விண்டோஸ் 7 மாறுதலான புதிய வசதிகள்-வேர்ட் டிப்ஸ்ஸவித்தியாசமான டெக்ஸ்ட் தேர்வு:

16 Nov,2014
 

             


விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பல கோணங்களில் வாடிக்கையாளருக்கு எதிரான புதிய மாற்றங்களைக் கொண்டிருப்பதால், புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று, பயன்படுத்தத் தயங்குகின்றனர். அதனால், இவர்கள் விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படுகின்றனர். விஸ்டாவின் தோல்விக்குப் பின் வந்த இந்த சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பல புதிய கூடுதல் வசதிகளைத் தந்துள்ளது. பல புதுமைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. கீ போர்டு ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் கீயுடன் கீழ்க்காணும் கீகளை அழுத்துகையில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் காணலாம்.

 

எச்: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோவினை முழுத் திரைக்குக் கொண்டு செல்கிறது.
ஐ: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்கிறது; அல்லது வழக்கமான அளவிற்குக் கொண்டு வருகிறது.
ஷிப்ட்+ ஆரோ: அப்போதைய விண்டோவினை, அடுத்த திரைக்கு மாற்றுகிறது.
D: அனைத்து விண்டோக்களையும் மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப் திரையைக் காட்டுகிறது.
E: விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும்; மை கம்ப்யூட்டர் போல்டர் காட்டப்படும்.
F: தேடல் விண்டோ காட்டப்படும்.
G: உடன் இணைக்கப்பட்ட சாதனங்களைச் சுற்றிக் காட்டும்.
L: டெஸ்க்டாப்பினை லாக் செய்திடும்.
M: அப்போதைய விண்டோவினை மினிமைஸ் செய்திடும்.
R: ரன் விண்டோவினை இயக்கும்.
T: டாஸ்க் பாரில் சுழன்று வரும்; ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஏரோ பீக் வசதியினைக் கொடுக்கும்.
U: ஈஸ் ஆப் யூஸ் சென்டரைத் திறக்கும்.
TAB : முப்பரிமாணக் காட்சி
Pause: சிஸ்டம் ஆப்லெட் இயக்கப்படும்.
2.ஹெல்ப் அண்ட் சப்போர்ட்: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஹெல்ப் பிரிவு புதிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மைப் பக்கத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. Search Box, மைக்ரோசாப்ட் இணைய தளத்திற்கான நேரடி லிங்க், Ask என்று பெயரிடப்பட்ட பட்டன். விண்டோவின் வலது மேல் மூலையில் உள்ள Ask பட்டனை அழுத்தலாம்; அல்லது ஹோம் பேஜில், இடது கீழ்ப் புறம் உள்ள More Support Options பிரிவில் கிளிக் செய்து, தேவையான தகவல்களைப் பெறலாம். இதில் தான் மைக்ரோசாப்ட் Ask a Person for Help என்ற பிரிவை மறைத்து வைத்துள்ளது. இதில் கிளிக் செய்தால் Remote Assistance, Microsoft Help Forums, மற்றும் Computer Manufactures Homepage ஆகியவை கிடைக்கும். இதன் மூலம் எப்படி உதவி பெறலாம் என்பதனை, இதில் சென்று அறிந்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.
3. சிஸ்டம் ஹெல்த் ரிப்போர்ட்: நம் கம்ப்யூட்டர் எந்த நிலையில் உள்ளது என்று அறிய அனைவருக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இதற்கான வழி தரப்பட்டுள்ளது. சர்ச் லைன் பெட்டியில், perfmon /report என டைப் செய்து என்டர் தட்டினால், கம்ப்யூட்டர் குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். கம்ப்யூட்டர் செயல்படும் திறன், எவ்வளவு திறனைப் பயன்படுத்துகிறது, பிரச்னைகள் இருந்தால் அவற்றைத் தீர்க்க வழி ஆகியவை காட்டப்படும்.இந்த அறிக்கை கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். இதனை எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்து, உங்கள் நண்பருக்கு, இதனை இமெயிலில் அனுப்பவும் வழி தரப்படுகிறது.
4. அப்ளிகேஷன்ஸ் அன் இன்ஸ்டால்: விண்டோஸ் சிஸ்டத்துடன், சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் இணைத்தே தரப்பட்டன. இவை சிஸ்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்ததனால், பயன்படுத்துகிறோமோ இல்லையோ, அவை சிஸ்டத்தில் இயக்க நிலையில் இருந்து கொண்டே இருக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, மீடியா பிளேயர், மீடியா சென்டர், டிவிடி மேக்கர் போன்ற புரோகிராம்கள் இதற்கு எடுத்துக்காட்டு. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இவற்றை தேவை இல்லை என்றால், நீக்கிவிட வசதி தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் பேனலில், Program and Features என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Turn Windows features on or off என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இவற்றில் இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்டுள்ள புரோகிராம்களின் பட்டியல் காட்டப்படும். இதில் உங்களுக்குத் தேவைப்படும் புரோகிராம்களை மட்டும் வைத்துக் கொள்ள அதன் முன்புறம் உள்ள, சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
