கூகுள் நீக்கிய திருட்டு எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள்

27 May,2015
 

             


நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், இதற்கென நீங்கள் தரவிறக்கம் செய்து, பதிவு செய்து கொண்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில் பல, உங்கள் கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக இருக்கலாம். இந்த புரோகிராம்கள், நீங்கள் இணைய உலாவில் இருக்கையில், விளம்பரங்களைக் காட்டுபவையாக உள்ளன. அந்த விளம்பரத்தில் சிக்கி, அவற்றில் கிளிக் செய்கையில், அவை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அப்படியே சுருக்கி நகலெடுத்து அனுப்புகின்றன. இதனால், அந்த இணைய தளங்கள் பாதுகாப்பானவையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் தரும் தகவல்கள் இந்த விளம்பரங்களால் திருடப்படுகின்றன.

 

லெனோவா நிறுவனம் அண்மையில் விற்பனை செய்த கம்ப்யூட்டர்களில், Superfish என்ற நிறுவனத்தின் விளம்பர புரோகிராம்களை இணைத்து விற்பனை செய்தது. இந்த புரோகிராம்கள், நாம் தேடல் சாதனத்தைப் பயன்படுத்துகையில், இடையே அதன் விளம்பரங்களையும் இணைத்துக் காட்டின. அதில் கிளிக் செய்திடும் வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்பின.
இந்த பிரச்னை வெளிவந்தவுடன், கூகுள் நிறுவன ஆய்வாளர்கள், பெர்க்லீ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இது குறித்து ஆய்வு செய்தனர். முடிவுகள் மிகவும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தன. குரோம் பிரவுசருக்கான, கூகுள் அனுமதித்த, எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், மூன்றில் ஒரு பங்கு புரோகிராம்கள் ஏமாற்றுபவையாகவும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களாகவும் இருப்பது தெரிய வந்தது. உடனே, கூகுள் அவற்றில் 200க்கும் மேற்பட்டவற்றை தன் தளத்திலிருந்து நீக்கியுள்ளது. ஏறத்தாழ 1.4 கோடி பயனாளர்கள், 192 எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களால் பாதிக்கப்பட்டுள்ளது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இனி வரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், இதைப் போல் செயல்படாமல் இருக்க, புதிய தொழில் நுட்பத்தினை கூகுள் ஆய்வாளர்கள் புகுத்தியுள்ளனர்.
கூகுள் இணைய தளங்களைப் பார்வையிடும் பயனாளர்களில், 5 சதவீதம் பேர் இது போல குறைந்தது ஒரு புரோகிராமினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிலர் இரண்டு அல்லது நான்கு புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. விண்டோஸ் மற்றும் ஓ.எஸ்.எக்ஸ் என இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் கம்ப்யூட்டர்களிலும் இந்த மோசமான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பரவியுள்ளன.
பொதுவாக, கூகுள் நிறுவனம், இது போல, விளம்பரங்களை இடைச் செருகுவதைத் தடுப்பதில்லை. ஆனால், அவற்றிற்கான வரைமுறைகளை, நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இந்த விளம்பரங்களில் இருமுறை கிளிக் செய்தால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பது, நிபந்தனைகளில் ஒன்றாகும். ஆனால், பல புரோகிராம்கள் இந்த முக்கிய நிபந்தனையை நிறைவேற்றாததால், இவற்றின் திருட்டுத்தனம் வெளியே வந்தது. கூகுள் தற்போது அத்தகைய புரோகிராம்களை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


என்னைப் பின் தொடராதே

பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கையில், பல்வேறு புரோகிராம்கள் மற்றும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், நம் தேடல்களைக் கண்காணிக்கின்றன. நம் தேடலுக்கேற்ற வகையில், விளம்பரங்களை நாம் எந்த தளம் சென்றாலும் காட்டிக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக் காட்டாக, கேமரா ஒன்று வாங்குவதற்காக ப்ளிப் கார்ட் அல்லது அமேஸான் தளத்திற்கு ஒருமுறை நீங்கள் சென்று தேடினால், அதன் பின் நீங்கள் எந்த இணைய தளம் சென்றாலும், பேஸ்புக் போன்ற சமூக இணையதளத்திற்குச் சென்றாலும், அந்த கேமரா குறித்த விளம்பரம் உங்களுக்குக் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இதைத்தான் “நம்மைப் பின் தொடரும் வழி” என்று இணைய மொழியில் சொல்கிறோம். நமக்கு இது விருப்பமில்லை எனில், பிரவுசரில் “Do Not Track” என்று ஒரு வசதி உள்ளது. அதனை இயக்கிவிட்டால், இது போன்ற விளம்பரங்கள் நம்மைப் பின் தொடராது.

 

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், “Do Not Track” வசதியை மாறா நிலையில், சிஸ்டம் கட்டமைப்பிலேயே வைத்து வெளியிட்டது. இதனைத் தனி நபர் சுதந்திரம் விரும்பும் அனைவரும் வரவேற்றனர். ஆனால், விளம்பரத்தின் அடிப்படையில் இணைய தளங்களை இயக்கும் நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இணையம் சார்ந்த தொழில் பிரிவில் இது குறித்து பல விவாதங்கள் ஏற்பட்டு, இதற்கான வரைமுறை ஒன்றை, பொதுவான இணைய அமைப்பு World Wide Web Consortium (W3C) வகுத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில், பிரவுசர் ஒன்றில், “Do Not Track” வசதி தரப்பட்டுள்ளதா, அதனை வாடிக்கையாளர்கள் அமைத்துக் கொள்ள இயலுமா என்பதனைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த வசதியை இயக்குவதும், நிறுத்தி வைப்பதும், வாடிக்கையாளர்களின் விருப்பத்தினைப் பொறுத்துத்தான் இருக்க வேண்டும் எனவும், பிரவுசரை வழங்கும் நிறுவனத்தின் விருப்பத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வருங்கால பிரவுசர்களில் இந்த “Do Not Track” வசதி வாடிக்கையாளர்களின் விருப்பப்படி அமைக்கும் வகையில் தரப்படும் என அறிவித்துள்ளது. DNT வசதி மாறா நிலையில், பிரவுசர்களில் தரப்பட மாட்டாது. வாடிக்கையாளர்கள், தங்கள் கம்ப்யூட்டரை முதன் முதலில் செட் செய்திடும்போதே, இதனையும் செட் செய்து கொள்ளலாம். அதே போல, விண்டோஸ் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்துகையிலும், செட் செய்து கொள்ள வேண்டும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies