எதிர்கால கார்கள் எப்படி இருக்கும்? என்ன செய்யும்?
07 Jul,2015
வாகன ஓட்டியில்லாக்கார்கள் ஒருநாள் சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பின்னணியில் அத்தகைய கார்கள் உள்ளிட்ட ஓட்டுநர் இல்லா வாகனங்களை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் லண்டனில் இருக்கும் வாகன வடிவமைப்பாளர்கள்.
அப்படியான ஓட்டுநர் இல்லாக்கார்களுக்கு முன் கண்ணாடிகள் இருக்காது என்பது ஒரு வடிவமைப்பு சாத்தியம் என்கிறார் லண்டன் வடிவமைப்பு மாணவர் ஒருவர்.
இப்படியான தானியங்கிக் கார்கள் உருவாகும்போது பயணிகளின் சவுகரியத்தில் வாகன வடிவமைப்பாளர்களால் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்கிறார்கள் இந்த வடிவமைப்பு மாணவர்கள்.
இத்தகைய கார்கள் வெறும் கார்களாக மட்டுமில்லாமல், நடமாடும் அலுவலகமாகும்; விளையாட்டுக் கூடமாகும்; அவ்வளவு ஏன்? சொகுசான படுக்கையறையாகவும் மாறும் என்கின்றனர் இந்த எதிர்கால கார்களை இப்போதே வடிவமைப்பதில் தீவிர ஆர்வம் காட்டும் கலைத்திறன் மிக்க இந்த வாகன வடிவமைப்பாளர்கள்.