5. கிரெடென்ஷியல் மேனேஜர் (Credential Manager): இந்த சிஸ்டத்தின் கண்ட்ரோல் பேனலில், கிரடென்ஷியல் மேனேஜர் என்னும் புதிய அப்ளிகேஷன் ஒன்று தரப்பட்டுள்ளது. இதனை இயக்க சர்ச் லைனில் Credential என டைப் செய்திடவும். இதில் நம் பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றைக் குறிப்பிட்டு சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம். நாம் அடிக்கடி செல்லும் இணையதளங்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களையும், இதில் பதிந்து பாதுகாப்பாக வைக்கலாம். இவை Windows Vault என்பதில் சேவ் செய்து வைக்கப்படும். இந்த பைலையும் பேக்கப் எடுத்து வைக்கலாம்.
6. புதிய செயல்முறையில் வேர்ட் பேட்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புடன் வரும் வேர்ட் புரோகிராமினையே அனைவரும் பயன்படுத்துகிறோம். அதனால் சிஸ்டத்துடன் வரும் நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் புரோகிராம்களை அவ்வளவாகப் பயன்படுத்துவது இல்லை. நோட்பேட் புரோகிராமினையாவது, சில புரோகிராம்களை எழுதுகையில் இயக்குகிறோம். ஆனால் வேர்ட் பேட் புரோகிராமினை முழுமையாக ஒதுக்கி வைக்கிறோம். இதனாலேயே மைக்ரோசாப்ட் நிறுவனமும், இதில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாமலேயே, தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் தந்து வந்தது. இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இது பெரிய மாற்றங்களுடனும் வசதிகளுடனும் தரப்பட்டுள்ளது. இப்போது டாகுமெண்ட்களை விருப்பப்படியான பார்மட்டில் உருவாக்க முடியும். ஆர்.டி.எப். (.rtf))பார்மட்டில் தான் இவற்றை முன்பு சேவ் செய்து வந்தோம். இப்போது இவற்றை Office Open XML documet (.docx) ஆகவும் சேவ் செய்திடலாம். இதனால் வேர்டில் உருவாக்கப்படும் இந்த பார்மட் பைல்களை, வேர்ட் பேடிலும் திறந்து எடிட் செய்திடலாம்.
7. டெஸ்க்டாப் ஒழுங்கமைப்பு: ஐகான்கள் திரையெங்கும் சிதறிக் கிடக்கின்றனவா! சிரமம் எடுத்து அவற்றைச் சீரமைக்க வேண்டாம். எப்5 கீயை, சற்று நேரம் அழுத்தியவாறு வைக்கவும். ஐகான்கள் தாமாக சீராக அமைக்கப்படும். அல்லது வழக்கம்போல, டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து, விஸ்டாவில் உள்ளது போல, View, Auto arrange அழுத்தவும்.
8. சிஸ்டத்தினை ரிப்பேர் செய்திட: கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு வாசகர்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு அவசர அழைப்புகளைக் கொடுப்பதுண்டு. அவர்களிடம், ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி உள்ளதா என்று கேட்டால், பதில் கிடைக்காது. ஏனென்றால், சிஸ்டத்துடன் தரப்படும் சிடிக்களில், அப்படி ஒன்று உள்ளதென்று தெரிந்தவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருப்பதில்லை. அப்படியானால், விண்டோஸ் 7 சிஸ்டத்தினை, இன்டர்நெட்டிலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்தவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம். விண்டோஸ் 7 சிஸ்டம் இதுபோன்ற ஸ்டார்ட் அப் ரிப்பேர் சிடி தயாரிக்கும் வழியைக் கொண்டுள்ளது. சிஸ்டம் பூட் ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலையில், இது போன்ற சிடிக்கள் நமக்கு கை கொடுக்கும். இதனைத் தயாரிக்க Start > All Programs > Maintenance > Create a System Repair Disc என்று செல்லவும். விண்டோஸ் 7, சிஸ்டத்தினை இயக்கக் கூடிய சிடி ஒன்றைத் தயாரித்துக் கொடுக்கும்.
9. பிரச்னைகளைக் கண்டறிய: சில வேளைகளில், சிஸ்டத்தின் சில செயல்பாடுகள் மட்டும் முடங்கிப் போகும். அந்த வேளையில், எதனால் பிரச்னை ஏற்படுகிறது என நமக்குத் தெரியாது. இதனைக் கண்டறிந்து கொள்ள, விண்டோஸ் 7 வழி ஒன்றைத் தருகிறது. அது போன்ற சூழ்நிலையில், கண்ட்ரோல் பேனல் செல்லவும். அங்கு System and Security என்பதன் கீழ் Find and Fix என்ற பிரிவைப் பார்க்கவும். அல்லது சர்ச் பாக்ஸில் Troubleshooting என்று டைப் செய்து என்டர் தட்டவும்.
பொதுவான பிரச்னைகள், நீங்கள் அமைத்துள்ள செட்டிங்ஸ், சிஸ்டம் கிளீனிங் போன்ற வழிகளில், பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கலாம். இதற்கு முன் இதே போல ஏற்பட்டிருந்தால், சர்ச் பாக்ஸில் Troubles hooting history என்று டைப் செய்து பார்க்கவும். இந்த விண்டோவின் இடது மேல் பக்க மூலையில் View All என்ற லிங்க்கில் கிளிக் செய்தால், இதற்கு முன் இது போல ஏற்பட்ட சிக்கல்கள், அவற்றின் தன்மை மற்றும் தீர்வுகள் காட்டப்படும்.



