ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்-லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம்- பாதுகாப்பான மின்சக்தி

27 Oct,2014
 

             கூகுள் அண்மையில் இன்னும் ஒரு குரோம் சோதனை தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமாக, ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் சார்ந்த நம் திறனை சோதனை செய்து கொள்ளலாம். இது Spell Up என அழைக்கப்படுகிறது. இது ஒரு விளையாட்டு விளையாடுவதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது. இருப்பினும் இதனை ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது நாடெங்கும் நடத்தப்படும் spelling bee என்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த சோதனைத் தளம் அதிகம் பயன் தரும். இந்த தளம் எப்படி செயல்படுகிறது என்று காட்டிட சிறிய வீடியோ படம் ஒன்று

 

http://googleblog.blogspot.com/2014/05/speak-and-learn-with-spell-up-our.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் முதலில் இதனைக் காணலாம்.
இந்த கேம் உள்ள இணைய தளம் https://spellup.withgoogle.com/ என்ற முகவரியில் இயங்குகிறது. இந்த தளம் சென்றவுடன், இது காட்டும் கிராபிக்ஸ் அனிமேஷன் படங்கள் பார்ப்பதற்கு ஆர்வத்தினைத் தூண்டுகின்றன. இந்த கேம் விளையாடுவதற்கு ஸ்பீக்கர் மற்றும் மைக் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். அவை இல்லை என்றால், விளையாட்டினை மேற்கொள்ள நமக்கு அனுமதி கிடைக்காது. பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் இதனை விளையாடுவதைக் காட்டிலும், ஸ்மார்ட் போனில் விளையாடுவது எளிதாக உள்ளது. கூகுள் குரோம், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வழியாக என்றால், விளையாடுகையில் நாம் சொற்களை உச்சரித்தும் விளையாடலாம். மற்ற ஐபோன், ஐபேட் சாதனங்கள் வழி என்றால், டைப் செய்து மட்டுமே விளையாட முடியும்.
ஆங்கில மொழியை முதல் மற்றும் இரண்டாவது மொழியாகக் கொண்டவர்களுக்கு, விளையாட்டு வாக்கில் அதன் சொற்கள், அவற்றின் எழுத்து ஆகியன குறித்து அறிந்துகொள்ள இந்த தளம் மிகவும் உதவும். ஸ்பெல்லிங், எப்படி உச்சரிப்பது, இல்லாத எழுத்தைக் கண்டுபிடிப்பது எனப் பல வகைகளில் இதனை விளையாடலாம். சரியான விடை அளிக்க, அளிக்க பக்கத்தில் ஒரு கோபுரம் எழுப்பப்படும். தவறான விடை தரும்போது, அந்த கோபுரம் சரியும். உங்களின் ஆர்வத்தைத் தூண்டி, ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்வதனை எளிதாக்குகிறது இந்த தளம்.

லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர்


அண்மையில் வெளியான ஒரு தகவல் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. விண்டோஸ் பயன்படுத்தப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால், அது அதன் பேட்டரியின் திறனை வெகுவாகக் குறைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்துகிறது
என்பதுதான். அப்படியானால், வேறு பிரவுசர்கள் பேட்டரியின் திறனை, வாழ்நாளைக் குறைப்பது இல்லை என்று பொருளாகிறது.
இதனை முழுமையாகப் புரிந்து கொள்ள “system clock tick rate” என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அளவினை விண்டோஸ் சிஸ்டம் தனக்குள்ளாக வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டும் எனச் சென்றால், நிச்சயம் இது குறித்துத் தெரிந்து கொள்ளலாம். குரோம் பிரவுசர் திறக்கப்பட்டவுடன், இந்த கிளாக் டிக் வேகத்தினை 1.000ms என செட் செய்து கொள்கிறது.
க்ளாக் டிக் என்பது என்ன? அது இங்கே எப்படி பிரச்னைக்குள்ளாகிறது? விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகின்றன. மின் சக்தியைக் குறைவாகப் பயன்படுத்த, தான் வேண்டப்படாத காலத்தில் ப்ராசசர் “தூங்குகிறது”. வரையறை செய்யப்பட்ட கால இடைவெளியில் எழுந்து தான் செயல்பட வேண்டுமா என்று பார்த்து, சூழ்நிலைக்கேற்ப செயல்படுகிறது.
இந்த இடைவெளி காலத்தினை குரோம் 1.000ms ஆக குறைத்து செட் செய்கிறது. மாறா நிலையில், இது 15.625 milliseconds ஆக இருக்கும். அதாவது ப்ராசசர், ஒரு விநாடியில் 64 முறை விழித்தெழுந்து என்ன நிகழ்வுகள் நடக்கிறது என்பதனைப் பார்க்கிறது.

