குளிர்சாதனப் பெட்டியின் அடுத்த லெவல்.!பிரவுசர் பயன்பாட்டில் குரோம்
20 Jun,2015
நம்ம ஊரு ஐஸ் பெட்டி ஞாபகத்துல இருக்குதா.. அதாங்க வெள்ளை தெர்மொக்கோல் பெட்டிகுள்ள ஐஸ் கட்டிகளை நிரப்பி, பொருட்களை போட்டு குளிர்ச்சியா வச்சிருப்பாங்களே, அதேதான்.!அப்படி ஆரம்பிச்சது, இப்போ சிங்கிள் டோர், டபுள் டோர், சைட் பை சைட் ரெஃப்ரிஜீரேட்டர் என வகை வகையாக வளர்ந்து கொண்டே போனாலும், 'சரி போதும்' என்று தொழில்நுட்பம் நிறுத்திக் கொண்டதாய் சரித்திரமே இல்லை. அப்படியாக உருவானதுதான் இந்த பயோ ரோபட் ரெஃப்ரிஜீரேட்டர்..!பீர் ஊற்றினாலும் எழுதும் இந்த பேனா..!இந்த சாதனம் பயோ பாலிமர் என்ற ஒரு ஸ்பெஷல் ஜெல் மற்றும் அதிலிருந்து வெளிப்படும் ஒளி மூலமாக பொருட்களை குளிர வைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது, ஏனைய குளிர்சாதன பெட்டிகளில் இருப்பது போன்று எந்த விதமான மோட்டரும் இதற்கு தேவையில்லை, அதனால் இது இயங்க மின்சாரம் துளிக்கூட தேவையில்லை.வெறும் ஜெல் மட்டும்தான் உள்ளடக்கம் என்பதால் 90 % இடத்தையும் பொருட்கள் வைக்க பயன்படுத்த முடியும். இதை நேராக அல்லது சாய்வாக என சுவற்றில் எப்படி வேண்டுமானாலும் பொருத்தி வைத்துக் கொள்ளலாம்.போன் பைத்தியம் வருது வழி விடுங்கோ..!இதில் பயன்படுத்தப்படும் பயோ பாலிமர் ஜெல் ஆனது வாசனையற்றது மற்றும் பிசுபிசுப்பு தன்மையற்றது. குளிரூட்டப்பட வேண்டிய பொருளை இந்த ஜெல்லுக்குள் திணித்து விட்டால், பதப்படுத்தும் வேலை படு ஜோராக நடக்கும். இந்த பயோ ரோபட் ரெஃப்ரிஜீரேட்டரை பார்க்கும் போது, குளிர் சாதனப்பெட்டியின் ஆரம்ப காலத்துக்கே போன மாதிரி இருக்கும், ஆனால் இது முழுக்க முழுக்க வாருங்காலத்திற்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்ப கருவியாகும்..!
பிரவுசர் பயன்பாட்டில் குரோம்
குரோம் பிரவுசரின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து, தற்போது பிரவுசர் சந்தையில் 25% க்கும் மேலாக இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்கள், எப்படியும் இன்னும் 8 மாதத்திற்குள் மாறியாக வேண்டும் என்ற நிலையில் இருக்கையில், குரோம் அதிக ஆரவாரமின்றி இந்த சாதனையை ஈட்டியுள்ளது. பிரவுசர் மற்றும் இணைய செயல்பாடுகளைக் கவனித்து வரும் நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சென்ற மாதம், 25% என்ற அளவினைத் தாண்டியது.
பயர்பாக்ஸ் சென்ற 2010 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இந்த இலக்கை எட்டியிருந்தது. அதன் பின்னர் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது. சென்ற ஏப்ரல் மாதத்தில் இதன் பங்கு 11.7% ஆக இருந்தது.
வரும் நவம்பரில், குரோம் பிரவுசர் 30% பங்கினைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 55.8% பங்கினைக் கொண்டு, இன்னமும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து இதன் பல்வேறு பதிப்புகளுக்கு, சப்போர்ட் நிறுத்தப்படும் என்ற தகவலை வழங்கி வருகிறது. வரும் 2016 ஆம் ஆண்டில், ஜனவரி 12ல், விண்டோஸ் விஸ்டாவில் மட்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை சப்போர்ட் செய்திடும். இ.எ. பதிப்பு 11, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 ல் மட்டும் சப்போர்ட் செய்யப்படும். விண்டோஸ் 10 அறிமுகமான பின்னர், அதிலும் இ.எ. பதிப்பு 11 சப்போர்ட் செய்யப்படும்.
விண்டோஸ் 10 வெளியான பின்னர், எட்ஜ் பிரவுசருக்கு முக்கியத்துவம் தரப்படும். அனைத்து கம்ப்யூட்டர்களும், விண்டோஸ் 10க்கு உயர்த்தப்பட வேண்டும் என்பதனை மைக்ரோசாப்ட் இலக்காகக் கொண்டுள்ளதால், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு சப்போர்ட் இருந்தாலும், எட்ஜ் பிரவுசர் பயன்பாடு மட்டுமே உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், விண்டோஸ் 10க்கு உடனடியாக மாற விரும்பாதவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தினையும், அதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பதிப்பு 8 ஐ சில காலம் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.