குண்டுகளைக் கண்டுபிடிக்கும் கார்பன் நனோ குழாய்கள்0ஜிமெயில்: தன் கணக்கினை அழகு படுத்தலாம்
13 Nov,2014
நனோ தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி குண்டுகளை கண்டுபிடிக்கும் சாதனத்தை Utah பல்கலைக்கழக பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
விரிவுரையாளர் Ling Zang தலைமையிலான குழுவினால் உருவாக்கப்பட்ட இச்சாதனம் Carbon Nanotubes என அழைக்கப்படுகின்றது.
நுணுக்குக்காட்டி, இரண்டு மின் வாய்கள், என்பவற்றினையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனமானது குண்டுகளை அடையாளம் கண்டதும் உண்டாகும் மின்னியல் மாற்றத்தினை பயன்படுத்துவோருக்கு அறிவிக்கின்றது.
இச்சாதனம் எதிர்வரும் காலங்களில் விமான நிலையங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு முறைமைகளில் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிமெயில்: தன் கணக்கினை அழகு படுத்தலாம்
கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்கள் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாகவே இருக்கின்றனர். உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தினை மிக அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அதனை எளிதாகப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறீர்களா? இதற்கு Gmelius என்ற எக்ஸ்டன்ஷன் உதவுகிறது. இதன் மூலம் ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தினைச் சீர் செய்து பார்த்தால், இத்தனை நாள் மோசமாக வைத்த்து நினைவிற்கு வரும்.
Gmelius தளத்திற்குச் சென்றவுடன் நம்மை வரவேற்பது, நமக்கான பிரவுசர் எக்ஸ்டன்ஷனைத் தேர்ந்தெடுத்து இன்ஸ்டால் செய்வதற்கான பட்டன் தான். நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கான (குரோம், பயர்பாக்ஸ் அல்லது ஆப்பரா.) எக்ஸ்டன்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனோ தெரியவில்லை, இன்டர்நெட் எக்ஸ்புளோர ருக்கான எக்ஸ்டன்ஷன் இல்லை. என்ன என்ன புதிய வசதிகள் இதன் மூலம் கிடைக்கும் என அறியவிரும்பினால் Discover the Features என்ற பட்டனை அழுத்தித் தகவல்களைப் பெறலாம். முதலில் இதனைப் படித்துத் தெரிந்து கொண்ட பின்னர், எக்ஸ்டன்ஷனை இன்ஸ்டால் செய்வது நல்லது. இது இலவசமானது என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. நம் பிரவுசருக்கான இன்ஸ்டால் பட்டனை அழுத்தியவுடன், எக்ஸ்டன்ஷன் பைல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு, இன்ஸ்டால் செய்யப்படும். பின்னர், அது புதிய விண்டோவில் திறக்கப்படும்.
இங்கு, நீங்கள் ஜிமெயில் தளத்தில் மற்றும் அதன் இயக்கத்தில் என்ன என்ன இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள், எவற்றை நீக்க வேண்டும் என திட்டமிடுகிறீர்கள் என பல ஆப்ஷன்கள் கேட்கப்படும். இவற்றிற்கான பாக்ஸ்களில், உங்கள் விருப்பத்திற்கேற்ப, டிக் மார்க் அடையாளத்தினை ஏற்படுத்த வேண்டும். அதன் பின் Save Changes பட்டனை அழுத்தினால், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜிமெயில் அக்கவுண்ட் தளம் இயங்கும்.
இந்த Save Changes பட்டன் கீழாக, Gmelius குறித்து மேலதிகத் தகவல்கள் தரப்பட்டிருக்கும். உங்களின் சந்தேகங்களுக்கான பதில்களைத் தரும் FAQ பிரிவிற்கான லிங்க் பட்டனும் இடுக்கும்.
உங்கள் ஜிமெயில் தளத்தினைச் சீரமைக்க உதவும் இந்த எக்ஸ்டன்ஷன் உங்களுக்கு நன்மையே செய்கிறது. எனவே, முயற்சித்துப் பார்க்கலாம். இதனைத் தரவிறக்கம் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://gmelius.com/