iPhone கமெராவை வினைத்திறன் மாற்றும் சாதனம்-அதிகரிக்கும் இணையப் பயன்பாடு

27 Jun,2015
 

அப்பிள் நிறுவனத்தினால் வடிவமைப்பு செய்யப்பட்டு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone கமெராக்கள் 8 மெகாபிகல்சகளை உடையதாகவே காணப்படுகின்றன.

ஆனால் இக் கமெராக்களை 20.2 மெகாபிக்சல்களை உடைய DSLR (Digital Single-Lens Reflex Camera) கமெராக்கள் போன்று அதி வினைத்திறன் உடையதாக மாற்றியமைப்பதற்குரிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை DxO நிறுவனம் பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதன் ஊடாக 30fps வேகம் கொண்டதும், 1080 Pixel உடைய வீடியோக்களை, அல்லது 120fps வரையான வேகம் கொண்ட 720 Pixel உடைய வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும்.

சட்டைப் பையினுள் வைத்து எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு சிறியதாக காணப்படும் இதன் விலையானது 599 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வத்தினால் அதிகரிக்கும் இணையப் பயன்பாடு


எளிமையான பயன்பாடு, குறைவான விலையில் ஸ்மார்ட்போன் ஆகியவற்றோடு மக்கள் மனதில் இணையம் குறித்த ஆர்வமே, கிராமப் புற மக்களிடம் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதற்கான முதன்மை காரணமாக இருந்து வருகிறது. இந்தியாவின் புதிய இணையப் பயனாளர்களில், இதுவரை இது நமக்குச் சரிப்படு வராது என்று ஒதுங்கி இருந்த மூத்த குடிமக்கள், கிராமப் புற குடிமக்கள், பெண்கள், ஆங்கிலம் அறியாத, மாநில மொழி மட்டுமே தெரிந்த மக்கள் மற்றும் மொபைல் போன்களைப் புதியதாகப் பயன்படுத்தத் தொடங்கு மக்கள் ஆகியோரைக் காண முடிகிறது.
ஒரு சிறிய நகரம் ஒன்றில், வீடுகளில் சிறிய வேலைகளைப் பார்த்து வாழ்க்கையைக் கழிக்கும், ஒரு பெண்மணி, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லாம், ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்; எனவே நானும் ஒன்று வாங்கினேன் என மிகவும் தீவிரமாக அது குறித்து கூறினார். இந்த போனின் மூலம், என் வேலைநேரம் கூடுதலாகி உள்ளது. என் வாடிக்கையாளர்களும் அதிகரித்துள்ளனர் என்று பெருமைப்படுகிறார்.
இன்னொரு வயதான பெண்மணி, “என்னுடைய குழந்தைகள் இதனை வைத்துக் கொண்டு பல விஷயங்களைக் கற்று வருகின்றனர். அவர்கள், எனக்கு, இந்த ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு, எப்படி இலவசமாக குரல் வழிச் செய்திகளை அனுப்பலாம் என்று கற்றுக் கொடுத்துள்ளனர். எப்போதும் மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பது நல்லதல்லவா” என்று கூறுகிறார்.

 

