மைக்ரோசாப்ட் தரும் ஆண்ட்டி வைரஸ் பரோகிராம்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் தன்மை குறித்து பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் மற்றும் விண்டோஸ் டிபண்டர் புரோகிராம்கள் செயல்பாடுகள் குறித்துத் தெரியாமல் உள்ளனர். அவை குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
இவை இரண்டும் இருவகையான வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள். விண்டோஸ் டிபண்டர், பெர்சனல் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் எனப்படும், நம் தகவல்களைத் திருடும் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினைத் தருகிறது. செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராம் இந்த பணியைச் செய்வதுடன், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, வைரஸ்களை நீக்குகிறது.
விண்டோஸ் டிபண்டர் இணையத்திலும், வெளியிலும் பயன்படுத்தும் வகையில் கிடைக்கிறது. இணையத்தில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்திருக்கையில், இது கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர் புரோகிராம்கள் இருந்தால் அவற்றைக் கண்டறியும். டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் வகையில் உள்ள விண்டோஸ் டிபண்டர் புரோகிராமும் இதே திறனைக் கொண்டுள்ளது.
இதனை, நம் கம்ப்யூட்டர் செயல்படத் தொடங்கும் முன்னரே இயக்கி, கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர் புரோகிராம்களை நீக்கலாம். இதற்குத் தேவை இந்த புரோகிராம் ஒரு ப்ளாஷ் ட்ரைவ் அல்லது வெளியிலிருந்து இணைக்கப்படக் கூடிய ஹார்ட் ட்ரைவில் இருக்க வேண்டும். ஆனால், தற்போதுள்ள விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வரும் விண்டோஸ் டிபண்டர், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து வைரஸ்களை நீக்கவும் செய்கிறது.
மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராம் விண்டோஸ் டிபண்டருடன் இணைந்து இயங்கி வைரஸ் புரோகிராம்களை நீக்குகிறது. அத்துடன், ஸ்பைவேர் மற்றும் வைரஸ்களிலிருந்து கம்ப்யூட்டரைக் காக்கிறது.
விண்டோஸ் டிபண்டர் புரோகிராம், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறிந்து வைரஸ்களை நீக்குவதால், அதில் மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க முடியாது. சிலர், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உள்ள விண்டோஸ் டிபண்டர் புரோகிராமினை, மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் என அழைக்கின்றனர். இரண்டுக்கும் இடையே உள்ள குழப்பத்திற்கு இதுவே காரணம். விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு முன்பு வந்த விண்டோஸ் சிஸ்டங்களில், விண்டோஸ் டிபண்டர் மற்றும் எசன்ஷியல்ஸ் என இரண்டு புரோகிராம்களும் தேவைப்பட்டன.
இந்த இரண்டு புரோகிராம்களையும், மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்களின் இணைய தளங்களிலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகிய சிஸ்டங்களுக்கு இரண்டும் தேவைப்படும்.
வேர்ட் டிப்ஸ்ஸஎண்களைக் கொண்டு மேற்கோள் குறிகள்:
எண்களைக் கொண்டு மேற்கோள் குறிகள்: வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பல இடங்களில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், நாம் ஒரு வகை குறியீட்டினை அமைத்தால், வேர்ட் தானாக அதனை மாற்றும். இது மாறா நிலையில் தானாக மாற்றி அமைக்கும் வகையில் வேர்ட் செட் செய்யப்பட்டிருப்பதுதான் காரணம். இவற்றை மாற்றாமல் அமைக்க, ஆட்டோ கரெக்ட் விண்டோ பெற்று (Tools | AutoCorrect// AutoFormat As You Type மாற்ற வேண்டும். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. இந்த மேற்கோள் அடையாளக் குறிகள் அப்படியே உங்களுக்குத் தேவை என்றால் அந்த அடையாளங்களை கீ போர்டில் வேறு ஒரு வழி மூலம் ஏற்படுத்தலாம்.
ஆல்ட் அழுத்தியவாறு 0147 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0148 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், முடியும் நிலையில் அமைக்கப்படும் டபுள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0145என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால், தொடக்க நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும்.
ஆல்ட் அழுத்தியவாறு 0146 என்ற எண்ணை நம்லாக் கீ போர்டில் டைப் செய்தால் முடிவு நிலையில் அமைக்கப்படும் சிங்கிள் கொட்டேஷன் அடையாளம் கிடைக்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்களை நம் லாக் கீயினை அழுத்திப் பின் அதன் கீழாக உள்ள கீ போர்டு மூலம் டைப் செய்திட வேண்டும்.
தலைப்புகளைத் தானாக அமைக்க
நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செட்டிங்ஸ் அமைக்கவும்.