வேர்ட் டிப்ஸ்ஸவித்தியாசமான டெக்ஸ்ட் தேர்வு:


வித்தியாசமான டெக்ஸ்ட் தேர்வு: வேர்ட் டாகுமெண்ட்டில் வேலை செய்கையில், டெக்ஸ்ட் தேர்வு செய்வது மிக எளிதான ஒன்றுதான். வரிசையாக வரிகள் என்றாலோ, அல்லது விட்டு விட்டு வரிகள் என்றாலோ, அவற்றைத் தேர்வு செய்துவிடலாம். ஆனால், நெட்டுவாக்கில் வரிகளில் சில எழுத்துக்களை மட்டும் தேர்வு செய்திட வேண்டும் என்றால் என்ன செய்வது?
எடுத்துக் காட்டாக, வரிசையான வரிகளில், பத்தாவது எழுத்து முதல், பதினைந்தாவது எழுத்துவரை, அனைத்து வரிகளிலும் மற்றவற்றை விட்டுவிட்டு, தேர்வு செய்திட வேண்டும் எனில் என்ன செய்வது? வேர்ட் இதனை மிக எளிதாக மேற்கொள்ள கீ போர்ட் மற்றும் மவுஸ் பயன்படுத்தும் வழிகளை வேர்ட் நமக்குத் தருகிறது. இதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

 

 
1. எந்த டெக்ஸ்ட் பகுதியைக் காப்பி செய்திட வேண்டுமோ, அதன் மேல் இடது மூலைக்கு, கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. அடுத்து, கண்ட்ரோல் + ஷிப்ட்+ எப்8 (Ctrl+Shift+F8) அழுத்தவும்.
3. அடுத்து, கர்சர் கண்ட்ரோல் கீகளை, நீங்கள் காப்பி செய்திட விரும்பும் டெக்ஸ்ட் முழுமையும் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் மவுஸ் கொண்டு இதனைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். விரும்பிய டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன், நீங்கள் விரும்பிய செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். டெல் (Del) கீ அழுத்தினால், அந்த டெக்ஸ்ட் பகுதி முழுவதும் அழிக்கப்படும்.

