்!-ரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்
15 Jul,2015
அப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய iPad Pro டேப்லெட்டினை விரைவில் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்து நொவம்பர் மாதமளவில் விற்பனைக்கு விடவுள்ளது.
12.9 அங்குல அளவு, 2732 x 2048 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட்டில் Apple A9X Processor பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர 256GB சேமிப்பு நினைவகமும் தரப்படவுள்ளது. எனினும் இந்த டேப்லெட் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில் Apple A9X Processor ஆனது சிறந்த வினைத்திறன் உடையது எனவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அறிமுகமாகவுள்ள iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றுடன் இந்த Processor அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேர்ட் டிப்ஸ்!-ரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்
ரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில் நாம் விரும்பும் சொற்களை அமைத்திட Find and Replace என்னும் டூலைப் பயன்படுத்துகிறோம். இதில் ரீ பிளேஸ் செய்திடக் கட்டளை கொடுத்தால், குறிப்பிட்ட சொல்லைக் கண்டறிந்து, அதன் இட த்தில் ரீபிளேஸ் டெக்ஸ்ட்டை அமைத்துவிட்டு, இந்த டூல் அடுத்த சொல் இருக்குமிட த்தில் சென்று நிற்கும். குறிப்பிட்ட இடத்தில், புதிய சொல் அமைக்கப்பட்டுவிட்ட தா என நமக்குத் தெரியாது. இதனை நாம் தெரிந்து கொண்டு செயல்பட, ஒரு வழி உள்ளது.
1. ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடவும்.
2. பின்னர், கண்ட்ரோல் + எப் கீகளை அழுத்தி, நாம் தேடும் சொல்லுக்கு இணையாக சொல் உள்ள இட த்தைக் கண்டறியவும்.
இப்போது எஸ்கேப் கீயை அழுத்தினால், பைண்ட் அண்ட் ரீ பிளேஸ் டயலாக் பாக்ஸ் மூடப்படும். இருப்பினும், நாம் தேடி
அறியப்பட வேண்டிய சொல்லில், கர்சர் நிற்கும்.
3. இப்போது கண்ட்ரோல்+ வி கீகளை அழுத்தினால், கிளிப் போர்டில் உள்ள ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட் பேஸ்ட் செய்யப்படும்.
4. அடுத்து Object Browser இல், நெக்ஸ்ட் அம்புக்குறி அல்லது கண்ட்ரோல் + பேஜ் டவுண் கீகளை அழுத்தினால், தேடும் சொல் இருக்கும் இட த்தில் கர்சர் நிற்கும். இனி மேலே 2 மற்றும் 3ல் காட்டப்பட்டுள்ள செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளவும்.