1.டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். கேப்ஷன் டயலாக் பாக்ஸைக் கொண்டு வாருங்கள். இதற்கு, உங்கள் வேர்ட் தொகுப்பு வேர்ட் 2007க்கு முந்தையதாக இருந்தால், Insert அழுத்தி, கிடைக்கும் மெனுவில் Reference>Caption எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Caption என்ற சிறிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் தர விரும்பும் தலைப்பு மற்றும் இந்த தலைப்பு எதற்காக என்பதை டேபிள், படம் மற்றும் வேறு ஆப்ஜெக்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2.வேர்ட் 2007 ஆக இருந்தால், ரிப்பனில் References டேப் தேர்ந்தெடுத்து, பின்னர் Captions குரூப்பில் Insert Caption என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து AutoCaption பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது AutoCaption டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் ஒரு ஆப்ஜெக்ட் பாக்ஸ் கிடைக்கும். எந்தவிதமான ஆப்ஜெக்ட் என்பதனை இதில் தேர்ந்தெடுத்து டிக் மார்க் அமைக்கவும். எடுத்துக் காட்டாக, நீங்கள் அமைக்கும் டேபிள்களுக்கான தலைப்பு அமைக்க விரும்பினால், Microsoft Word Table என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Use Label என்ற கீழ் விரி மெனுவினைப் பயன்படுத்தி, எந்த சொல் டேபிள் அல்லது வேறு ஆப்ஜெக்ட் மேலாகத் தலைப்பாக வர வேண்டுமோ, அந்த சொல்லை டைப் செய்திடவும். இதனை அடுத்து Position என்ற கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தி, இந்த தலைப்பு எங்கு வர வேண்டுமோ, அந்த இடத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இவை எல்லாம் முடிந்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்
வேர்ட் டிப்ஸ்ஸஎன் சொல் எப்போதும் சரியே:
என் சொல் எப்போதும் சரியே: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது. இந்த சொல்லின் எழுத்துப் பிழையை வேர்ட் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், அந்த சொல்லின் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் "Ignore All" என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அதன் பின்னர், அந்த டாகுமெண்ட்டில், அந்த சொல் நீங்கள் டைப் செய்தபடியே ஏற்றுக் கொள்ளப்படும். இந்த சொல்லை Custom Dictionaryல் சேர்த்துவிட்டால், எந்த டாகுமெண்ட்டில் அந்த சொல் வந்தாலும், அது பிழை எனக் காட்டப்பட மாட்டாது. ஆனால், அதே டாகுமெண்ட் மற்ற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப் படுகையில், அந்த சொல் பிழை உள்ளதாகக் காட்டப்படும். இது டாகுமெண்ட்டைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தினை உங்களிடம் ஏற்படுத்தும். எனவே, எந்த கம்ப்யூட்டரில் டாகுமெண்ட் திறக்கப்பட்டாலும், பிழையற்ற சொல்லாக உங்களின் சொல் காட்டப்பட வழி ஒன்று கண்டறியப்பட வேண்டும். இதற்கு இரு வழிகள் உள்ளன.
1. நீங்கள் இவ்வகையில் குறிப்பிட விரும்பும் சொல் அல்லது சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில், Display டேப்பினைப் பெற்றுக் காட்டவும்.
3. இங்கு Language dialog box தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Proofing குருப்பில், Set Language டூலினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், Language குரூப்பில், Language டூல் தேர்ந்தெடுக்கவும். இதில் Set Proofing Language என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இங்கு Do Not Check Spelling or Grammar என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
5. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும்.
இரண்டாவது வழியினை இங்கு பார்க்கலாம். முதலில் Word Options டயலாக் பாக்ஸினைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடதுபுறமாக உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும்.
வேர்ட் 2010ல், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து, ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு ஸ்குரோல் செய்து சென்று, Exceptions என்னும் பிரிவிற்குச் செல்லவும். இங்கு Hide Spelling Errors in this Document Only என்ற செக் பாக்ஸ் டிக் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த வழி எப்படி செயல்படுகிறது? என்ற கேள்வி எழலாம். இதன்படி அமைக்கப்படும் செட்டிங்ஸ் மாற்றங்கள், டாகுமெண்ட் உடன் தொடர்ந்து செல்லும். இதனால், குறிப்பிட்ட சொல் பிழையானது என்னும் குறை காட்டப்பட மாட்டாது.
இன்னொரு வழியாக, உங்கள் custom dictionary file ஐ மற்றவர்களுக்கும் அனுப்பி, அவர்கள் கம்ப்யூட்டரில் வேர்ட் டைரக்டரியில் பதிவு செய்து பயன்படுத்தச் சொல்லலாம். அப்போது, இந்த சொற்கள் பிழையற்றதாகவே காட்டப்படும். அலுவலகம் ஒன்றில் குழுவாகப் பணியாற்றுபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
குறிப்பிட்ட பக்கம் உடனே செல்ல: மிக நீளமான, நூற்றுக் கணக்கான பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் எடிட் செய்திட எண்ணும் டெக்ஸ்ட் உள்ள பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்கு என்டர் அழுத்திச் சென்றாலும், ஸ்குரோல் பார் அழுத்திச் சென்றாலும் சற்று நேரம் ஆகும். மேலும் ஒரே முயற்சியில் செல்ல முடியாது. முன்னே பின்னே சென்று நிறுத்திப் பின்னர் நாம் விரும்பும் இடத்திற்கு வர வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல ஒரு சுருக்கு வழி உள்ளது. Edit மெனு சென்று, Go To செல்லவும். அல்லது எப்5 கீ அழுத்தவும். உடனே, Find and Replace டயலாக் பாக்ஸ், Go To என்ற பிரிவில் திறக்கப்படும். இடது பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்புவது எந்த அடிப்படையில் Page, Line, Section எனத் தொடங்கி 13 ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் Page தேர்ந்தெடுத்து, வலது பக்கம், பக்க எண்ணை டைப் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்தால், குறிப்பிட்ட பக்கம் காட்டப்படும்.