ஹெடர் அல்லது புட்டர் நீக்க: வேர்ட் டாகுமெண்ட்டில் ஹெடர் மற்றும் புட்டர்களை அமைத்து, அதில், பக்கங்களில் தொடர்ந்து மேலாகவும், கீழாகவும் வரவேண்டிய டெக்ஸ்ட் அமைப்போம். இவை டாகுமெண்ட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் கிடைக்கும். ஆனால், அவ்வாறு அமைத்த பின்னர், சிலர் இவற்றை நீக்க விரும்புவார்கள். சிலர் தங்களுக்குக் கிடைத்திருக்கும் டாகுமெண்ட்டில் உள்ள ஹெடர் மற்றும் புட்டர்களை நீக்க விரும்புவார்கள். இவர்கள் செயல்பட வேண்டிய வழிகள் கீழே தரப்படுகின்றன.
1. முதலில், எந்த ஹெடரை நீக்க விரும்புகிறீர்களோ, அதில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும்.
2. நீங்கள் Normal அல்லது Outline பயன்படுத்தினால், View மெனுவிலிருந்து Header and Footer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Print Layout வியூவாக இருந்தால், ஹெடர் அல்லது புட்டர் இடத்தில் டபுள் கிளிக் செய்தால் போதுமானது.
3. நீங்கள் புட்டரை அழிக்க விரும்பினால், Header and Footer டயலாக் பாக்ஸில் Switch ஐகானில் கிளிக் செய்திடவும்.
4. அடுத்து ஹெடர் அல்லது புட்டரின் டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Del அல்லது கண்ட்ரோல் + எக்ஸ் கீயை அழுத்தவும்.
6. அடுத்து ஓகே என்பதில் கிளிக் செய்திடவும்.

ஹைலைட்டிங் வண்ணம் மாற்ற: வேர்டில் டாகுமெண்ட் உருவாக்குகையில், அதனைப் படிப்பவர்களின் கவனத்தைத் திருப்ப, டெக்ஸ்ட்டின் குறிப்பிட்ட பகுதிகளை ஹைலைட்டிங் செய்கிறோம். எப்படி ஹைலைட்டர் பேனாவினை நாம் செயல்படுத்துகிறோமோ, அதே போல ஹைலைட்டிங் டூல் செயல்படுகிறது. மாறா நிலையில், ஹைலைட்டிங் டூல் மஞ்சள் வண்ணத்தினைத் தருகிறது. ஆனால், இந்த வண்ணத்தினை நீங்கள் விரும்பும் வண்ணத்திற்கு மாற்றலாம். கலர் பிரிண்டர் வைத்து, டாக்குமெண்ட்டினை அச்சிடுபவர்களுக்கு இது அவசியம் தேவை. வண்ணத்தினை கீழ்க் கொடுத்துள்ள வழிகளின்படி மாற்றலாம்.
முதலில் ரிப்பனில் ஹோம் டேப்பினைக் கிளிக் செய்திடவும். இங்கு Font குரூப்பில் கிடைக்கும் ஹைலைட் டூல் (Highlight tool) கொண்டிருக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். உடன், பதினைந்து வண்ணங்கள் கொண்ட கட்டம் உங்களுக்குக் கிடைக்கும். இதில் உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். புதியதாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனால், ஏற்கனவே அமைக்கப்பட்ட டெக்ஸ்ட் ஹைலைட்டிங் வண்ணம் மாறாது. புதியதாக ஏற்படுத்தப்படும் ஹைலைட்டிங் வண்ணம் மட்டும், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ணத்தில் அமையும்.
சரி, உங்களுக்கு ஒரு டாகுமெண்ட் கிடைக்கிறது. அதில் பல இடங்களில், டெக்ஸ்ட் பலவகைகளில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. இது உங்களுக்குப் பிடிக்கவில்லை. இதனை நீங்கள் விருப்பப்படும் ஒரு வண்ணத்திற்கு மாற்றத் திட்டமிடுகிறீர்கள். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம். இதற்கு வேர்ட் புரோகிராம் தரும் find and replace என்ற வசதியினைப் பயன்படுத்தலாம்.
1. முதலில் ஹைலைட் டூல் கிளிக் செய்து, நீங்கள் அமைக்க விரும்பும் வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள்.
2. அடுத்து கண்ட்ரோல் + எச் (Ctrl+ H) கீகளை அழுத்தி Find and Replace டயலாக் பாக்ஸில் Replace டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பெறவும்.
3. Find What என்ற பாக்ஸில், கர்சர் நிற்கட்டும். இனி, Format | Highlight என அழுத்தவும். Format பட்டனை, நீங்கள் More பட்டன் அழுத்திப் பெற வேண்டும்.
4. அடுத்து Replace With பாக்ஸில், மீண்டும் Format | Highlight அழுத்தவும்.
5. அடுத்து Replace All என்பதனை அழுத்தவும். டாகுமெண்ட்டில் உள்ள, ஏற்கனவே ஹைலைட் செய்யப்பட்ட வண்ணம் அனைத்தும், ஸ்டெப் 1ல் நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்திற்கு மாறி இருக்கும்.

வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்: வேர்ட் புரோகிராம், விண்டோ ஒன்றைப் பிரித்து, ஒரே டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் செயல்பட வழி தருகிறது. அதே போல, இரண்டு பகுதிகளில் காணப்படும் வேர்ட் டாகுமெண்ட்டினை, இரு வேறு வியூக்களில் காணலாம். விண்டோவினைப் பிரிக்க, விண்டோ மெனுவில் Split என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் வியூ தேர்ந்தெடுக்கவும். இதில் ஸ்ப்ளிட் என்பதில் கிளிக் செய்தால், விண்டோ இரண்டாகப் பிரிக்கப்படும். அப்போது, வேர்ட் திரையில், படுக்கைக் கோடு ஒன்றை அமைக்கும். மவுஸ் கொண்டு இதனை மேல், கீழாக நகர்த்தலாம். மவுஸ் பட்டனை எங்கு விட்டுவிடுகிறோமோ, அதே இடத்தில், விண்டோ பிரிக்கும் கோடும் அமர்ந்து கொள்ளும். விண்டோவினைப் பிரித்ததை ரத்து செய்திட வேண்டும் என்றால், எஸ்கேப் கீயை அழுத்தலாம். ஆனால், இதனை மவுஸ் பட்டனை, பிரிக்கும் கோட்டில் வைத்துச் செயல்படுத்தும் முன் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஏதேனும் ஒன்றைப் பின்பற்றலாம்.
விண்டோ மெனுவிலிருந்து Remove Split என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, பிரிக்கும் கோட்டில், மவுஸ் கர்சரை வைத்து, டபுள் கிளிக் செய்திடவும்.
பிரித்த விண்டோவினை ஒன்றாக மாற்றுகையில், டெக்ஸ்ட்டில், கர்சர் எந்த விண்டோவில் இருந்ததோ, அந்த விண்டோவின் பண்புகள், டாகுமெண்ட்டுக்குத் தரப்படும். எடுத்துக் காட்டாக, கோட்டுக்கு மேலாக இருந்த பகுதி நார்மல் (Normal) வியூவிலும், கீழாக இருந்த பகுதி பிரிண்ட் லே அவுட் (Print Layout) வியூவிலும் இருந்து, கர்சர் கோட்டுக்குக் கீழாக இருந்த பகுதியில் வைக்கப்பட்டு, பிரிக்கப்பட்ட விண்டோ ஒன்றாக மாற்றி அமைக்கப்பட்டால், கிடைக்கும் விண்டோ, பிரிண்ட் லே அவுட் வியூவில் இருக்கும். கோட்டுக்கு மேலாக இருந்தால், நார்மல் வியூவில் இருக்கும்.

குறிப்பிட்ட பக்கம் செல்ல: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், குறிப்பிட்ட பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். அதன் பக்க எண் உங்களுக்குத் தெரியும். அந்தப் பக்கத்திற்குச் செல்ல, முதலில் எப்5 கீயினை அழுத்துங்கள். இப்போது Find and Replace டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் டேப் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். இங்கு Go To What என்பதில் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் முதலாவதாக Page என்ற ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். அருகே, Enter Page Number என்று காட்டப்பட்டு நீளமான கட்டம் ஒன்று காட்டப்படும். இதில் பக்க எண்ணை அமைத்து Next என்பதில் கிளிக் செய்தால், உடன் குறிப்பிட்ட பக்கம் திறக்கப்பட்டு காட்டப்படும்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies