சாதனை படைத்தது Facebook Messenger -விண்டோஸ் கால்குலேட்டர்
13 Nov,2014
உலகில் அதிகளவான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் சட்டிங் செய்வதற்கென தனியாக அறிமுகம் செய்த அப்பிளிக்கேஷனே Facebook Messenger ஆகும்.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது 500 மில்லியன் பயனர்களை எட்டி சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் குறுஞ்செய்திகளை விரைவாக அனுப்பக்கூடியதாக இருப்பதுடன், ஸ்டிக்கர்கள், வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் காணப்படுகின்றது.
Facebook Messenger அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டமைக்கு விரைவான தொடர்பாடல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றனவே காரணமாக இருந்ததாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி Mark Zuckerberg தெரிவித்துள்ளார்.
இதேவேளை உலகெங்கிலும் 1.35 பில்லியன் பயனர்களை பேஸ்புக் கொண்டுள்ளதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்கினர் Facebook Messenger அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் கால்குலேட்டர்
விண்டோஸ் சிஸ்டத்தில் இப்போது தரப்படும் கால்குலேட்டர்கள், வெறும் கூட்டல், கழித்தல் கணக்குகளை மட்டும் செயல்படுத்திக் காட்டும் வகையில் தரப்படுவதில்லை. மேலாக, இன்னும் பலவகை கணக்குகளையும் இதில் மேற்கொள்ளலாம்.
இதில் நான்கு வகையான கால்குலேட்டர்களைக் காணலாம். அவை: Standard Scientific mode, Programmer mode, மற்றும் Statistics mode. கால்குலேட்டரில் மேலாகத் தரப்படும் டேப்களில், View கிளிக் செய்தால், இந்த வகைகள் பட்டியலிடப்படும். இந்த வகைகள் மட்டுமின்றி,
நீங்கள் மேற்கொண்ட Standard and Scientific கணக்குகள் அனைத்தையும் பட்டியலிட்டுக் காட்டும். வியூ டேப் சென்று, History என்பதில் கிளிக் செய்தால், இதனைப் பெறலாம்.
History என்பதன் கீழ் Digit grouping என்ற பிரிவு கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு மூன்று இலக்கங்களை அடுத்து ஒரு காற்புள்ளி சேர்க்கப்படும். அதே போல, இப்பிரிவில் Unit or Time மாற்றுவதற்கான பிரிவும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் பிறந்து எத்தனை நாள் என்பதனைக் கணக்கிடலாம். இரு வேறு நாட்களுக்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடலாம். இதில் உள்ள ஒர்க் ஷீட் பிரிவில், gas mileage, mortgage payments, or lease payments ஆகியவற்றையும் கணக்கிடலாம். இவற்றைக் கணக்கிட்ட பின்னர், மீண்டும் கால்குலேட்டர் தொடக்க நிலைக்கு வர வியூ டேப் சென்று, Standard நிலையில் கிளிக் செய்திடலாம்.