சூரிய சக்தி விமானங்கள் மூலம் இலவச இணைய சேவை வழங்க பேஸ்புக் புதிய திட்டம்
05 Mar,2015
சூரிய சக்தி விமானங்கள் மூலம் இலவச இணைய சேவை வழங்க பேஸ்புக் புதிய திட்டம்
இந்தியாவில் சூரிய சக்தியில் இயங்கும் விமானங்கள் மூலம் கிராமப்புற, இணையத் தொடர்பில்லாத பகுதிகளில் இலவச இணைய வசதியை வழங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து இண்டர்நெட்.ஓஆர்ஜி என்ற பெயரில் இலவச இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிடும் இலவச வலைதளங்களின் பட்டியலில் பேஸ்புக் முன்னணி வகிக்கிறது.
ஆனால் இந்தியாவின் பல கிராமப்புறங்களில் இணைய சேவைக்கு அடிப்படைத் தேவையான ஒளியிழை வசதி இல்லாத நிலையில் விமானம் மூலம் இணைய வசதியை வழங்கும் இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்குமென்று எதிர்பர்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த விமானம் சூரிய சக்தியில் இயங்குவதால் எரிபொருள் சிக்கல் இல்லை. மேலும் இது மிக உயரத்தில் சுற்றி வருவதால் அதிக பரப்பளவிலான பகுதிகளுக்கு இணைய சேவையை வழங்க முடியும்“ என்று தெரிவித்தார்.
இந்த திட்டம் இந்தியா மட்டுமின்றி ஆப்பிரிக்கா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் செயல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.