புதிய வைரஸ் ஹெலுவா--மொபைஜெனி

11 Jan,2015
 

   

          


மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் புதியதாக, வேகமாகப் பரவி வரும் வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பெயர் helluva. இது பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல் ஒன்று மூலம் வேகமாகப் பரவுகிறது. இது பாதித்த கம்ப்யூட்டரை, வைரஸை அனுப்பியவர்கள், முழுமையாகத் தங்கள் கம்ப்யூட்டரில் கொண்டு வர முடியும். தற்போதைக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கம்ப்யூட்டர்களில் தான் இது தென்பட்டுள்ளது என்று மைக்ரோசாப்ட் கருத்து தெரிவித்தாலும், இது பரவலாகவே பன்னாடுகளில் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் சர்வர் 2008, விண்டோஸ் 8, விண்டோஸ் 7, சர்வர் 2012, விண்டோஸ் ஆர்.டி. மற்றும் எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்டர்களை மிக எளிதாக இது பாதிக்கிறது.

 

இதில் சிக்காமல் இருக்க, நீங்கள் அறியாத ஒருவரிடமிருந்து மின் அஞ்சல் இணைப்பாக பிரசண்டேஷன் பைல் மற்றும் பிற பைல்கள் வந்தால், அதனைத் திறக்க வேண்டாம். தெரிந்தவரிடம் இருந்தே வந்தாலும், அவரைத் தொடர்பு கொண்டு, உறுதிப்படுத்திய பின்னரே, பைலைத் திறக்கவும். அதே போல, குறிப்பிட்ட பைல் ஒன்றைத் திறக்க, அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமை தேவை என, நீங்கள் அறியாத பைல் ஒன்றுக்குக் கேட்டால், அனுமதி தர வேண்டாம். Window’s User Account டூலை உங்கள் கட்டுப்பாட்டில் எப்போதும் வைத்திருக்கவும்.
இந்த வைரஸ் நுழையும் பிழைக் குறியீடு, மைக்ரோசாப்ட் ஆபீஸ் பவர் பாய்ண்ட் பிரசண்டேஷன் பைல் (Power Point’s OLE) சார்ந்ததாகும். இது ஸ்ப்ரெட் ஷீட் போன்றவற்றை பவர்பாய்ண்ட் பைலில் இணைக்க உதவும் குறியீடு ஆகும். பொதுவாக, இந்த டூல் சார்ந்த குறியீடு, மிகவும் பாதுகாப்பானதாகவே இருக்கும். ஆனல், இதில் யாரோ சிலர், பிழைக் குறியீட்டு வரிகளைக் கண்டறிந்து, அதன் வழி இந்த வைரஸைப் பரப்பி வருகின்றனர். இது குறித்து, மைக்ரோசாப்ட் தரும் அறிக்கையினைப் படிக்க, https://technet.microsoft.com/library/security/3010060 என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 

மொபைஜெனி


விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் இரு வகையாக ”மொபைஜெனி” என்னும் பயனுள்ள சாப்ட்வேர் அப்ளிகேஷன் தரப்படுகிறது. இந்த அப்ளிகேஷன் புரோகிராம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம் ஆக இருக்குமோ என்று பலர் சந்தேகப்படுகின்றனர். இரு வகை சிஸ்டங்களில் இயங்கும் வகையில் தரப்படுவதால், அவ்வாறான தன்மை கொண்டதாக இருக்காது
எனப் பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரிலும், ஆண்ட்ராய்ட் இயங்கும் மொபைல் போன்கள் மற்றும் டேப்ளட்
பி.சி.க்களில் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். இதன் பயன்களும் அதிகம். இது குறித்து இங்கு பார்க்கலாம்.

 

1. மொபைல் போன் / டேப்ளட் பி.சி. கம்ப்யூட்டருடன் இணைப்பு: மொபைஜெனி சாப்ட்வேர் அப்ளிகேஷனின் முக்கிய செயல்பாடு, பெர்சனல் கம்ப்யூட்டருடன் டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போனை இணைத்து, பைல்களை நிர்வகிக்கும் பணியை மேற்கொள்வதுதான். இதனை பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கியவுடன், அந்த கம்ப்யூட்டருடன் ஏதேனும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் போன் அல்லது டேப்ள்ட பி.சி. யை உடன் அடையாளம் கண்டு கொள்கிறது. உடன், படங்கள், வீடியோ படங்கள், இசை கோப்புகள் ஆகியவற்றை இரண்டிற்கும் இடையே பரிமாறிக் கொள்ள உதவுகிறது. அத்துடன் நாம்
சேவ் செய்து வைத்திருக்கும் டேட்டாவிற்கான முழுமையான பேக் அப் எடுத்து வைத்துக் கொள்ளவும் செய்கிறது.
2. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து உங்கள் மொபைல் போனுக்கான சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து, பின்னர், உங்கள் போனுக்கு அல்லது டேப்ளட் பி.சி.க்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
3. உங்களுடய போனில் நூற்றுக்கணக்கான தொடர்பு முகவரிகள், போன் எண்கள்
உள்ளனவா? உங்களால், அவற்றைப் பராமரிக்க முடியவில்லையா? இந்த சாப்ட்வேர் மூலம், அவற்றை வரிசைப்படுத்தலாம், எடிட் செய்திடலாம், நீக்கலாம்; புதியவற்றை இணைக்கலாம்.
4. உங்களுடைய கம்ப்யூட்டருடன் மொபைல் போனை இணைத்துவிட்டால், அதில் வந்து சேர்ந்திருக்கும் மெசேஜ்களை, பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்தவாறே படிக்கலாம்,
நீக்கலாம்.
இவ்வாறு பலவகைகளில், கம்ப்யூட்டருக்கும் மொபைல் போனுக்கும், டேப்ளட் பி.சி.க்கும்
இடையே ஒரு பைல் மேனேஜராக இந்த மொபைஜெனி (Mobogenie) செயல்படுகிறது.
இருப்பினும் ஏன் இதனை மால்வேர் எனப் பலர் சந்தேகப்படுகின்றனர். முதல் காரணம், இது நம் மொபைல் போனில் உள்ள நம் பெர்சனல் தகவல்களை எடுத்துப் பயன்படுத்துவது. இரண்டாவதாக, நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், மொபைஜெனி இயங்கத் தொடங்கியவுடன், அதனை மால்வேர் என அறிவித்து, இயக்கவா? என்ற சந்தேகக் கேள்வியை எழுப்புகிறது. எனவே, இதன் மூலம் நீங்கள் பரிமாறிக் கொள்ளாத பைல் ஏதேனும் இருந்தால், அதனை நன்றாகச் சோதனை செய்து உடனே நீக்கிவிடவும்.இதனை இன்ஸ்டால் செய்திடுகையில் Custom installation என்ற வகையில் இன்ஸ்டால் செய்திடவும். கண்களை மூடிக் கொண்டு, நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என அடுத்து அடுத்து கிளிக் செய்திட வேண்டாம். மொத்தத்தில், இது நல்ல பயன்களைத் தந்தாலும், சற்று அச்சம் தரும் வகையில் செயல்படுகிறது என்பது உண்மையே. ஆனால், இது மால்வேர் என இன்னும் நிரூபிக்கப்படவில்லை.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies