விண்வெளியில் ஏழு மணிநேரம் நடந்து திரிந்த அமெரிக்கர்கள்
02 Mar,2015
விண்வெளியில் ஏழு மணிநேரம் நடந்து திரிந்த அமெரிக்கர்கள்
விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
இது பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ளது. இந் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து அந்த பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கு வணிக ரீதியில் வரவுள்ள விண்கலங்களை நிறுத்தி வைக்கவும், தகவல் பரிமாறிக்கொள்ளவும் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
இதற்காக அமெரிக்க விண்வெளி வீரர்கள் பேரி பட்ச் வில்மோர், டெர்ரி வர்ட்ஸ் ஆகிய இருவரும், விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்.
அவர்கள் விண்வெளியில் 7 மணி நேரம் நடந்து இந்த வேலைகளை கவனித்துக் கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.