வேர்ட் டிப்ஸ்ஸ2007 / 2010ல் வரிகளுக்கிடையே இடைவெளி:
2007 / 2010ல் வரிகளுக்கிடையே இடைவெளி: நீங்கள் எம்.எஸ்.வேர்ட் 2007 அல்லது 2010க்கு அண்மையில் மாறி இருந்தால், அதன் வரிகளுக்கு இடையேயான இடைவெளியில் சற்று மாற்றம் இருப்பதனை உணர்ந்திருப்பீர்கள். மாறா நிலையில், வரிகளுக்கு இடையே, வேர்ட் 2003ல் இருந்ததைக் காட்டிலும் அதிக இடைவெளி இருப்பதனைப் பார்க்கலாம். இதனை எப்படி நம் விருப்பப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
வேர்ட் 2003ல், மாறா நிலையில் வரிகளுக்கு இடையே இடைவெளி ஒன்று என செட் செய்யப்பட்டிருக்கும். ஆனால், வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010ல், மைக்ரோசாப்ட் இதனை 1.15 ஆக மாற்றி அமைத்துள்ளது. இது பலருக்குப் பிடித்திருக்கலாம். ஏனென்றால், வரிகள் ஒன்றுக்கொன்று இடம் விட்டு அமைந்து பார்ப்பதற்கு நன்றாகக் காட்சி அளிக்கும். ஆனால், சிலர் இதனைத் தங்கள் விருப்பப்படி மாற்ற விரும்புவார்கள். நீங்கள் ஒரு டாகுமெண்ட் முழுவதும், வரிகளுக்கு இடையே உள்ள இடைவெளியினை மாற்ற விரும்பினால், ஹோம் டேப்பில், Styles குரூப் செல்லவும். பின்னர், Change Styles அடுத்து Style Sets ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், பாய்ண்ட்டரை Style Sets என்பதில் காட்டப்படும் பல்வேறு ஸ்டைல் நிலைகளைப் பார்க்கலாம்.இதில் காட்டப்படும் Live Preview என்பதனைக் கிளிக் செய்து, நீங்கள் அமைக்க விரும்பும் மாற்றம், எப்படி டெக்ஸ்ட்டை அமைக்கும் என்பதனைப் பார்க்கலாம். இங்கு வரி இடைவெளியை 1.0 என அமைக்கலாம். இதனை மாறா நிலையில் அமைத்திட Change Styles என்பதில் கிளிக் செய்து, அதன் பின் Set as Default என்பதில் கிளிக் செய்திடவும்.
டாகுமெண்ட்டில் குறிப்பிட்ட வரிகளை மற்றும், நீங்கள் விரும்பும் வரி இடைவெளியில் அமைக்க விரும்பினால், மாற்ற விரும்பும் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, ரிப்பனில், பாராகிராப் (Paragraph) குரூப்பில், Line and Paragraph Spacing என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி மெனுவில், நீங்கள் விரும்பும் வரி இடைவெளியினைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தற்கேற்ற வகையில் இடைவெளி அமையும்.
கமெண்ட் வண்ணம் மாற்ற: வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் கமெண்ட்கள் தனி வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இந்த வண்ணத்தை வேறு வண்ணத்தில் மாற்ற, வேர்ட் தொகுப்பினில் வழி இல்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டத்தில் சில மாறுதல்கள் செய்து இதன் வண்ணத்தினை மாற்றலாம். அந்த வழியை இங்கு காணலாம்.
பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், குறிப்பிட்ட சில இடங்களில் நாம் குறிப்புகளை எழுதி அமைப்போம். மவுஸ் பாய்ண்ட்டரை குறிப்பு உள்ளது என்று காட்டும் இடத்திற்குக் கொண்டு சென்றால், சிறிய பாப் அப் பாக்ஸ் காட்டப்பட்டு, அதனுடன் தொடர்புள்ள கமெண்ட் காட்டப்படும். பொதுவாக, இந்த கமெண்ட்டின் வண்ணம் இளம் மஞ்சளாக இருக்கும். இப்போது இந்த வண்ணத்தை மாற்ற என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால், வேர்டில் இதனை மாற்ற வழி தரப்படவில்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டம் செட்டிங்ஸில் அமைக்கப்படும்
வண்ணத்தினை,வேர்ட் ஏற்றுக் கொள்கிறது. அதற்கான வழிகள்:
1. வேர்ட் தொகுப்பினை மினிமைஸ் செய்து கொள்ளவும். மற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் திறந்திருந்தாலும், அவற்றையும் சுருக்கவும்.
2. அடுத்து, டெஸ்க்டாப் திரையில் காலியாக உள்ள ஓர் இடத்தில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் Context Menu ஒன்றைக் காட்டும்.
3. இங்கு Properties தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், விண்டோஸ் Display Properties டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Appearance என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Item கீழ் விரி மெனுவினைப் பயன்படுத்தி, ToolTip தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு கீழ்விரி மெனுவில் வலது பக்கமாக உள்ள, Color indicator என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் ஒரு சிறிய கட்டத்தினைக் காட்டும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம்.
5. உங்களுக்கு எந்த வண்ணம் வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
6. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
வாட்ஸ் அப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அவைகளில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.
வாட்ஸ் அப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்..
ஆர்ச்சிவ் சாட்(Archive chat)
இந்த அம்சம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சாட்டினை தற்காலிகமாக மூடி வைத்து அதனினை பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை மேற்கொள்ள நீங்கள் மறைக்க விரும்பும் சாட்டினை அழுத்தி பிடித்து ஆர்ச்சிவ் சாட் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
ம்யூட் க்ரூப் சாட் (Mute Group chat)
சில சமயங்களில் க்ரூப் சாட்களின் நோட்டிபிகேஷன்கள் வெறுப்பேற்றலாம், அது போன்ற நேரங்களில் Menu button - Mute Button - Group Name - ஐ க்ளிக் செய்யலாம்.
லாஸ்ட் சீன் (Last seen)
நீங்கள் கடைசியாக வாட்ஸ் அப் பயன்படுத்திய நேரத்தினை வாட்ஸ் அப் தானாகவே காண்பிக்கும், இதை நிறுத்த Settings-- Account -- Privacy --Last seen Option- ஐ க்ளிக் செய்து Nobody என்ற பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.
ஷார்ட்கட் (Shortcut)
சாட் மெனுவினை அழுத்தி பிடித்தால் அவை ஷார்டகட்டாக ஹோம் ஸ்கிரீனில் தெரியும். ஒரு வேலை சைனோஜென் இயங்குதளத்தினை பயன்படுத்தினால் செயலியை டிராக் செய்து தனி ஃபோல்டரில் பாஸ்வேர்டு செட் செய்தும் வைத்து கொள்ளலாம்.
ஆட்டோ டவுன்லோடிங் (Auto Downloading)
வாட்ஸ் அப் மீடியா ஃபைல்கள் தானாக டவுன்லோடு ஆவதை தடுக்க செட்டிங்ஸ் -- சாட் செட்டிங்ஸ் -- மீடியா ஆட்டோ டவுன்லோடு என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து கொள்ளலாம்.
குறுந்தகவல் (Message)
நீல நிற அம்பு குறி தெரிந்தால் உங்களது குறுந்தகவல் படிக்கப்பட்டு விட்டது என அர்த்தமாகும், ஆனால் சரியான நேரத்தினை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்தி பிடித்து (i) ஐகானை க்ளிக் செய்தால் போதுமானது.
பேக்கப் (Backup)
வாட்ஸ்அப் சாட்களை பேக்கப் செய்ய Settings--chat settings-- backup conversation Option - ஐ க்ளிக் செய்தால் போதுமானது.
லாக் வாட்ஸ்அப் தகவல்களை பாதுகாப்பாக வைக்க சந்தையில் கிடைக்கும் செயலிகளை கொண்டு வாட்ஸ் அப் செயலியை லாக் செய்து கொள்ளலாம்
புகைப்படங்கள் (Photos)
வாட்ஸ் அப் புகைப்படங்களை கேலரி அல்லது கமெரா ரோலில் வைத்து கொள்வது சில சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அவ்வாறானவர்கள் புகைப்படங்களை வாட்ஸ்அப் செயலி மூலம் மறைத்து வைத்து கொள்ளலாம்.
போன் நம்பர் (Phone number)
சிம் கார்டுகளை புதிதாக மாற்றும் போது வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம், மாற்றாக Settings -- Account -- Change Number Option-ல் புதிய நம்பரை என்டர் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்
எக்ஸெல் டிப்ஸ்ஸடெக்ஸ்ட் வடிவமைப்பு:
டெக்ஸ்ட் வடிவமைப்பு: தாங்கள் அமைத்திடும் ஒர்க் ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும்.
இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும்.இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.
ஹெடர் மற்றும் புட்டர்: எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது. ஒன்று அல்லது இரண்டு ஒர்க் ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும். அதுவே, பல ஒர்க் ஷீட்கள் அடங்கிய ஒர்க்புக்காக அமைந்து, அவை அனைத்திலும் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பதாக இருந்தால், அந்த வேலை சற்று நேரம் எடுக்கும் செயலாக அமையும். இதனை எப்படிச் சந்திப்பது எனப் பார்க்கலாம்.
இது ஒன்றும் கடினமான வேலை அல்ல. அனைத்து ஒர்க் ஷீட்களையும் ஒரு குழுவாக எண்ணி செயல்பட்டால், இது மிகவும் எளிதாக அமையும்.
1. முதலில் எந்த ஒர்க் ஷீட்களில் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பது என்பதனை முடிவு செய்து கொள்ளவும்.
2. அந்த வரிசையில் உள்ள முதல் ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், கடைசி ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கும் வரை ஷிப்ட் கீயை அழுத்திப் பிடிக்கவும். இப்போது பல ஒர்க் ஷீட்கள் தேர்ந்தெடுக்கப்படும். இதனை உணர்த்திக் காட்ட, எக்ஸெல் புரோகிராம், Group என்ற சொல்லை தன் டைட்டில் பாரில் காட்டும்.
4. இனி, நீங்கள் விரும்பியபடி, ஹெடர் அல்லது புட்டரை அமைக்கவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த ஒர்க் ஷீட்கள் அனைத்தும் அதே போல் அமைக்கப்படுவதனைக் காணலாம்.
டேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அடிக்கோடுகளை Underline பகுதியில் காணலாம்.