விண்டோஸ் 10க்கு மாற பத்து காரணங்கள்-வேர்ட் டிப்ஸ்ஸட்ராப் ஷேடோ:

14 Jun,2015
 

 


விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் மக்களுக்குக் கிடைக்க இருக்கிறது. இந்த தகவலைக் காட்டிலும், அது முற்றிலும் இலவசமாய்க் கிடைக்க உள்ளது என்ற தகவலே பலரை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. கம்ப்யூட்டர் மலர் இதழ்ப் பிரிவிற்குக் கிடைக்கும் கடிதங்கள் மற்றும் தொலைபேசி விசாரிப்புகளில், விண்டோஸ் 10க்கு மாறுவது பற்றியே உள்ளன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. யார் வேண்டாம் எனச் சொன்னாலும், இலவசமாகக் கிடைப்பதால், அது என்ன என்றுதான் பார்த்துவிடுவோம் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும், ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 10 என்னும் மேடைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை எடுத்துக் கொண்டால், அடுத்து மைக்ரோசாப்ட் விதிக்கும் எதனையும் நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இருப்பினும், பல வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விண் 10க்கு மாறுவதற்கான காரணங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

 

1. விண்டோஸ் 8 மற்றும் 8.1ல் கிடைக்கப்பெற்ற செயலிகளைத் தாங்கி நின்ற “உயிருள்ள ஓடுகள்” (“live tile” UI”) என்னும் யூசர் இண்டர்பேஸ், விண் 10ல், ஸ்டார்ட் மெனுவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, அதனை முழுத் திரையில் காணும் வசதியுடன் தரப்பட்டுள்ளது. இந்த வகையில், விண் 8 வழங்கிய நவீன தொடு உணர் திரை நுட்பம் மற்றும் பயனாளர்கள் அதிகம் விரும்பிய ஸ்டார்ட் மெனு, விண் 10ல் தரப்பட்டுள்ளன. இந்த இரண்டு வெவ்வேறான உலகங்களும் விண்டோஸ் பட்டன் மூலம் இணைக்கப்பட்டு, நமக்குப் ”பழக்கமான பயனாளர் இடைமுகத்தினைத்” தருவதாக அமைக்கப்பட்டுள்ளது.
2. இது “டூ இன் ஒன்” (2 in 1) சிஸ்டம் போல உள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்தில், டச் ஸ்கிரீன், கீ போர்ட் அல்லது மவுஸ் என எதனையும் பயன்படுத்தலாம். உங்கள் சாதனம் டேப்ளட் அல்லது லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் என்ற வகையில் எத்தகையது என்பதைப் பொறுத்து நீங்கள் பயன்பாட்டினை மேற்கொள்ளலாம். தொடு திரை எனில், அனைத்தையும் பயன்படுத்தலாம். மிகத் துல்லியமாக இயங்கக் கூடிய டச் பேட் கொண்ட லேப்டாப் எனில், விண்டோஸ் 10 நிறைய டச் பேட் அசைவுகளைத் தருகிறது. இவற்றின் மூலம், நாம் திறந்து வைக்கப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்களை இயக்கலாம்.
3. உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை, விண்டோஸ் 7 லிருந்து நேரடியாக அப்கிரேட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 8 அல்லது 8.1 சென்று, பின் அதன் பின்னர், விண் 10 சிஸ்டத்தினைப் பதிய வேண்டியதில்லை.
4. விண்டோஸ் 8லிருந்து நேரடியாக, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 8.1 க்குச் சென்று, பின்னரே விண்டோஸ் 10க்குச் செல்ல வேண்டும் என்பதனை இங்கு குறிப்பிட வேண்டும்.
5. அவுட்லுக் செயலியில், வேர்ட் தொகுப்பின் அனைத்து திறன்களும் தரப்பட்டுள்ளன. இப்போது டேபிள்களை இணைக்கலாம்; படங்களை இடைச் செருகலாம்; மற்றும் இது போல பல வேர்ட் வேலைகளைச் செயல்படுத்தலாம். மிகவும் மேம்படுத்தப்பட்டு அவுட்லுக் கிடைக்கிறது. இன்றைய வர்த்தக உலகம், மின் அஞ்சல்களை அதிகம் சார்ந்துள்ளதால், அதில் மேம்பாடு தரப்படுவது நல்லது.
6. நாம் பயன்படுத்தும் தன்மைக்கேற்ப, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம்.
7. விண்டோஸ் 10 உடன் வரும் பிரவுசர் மிகவும் அதிகமான பாதுகாப்பு உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்படும் இணைய தளங்களை எடுத்துத் தருவதற்கான தொழில் நுட்பத்துடன் இந்த பிரவுசர் உள்ளது. அத்துடன் பழைய தொழில் நுட்பத்தில் உருவான தளங்களையும் காட்டுகிறது. அப்ளிகேஷன்களை எடுத்துத் தருகிறது.
8. மொபைல் சாதனங்கள் பயன்பாட்டில் புழங்கப்படும் தொழில் நுட்ப வசதிகள் இதிலும் தரப்பட்டுள்ளன. டேட்டா பாதுகாப்பு, தொலைந்து போன கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாவினைத் தொலைவிலிருந்து அழிப்பது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
9. விண்டோஸ் 10 மற்றும் விண்டோஸ் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குத் தேவையான அனைத்தும், இனி ஒருங்கிணைந்த விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்க இருக்கிறது. விண்டோஸ் ஸ்டோருக்குள்ளாகவே, ஒரு நிறுவனம் தனக்கென ஒரு பிரிவு ஒன்றை ஏற்படுத்தி, தங்களுக்கு மட்டுமான அப்ளிகேஷன்களை வைத்துப் பயன்படுத்தலாம்.
10. இறுதியாக ஒன்று. விண்டோஸ் 10 சிஸ்டத்தில் விண்டோஸ் ஹலோ (Windows Hello) என்று ஒரு வசதி தரப்படுகிறது. இதில் பலவகை அடுக்கு பாதுகாப்பு, லாக் இன் செய்திடுகையில் கிடைக்கும். அவை என்ன என்ன என்று இனி தெரியவரும்.
மேலே குறிப்பிட்ட காரணங்களுக்காக நாம் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம்

வேர்ட் டிப்ஸ்ஸட்ராப் ஷேடோ:


ட்ராப் ஷேடோ: வேர்ட் டாகுமெண்ட்டில் பாராக்களுக்கு பார்டர் அமைக்கலாம் என்பதனைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதனுடன் இன்னும் ஒரு படி மேலே சென்று, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டிற்கு எப்படி ட்ராப் ஷேடோ அமைத்து அழகு படுத்தலாம் எனப் பார்க்கலாம். ட்ராப் ஷேடோ (drop shadow) என்பதுவும் ஒருவகை பார்டரே. இது இரண்டு பக்கங்களில், மற்ற இரு பக்கங்களில் இருப்பதைக் காட்டிலும் சற்று அகலமாக இருக்கும். இது அச்சில் வரும்போது, இந்த குறிப்பிட்ட டெக்ஸ்ட் மட்டும் மற்றவற்றிலிருந்து சற்று உயரமாகத் தனியே காட்டப்படும். இதனை எப்படி அமைப்பது?
1. எந்த பாராவில் ட்ராப் ஷேடோவினை இணைக்க வேண்டுமோ, அதில் கர்சரை நிறுத்தவும்.
2. பார்மட் (Format) மெனுவில் இருந்து Borders and Shading என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Borders டேப் திறக்கப்பட்ட நிலையில் Borders and Shading டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
3. இங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டவை காட்டப்படும் இடது புறமான பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.
4. தொடர்ந்து Width drop-down பட்டியலில், கோடு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஸ்கிரீன் டிப் தோற்றம்:

 

வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும்.வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும்.
4. இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
காப்பி அல்லது மூவ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்tபோது, குறிப்பிட்ட டெக்ஸ்ட்டினை கிளிப் போர்டில் வைத்திருப்போம். அதனைப் பல இடங்களில் ஒட்ட வேண்டியதிருக்கும். இது சில வேளைகளில் படமாகக் கூட இருக்கலாம். அப்போது வேறு ஒரு டெக்ஸ்ட்டை எடுத்து இன்னொரு இட்த்தில் ஒட்ட எண்ணும்போது அதனை காப்பி செய்தால், கிளிப் போர்டில் உள்ள டெக்ஸ்ட் அல்லது படம் மறைந்துவிடும். ஆனால், அதனை மீண்டும் காப்பி செய்வது சற்று நேரம் எடுக்கும் செயலாக இருக்கலாம். அப்படிப்பட்ட வேளைகளில், கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடாமலேயே, டெக்ஸ்ட்டை இன்னொரு இட்த்தில் பேஸ்ட் செய்திடும் வழியைக் கடைப்பிடிக்கலாம்.
1. முதலில் வேறு ஒரு இடத்தில் ஒட்ட வேண்டிய டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. தொடர்ந்து Shift+F2 கீகளை அழுத்தவும்.
3. அடுத்து, கர்சரை, டெக்ஸ்ட்டை எந்த இடத்தில் ஒட்ட வேண்டுமோ, அங்கு கொண்டு சென்று அமைக்கவும். இனி, என் டர் தட்டினால், டெக்ஸ்ட் கர்சர் இருக்கும் இடத்தில் ஒட்டப்படும்.Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies