பயனர்களால் திருத்தம் செய்யக்கூடிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி வேர்ட் டிப்ஸ்!-கண்ட்ரோல் கட்டளைகள்:
25 Jun,2015
கைப்பேசி உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்ற அதே சமயத்தில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகின்றன.
இதற்கிணங்க Bas van Abel எனும் நிறுவனம் பயனர்களால் திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்களைச் செய்யக்கூடிய புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.
FairPhone எனும் இக்கைப்பேசி Tantalum, வெள்ளீயம், தங்குதன் மற்றும் தங்கம் என்பவற்றினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இது அப்பிள் மற்றும் சம்சுங் தயாரிப்புகளுக்கு இணையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதேவேளை இந்த நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களில் 60,000 ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேர்ட் டிப்ஸ்!-கண்ட்ரோல் கட்டளைகள்:
கண்ட்ரோல் கட்டளைகள்:
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.
Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.
Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copyp).
Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.
Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.
Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.
Ctrl+g: ஓரிடம் செல்ல.
Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட.
Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .
Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க.
Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.
Ctrl+l : பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.
Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.
Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.
Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.
Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க
Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.
Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.
Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Save while texting).
Ctrl+t: பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி அமைக்க.
Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.
Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.
Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட.
Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.
Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.
Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.
புட் நோட் என்னும் அடிக்குறிப்பு
டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், அதில் சொல்லப்பட்டிருக்கும் தகவல்களை ஒட்டி, சில குறிப்புகளை, நாம் அடிக்குறிப்பாக அமைக்கிறோம். இவற்றை Footnote என அழைக்கிறோம். இவ்வாறு அடிக்குறிப்பு அமைக்கையில், டாகுமெண்ட்டில், எந்த இடத்தில் சொல்லப் பட்டிருக்கும் தகவலைச் சார்ந்து அடிக்குறிப்பு அமைக்கிறோமோ, அந்த இடத்தில் சிறிய குறியீடு ஒன்றை அமைப்போம்.
சில வேளைகளில், டாகுமெண்ட் முடிந்த பின்னர், சில அடிக்குறிப்புகளை இணைக்க விரும்புவோம். எப்போது அடிக்குறிப்புகளை இணைக்க விரும்பினாலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொண்டு, அடிக்குறிப்புகளை இடைச் செருகலாம்.
1. முதலில் டாகுமெண்ட்டினைத் திறந்து கொண்டு, எங்கு அடிக்குறிப்பிற்கான அடையாளத்தினை அமைக்க வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும்.
2. ரிப்பனில், References டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து, Footnotes குறிப்பில், Insert Footnote என்ற டூலைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கே, உங்கள் டாகுமெண்ட்டில், ஒரு footnote அடையாளம் காணப்படும். கர்சரின் இடைச் செருகல் அடையாளக் குறி, கீழாக உள்ள அந்த இடத்திற்குச் செல்லும்.
5. இங்கு உங்கள் அடிக்கிறிப்பினை, வழக்கமாக எப்படி டெக்ஸ்ட்டை பார்மட் செய்து அமைப்பீர்களோ, அதே போல அமைக்கவும். முடித்தபின், உங்களுடைய டாகுமெண்ட்டில், ஏதேனும் ஓர் இடத்தில் கிளிக் செய்திடவும். உங்கள் அடிக்குறிப்பு ஏற்கனவே, அந்தப் பக்கத்தின் கீழாக அமைக்கப்பட்டிருக்கும்.