மேலே குறிப்பிட்டவர்களைப் போன்றவர்கள் தான், இப்போதைய இந்தியாவின் 30 கோடி புதிய இணையப் பயனாளர்களாக உள்ளனர். இதற்கு ஸ்மார்ட் போன் பெருகி வருவது மட்டுமின்றி, இவர்களின் ஆர்வமும் அடிப்படைக் காரணமாக உள்ளது. மெல்ல, மெல்ல, இந்திய இணையப் பயனாளர்களின் தேவைகளும், பயன்பாடும் மாறி வருகின்றன. தற்போது, இளைஞர்கள், அலுவலர்கள் மற்றும் நகரத்தவர்கள் ஆகியோர்களால் நிரப்பப்பட்டுள்ள, இணைய பயனாளர் மக்கள் தொகை, படிப்படியாக புதிய பரிமாணங்களைப் பெற்று வருகிறது.
ஸ்மார்ட் போன் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வருமானம், வயது, பாலினம் மற்றும் கல்வி என்ற அடிப்படையில் இல்லாமல், இவற்றைப் பயன்படுத்தும் மக்கள் புதிய பிரிவுகளிலிருந்து வரத் தொடங்கியுள்ளனர். இந்த மாற்றம் தற்போது வலுப்பெற்று வருகிறது. கிராமப் பயனாளர்கள் மத்தியில் புதிய ஆர்வத்தினையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இது செயற்கையாக வலிந்து திணிக்கப்பட்ட மாற்றம் அல்ல. இயற்கையாக, அவர்களின் வாழ்வோடு கலந்த மாற்றமாக உள்ளது.
ஸ்மார்ட் போன்களும், மொபைல் வழி இணையப் பயன்பாடும், மக்களிடையே உள்ள இடைவெளியை நிரப்பவும், புதிய வகை பொழுது போக்கு நிகழ்வுகளைத் தரவும் தற்போது பயன்படுத்தபடுகின்றன. இது வரவேற்கத்தக்க முன்னேற்றமும் மாற்றமுமாகும்.
இன்றைக்கு கிராமங்களிலிருந்தும், சிறிய நகரங்களிலிருந்தும், தொழில் மற்றும் அலுவலகக் காரணங்களுக்காக, பெரிய நகரங்களுக்கு வரும் மக்கள், தங்கள் பணிக்கு, ஸ்மார்ட் போன்கள் எந்த அளவிற்குத் துணை புரிகின்றன என்பதனை உணர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இத்துடன், சமுதாயத்தில் தன்னை உயர்நிலையில் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் உள்ளவர்களும், இந்த பரந்து விரிந்த உலகில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களும், ஸ்மார்ட்போனுக்கும், அதன் வழி இணையத் தொடர்புக்கும் மாறிக் கொண்டு வருகின்றனர்.
பாஸ்டன் கன்சல்டிங் குரூப், அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் இதனைத் தெளிவாக்குகின்றன. இந்தியாவில், 2013ல், இணையத்தைப் பயன்படுத்தியவர்களில், 60% பேர், 25 வயதுக்கும் குறைவானவர்களாவர். இது, வரும் 2018ல், 55% பேர், 25 மற்றும் அதற்கு அதிக வயதுடையவர்களாகவே இருப்பார்கள். முன்பு 30% பேர் மட்டுமே கிராமப் புற பயனாளர்களாக இருந்த நிலை, இனி 50% ஆக உயரும் என உறுதியாக எதிர்பார்க்கலாம். மொபைல் போன் வழி இணையத்தைத் தற்போது அணுகிய 60% பேர் இனி, 80% பேராக உயர்ந்திருப்பார்கள். பெண்கள் 28% லிருந்து, 35% ஆக உயர்ந்திருப்பார்கள். மாநில மொழிகளைப் பயன்படுத்திய 45% பேர், இனி 60% ஆக உயர்ந்திருப்பார்கள்.
பாஸ்டன் குரூப் இந்தியாவில் எடுத்த கணிப்பு படி, இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஜுன் 2014ல், 19 கோடி. இது 2018ல் 58 கோடியாக உயரும். ஆனால், IMAI என்னும் இந்திய அமைப்பின் கணக்குப்படி, இந்திய இணையப் பயனாளர் எண்ணிக்கை டிசம்பர், 2014ல், 30 கோடியைத் தாண்டி இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் தான், பயனாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 40% அதிகரித்து வருகிறது. 2014ல், 6 கோடியாக இருந்த எண்ணிக்கை, 2018ல், 28 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் ஏற்படும் இந்த அபரிதமான மாற்றத்திற்கான காரணங்களும் ஆராயப்பட்டன. நகரங்களில், ஸ்மார்ட் போன் பயன்பாடு, அதிக பட்ச, உச்ச நிலையை அடைந்துவிட்டது. கிராமப் புறங்களில், ஸ்மார்ட் போன் விற்பனை நிலையங்கள் அதிகம் திறக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் போன்களைக் கடைகளில் மட்டுமின்றி, இணைய தளங்கள் மூலமாகவும் பெறும் வசதி, கிராமப் புற மக்களிடம் ஒரு தெம்பை ஏற்படுத்தியுள்ளன. 4 அங்குலத்திற்கும் அதிகமான அளவில் திரை கொண்ட போன்கள், மக்களுக்குப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை உயிரோட்டத்துடன் தருகின்றன.
சராசரியாக 26 வயதினைக் கொண்ட இளைஞர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா கண்டறியப்பட்டுள்ளது. இதனாலேயே, சமீப காலங்களில், ஸ்மார்ட் போன் மற்றும் இணையப் பயன்பாடு உயர்ந்தது. தற்போது, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், மின் அஞ்சல், சேட் செயலிகள், உடனடி செய்தி அனுப்பும் வசதி ஆகியவை, மக்களை இணைக்கும் பாலங்களாக இயங்குவதால், எப்போதும் தங்கள் நட்புகளுடனும், உறவுகளுடனும், தொடர்பில் இருக்க விரும்புபவர்கள், ஸ்மார்ட் போன்களையும், இணையத்தையும் நாடுகின்றனர்.
இளைஞர்களுக்கு இணையாகப் பணித் தளங்களில் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட வயதானவர்களும், ஸ்மார்ட்போனும் இணையமும் அதற்கு அத்தியாவசியத் தேவை என உணர்ந்து கொண்டு மாறி வருகின்றனர்.



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies