Sim Cardல் உள்ள தகவல்களை அழிந்துவிட்டால், மீட்ப்பது எப்படி?
04 Jun,2015
எமது 3G மற்றும் GSM போன்களின் சிம் காட்டில் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது சிம்மில் சேமித்த போன் புக் நம்பர்ஸ் கோல் கிஸ்ட்ரி மற்றும்
எஸ்சமஸ் (Phonebook,sms,call history) போன்றவற்றை நாம் அழித்திருந் தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை உபயோ கிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.
இவ் மென்பொருளை நாம் விலை கொடுத்து வாங்கினால் நாம் சிம் வாங்கியதில் இருந்து அழித்த அனைத்து தகவல்களையும் பெறலாம். Trail Virsionனை நாம் இலவசமாக உபயோ கிக்கலாம். இதன் மூலம் நாம் கடைசியாக அழித்த இரு தகவல்களினை மாத்திரம் மீட்கலாம்.
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய.
http://www.mediafire.com/download/skyx0y79qamp65k
மைக்ரோசாப்ட் தரும் ஒருங்கிணைந்த ஸ்டோர்
விரைவில் வெளியிடப்பட இருக்கும் விண்டோஸ் 10 இயக்க முறைமையுடன் பல புதிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் ஏற்படுத்த இருக்கிறது. அந்த வரிசையில் தன் அப்ளிகேஷன் புரோகிராம்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள் மற்றும் பிறவற்றைப் பெற்றுக் கொள்ள, வாங்கிட, ஒரே ஒருங்கிணைந்த ஸ்டோர் ஒன்றை உருவாக்குகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்களுக்கு வேண்டிய அனைத்தையும் இந்த ஸ்டோரில் வாங்கிக்
கொள்ளலாம். இதுவரை, பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஏற்ப, தேவையான அப்ளிகேஷன் தன்மைக்கேற்ப, வெவ்வேறு முகவரிகளில் உள்ள ஸ்டோர்களை நாட வேண்டியதிருந்தது. எனவே, மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன் புரோகிராம்களை தங்கள் டேப்ளட் பி.சி., லேப்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் ஆகியவற்றில் பயன்படுத்த அனைத்து தேவைகளையும் ஒரே ஸ்டோரில் பெறலாம். இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஆப்பிள் மற்றும் கூகுள் போல ஒரே ஒரு ஸ்டோருடன் இயங்க உள்ளது.
இதனால், வாடிக்கையாளர்களுக்கும் பயன் கிடைக்கும். ஒரு சாதனத்திற்கென வாங்கிய அப்ளிகேஷனை, மைக்ரோசாப்ட் சிஸ்டம் இயங்கும் வேறு சாதனங்களிலும் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, எக்ஸ் பாக்ஸில் இயங்கும் வகையில் வாங்கப்பட்ட கேம்ஸ், விடியோ பைல்களை டேப்ளட் பி.சி. மற்றும் விண்டோஸ் போன்களில் இயக்கலாம்.
விண்டோஸ் 10 இன்னும் சோதனைத் தொகுப்பு என்ற அளவில் தான் உள்ளது. எனவே, மேலே சொல்லப்பட்ட அனைத்து இயக்கமும், விண் 10 முறையாகப் பயனாளர்களுக்கு அறிவிக்கப்படுகையில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.