 

இதனை 1.000ms என செட் செய்திடுகையில், ப்ராசசர் ஒரு விநாடியில் 1000 முறை விழித்தெழுந்து என்ன நடக்கிறது எனப் பார்த்து செயல்படுகிறது. 64க்கும் 1000க்கும் பெருத்த வேறுபாடு உள்ளதே. இதனால், 25 சதவீதம் கூடுதலாக மின் சக்தி உறிஞ்சப்படுகிறது. இந்த கிளாக் ரேட், அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக விண்டோஸ் சிஸ்டத்தால் செட் செய்யப்படுகிறது. ஒரே ஒரு அப்ளிகேஷன் மட்டும் இதனை மாற்றினால், அனைத்து அப்ளிகேஷன்கள் இயங்குவதும் கெடுக்கப்படுகிறது. இது குறித்து நாம் அறிந்து கொள்வதில்லை என்பதால், இந்த பிரச்னை குறித்தும் அறியாமல் இருக்கிறோம். ஏன், இது ஒரு பிரச்னை என்றே உணர்வதில்லை.
இந்த பிரச்னை குறித்து தெரிந்து கொள்கையில், மற்ற பிரவுசர்கள் இந்த சூழ்நிலையில் என்ன செய்கின்றன? என்ற கேள்வி எழலாம். தற்போது புழக்கத்தில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோர்ர் பிரவுசரில் இந்த டிக் ரேட் பொதுவாக, 15.625ms ஆக உள்ளது. ஆனால், அதிக வேலைப் பளு உள்ள தளத்திற்குச் செல்கையில், இது தானாக உயர்கிறது. எடுத்துக்காட்டாக, யு ட்யூப் தளம் சென்று, அங்கு உள்ள விடியோ பைல் ஒன்றை இயக்கும் போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதனை 1.00ms ஆக உயர்த்துகிறது. விடியோ பைலை மூடி, இந்த டேப்பினை மூடும்போது, பழையபடி இந்த வேகம் 15.625msக்குத் திரும்புகிறது. ஆனால், குரோம் பிரவுசர் திறக்கப்படுகையில் இது அதிகமாக்கப்பட்டு, பிரவுசர் மூடப்படும் வரை அப்படியே உள்ளது. மீண்டும் இதனைக் குறைத்து அமைக்கும் திறன் குரோம் பிரவுசருக்குத் தரப்படவில்லை. மைக்ரோசாப்ட், இது போல கிளாக் ரேட்டினை 1.00ms என அமைத்துக் கொள்வது தவறானது என்று கூறுகிறது. பார்க்க: http://msdn.microsoft.com/en-us/windows/hardware/gg463266.aspx
நம்மில் பலர், குரோம் பிரவுசரை மூடுவதே இல்லை. எடுத்துக்காட்டாக, நான் ஜிமெயிலை என் மின் அஞ்சலாகப் பயன்படுத்துகிறேன். இதனை எப்போதும் திறந்து பார்க்க, குரோம் பிரவுசரைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மெயில் வருகிறதோ, இல்லையோ, குரோம் பிரவுசர் திறந்தே இருக்கும். அதனால், என் லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி பவர் அதிகம் எடுத்துக் கொள்ளப்படும் சூழ்நிலையிலேயே இயங்கும்.
டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டரில் இதனை நான் அளந்து பார்க்க முடிந்தது. எந்தப் பணியும் மேற்கொள்ளாத சூழ்நிலையில், குரோம் பிரவுசர் திறந்த நிலையில், பெர்சனல் கம்ப்யூட்டரின் மின்சக்தி பயன்பாடு 15 முதல் 20 வாட் ஆக உள்ளது. குரோம் பிரவுசரை மூடுகையில், மின் சக்தி பயன்பாடு 12 முதல் 15 வாட்ஸ் ஆக இருந்தது. இந்த மின் சக்தி கூடுதல் அல்லது குறைதல் பெரிய பிரச்னையை ஏற்படுத்துவதில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில் இது பிரச்னையை ஏற்படுத்தும். ஏனென்றால், இங்கு மின் சக்தி பயன்பாடு என்பது நாம் தொடர்ந்து கண்காணித்து செம்மைப் படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். தேவை இல்லாமல், நாம் லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி சக்தியை வீணடிக்க வேண்டியதில்லை.
இந்த பிரச்னை மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் ஏற்படுவதில்லை. ஏனென்றால், அவை “tickless timers” என்ற ஒன்றைப் பயன்படுத்துகின்றன. ஆனால், நாம் அதிகம் பயன்படுத்துவது விண்டோஸ் சிஸ்டம் மட்டுமே. எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண பலரும் முயன்று வருகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லை. மீடியா பைல்களை இயக்கும் போது மட்டும் சற்று கூடுதலாக மின்சக்தி பயன்படுத்த முனைகின்றன. மற்ற நேரங்களில், செட் செய்த அளவிற்கு மேல் செல்வது இல்லை. மைக்ரோசாப்ட் இது குறித்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கலாம்.
ஆனால், அதுவரை என்ன செய்திடலாம்? கூகுள் இந்தப் பிரச்னையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. கூகுள் பிரச்னையைத் தீர்வுக்கு என எடுத்துக் கொள்ளும்போதுதான், தீர்வினை எதிர்பார்க்கலாம். பயனாளர்கள் அனைவரும், கூகுள் நிறுவனத்தின் பக் ட்ரேக்கரில் (https://code.google.com/p/chromium/issues/detail?id=153139) இந்தப் பிரச்னையைப் பதியலாம். அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்கள், இது குறித்துப் பதிவு செய்தால், கூகுள் இதனைத் தீவிரமான ஒன்றாகக் கருதலாம்.
அடுத்த தீர்வு, குரோம் பிரவுசர் பயன்படுத்துவதை நிறுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோர்ர் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசருக்கு மாறுவதே. ஆனால், இந்த இரண்டு பிரவுசர்களில் உள்ள மற்ற பிரச்னைகள் இவற்றைப் பயன்படுத்துவதில் தயக்கத்தினை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த பிரச்னையை உணர்ந்த பலரும், ”என்ன ஆனாலும் சரி, குரோம் பிரவுசரையே பயன்படுத்துவோம்” என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
ஆனால், கூகுள் நிறுவனத்தின் பிரவுசர் வல்லுநர் குழுவிற்கு இந்த பிரச்னை சென்றதாகவும், இது குறித்தும் இதற்கான தீர்வு குறித்தும் ஆய்வு செய்து தீர்வினைக் கண்டறியும்படி கூகுள் வல்லுநர் குழுவிற்கு அறிவுரை கூறியுள்ளதாகவும் அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தீர்வுக்குக் காத்திருக்கலாம்.


கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பான மின்சக்தி


இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என இங்கு காணலாம். அவற்றின் மூலம் கிடைக்கும் மின்சக்தியின் தன்மை குறித்தும் சில விவரங்களை இங்கு பார்ப்போம்.
ஸ்பைக்ஸ், சர்ஜஸ் என்பவை எதைக் குறிக்கின்றன?
டிஜிட்டல் சாதனங்களுக்கு வரும் மின்சாரம் சீராக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வழக்கமான வோல்டேஜ் அளவை விட்டு அதிகமாக இருந்தால் அது அதிக வோல்டேஜ் (Over Voltage) ஆகும். அதுபோல் வோல்டேஜ் அளவு குறைவாக வருவது குறைவான வோல்டேஜ் (Under Voltage) ஆகும்.
அதிக வோல்டேஜ் பிரிவில் ஸ்பைக்கும், சர்ஜும் வருகின்றன. இந்த இரண்டுக்கும் இடையே சிறு வேறுபாடு உண்டு. மிக அதிக வோல்டேஜ் திடீரென வந்து உடனடியாக மறைந்து போவதை ஸ்பைக் என அழைக்கிறார்கள். Impulse என்றும் இதைக் குறிப்பிடலாம். மிக அதிக வோல்டேஜ் சற்று அதிகமான நேரம் (பொதுவாக நொடியில் 1/20 பங்கு) இருந்தால் அதை சர்ஜ் எனக் குறிப்பிடுகின்றனர்.
வோல்டேஜ் அளவு ஆபத்தான அளவுக்கு, சற்று காலத்திற்க்கு, குறுகிய நேரத்திற்குக் குறைந்து போவது Brownout ஆகும். Sags என்றும் இதைக் கூறுவார்கள். இதைப் பார்த்துதான் கம்ப்யூட்டர்கள் பயப்பட வேண்டும். சுத்தமாக மின் இணைப்பு துண்டாவதை Blackout எனலாம். எலக்ட்ரோமேக்னடிக் அல்லது ரேடியோ அலை அல்லது வேறு ஏதாவது சிக்னலால் மின் இணைப்பில் இரைச்சல்கள் போன்றவை கலந்து விடலாம். இதை Line Noises என அழைக்கின்றனர். மிகக் குறைந்த நேரத்தில் ஏற்புடைய அளவை விட மிகக் குறைந்த அளவுடன் கூடிய வோல்டேஜ் இதனால் கிடைக்கும்.
பவர் கண்டிஷனிங்: மின்சாரம் எப்போதும் சீராக வரும் என்று சொல்ல முடியாது. ஏற்ற, இறக்கத்துடன், இரைச்சல் போன்றவற்றை சுமந்து கொண்டுதான் மின்சாரம் நமக்குக் கிடைக்கிறது. Spikes, Surges, Brownouts, Blackouts, Noise என்பவை எல்லா சாதனங்களுக்கும், குறிப்பாக கம்ப்யூட்டர்களுக்கு கேடு விளைவிப்பவை. இவை இல்லாமல் சீரான மின்சாரத்தை வழங்க சில சாதனங்கள் உள்ளன. அவை கொடுக்கிற பாதுகாப்பை Power Conditioning அதாவது மின்சாரத்தை நிலைப்படுத்துதல் எனக் குறிப்பிடுகின்றனர்.


 

பவர் கண்டிஷனிங் செய்ய என்ன தேவை?
பவர் கண்டிஷனிங் செய்திட பல சாதனங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவை — Surge Supressors, Spike Busters, Isolation Transformers, Servo Stabiliser, Constant Voltage Transformers or Uninterruptible Power Supply System என அழைக்கின்றனர். நாம் பயன்படுத்தும் சாதனத்திற்கேற்பவும், நமக்கு மின்சாரம் எப்படி வழங்கப்படுகிறது என்பதற்கேற்பவும் தேவையான சாதனத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
எந்த சாதனம் சிறந்தது?
மேற்படி சாதனங்களுள் சிறந்தது யுபிஎஸ் என்ற Uninterruptable Power Supply சாதனமே. ஸ்பைக், சர்ஜ், பிரவுன்அவுட், பிளாக்அவுட் போன்றவற்றை கையாளும் திறன்பெற்றது இந்த யு.பி.எஸ். ஆகும்.
மின்சாரம் தடைபடும் பொழுது எப்படி யுபிஎஸ்ஸால் மின்சாரத்தை வழங்க முடியும்?
நல்ல கேள்வி. யு.பி.எஸ்.ஸில் பேட்டரி உண்டு. அத்துடன் பேட்டரி சார்ஜர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவையும் யு.பி.எஸ். ஸில் உண்டு. பேட்டரியில் இருந்து வெளியாகிற Direct Current மின்சாரத்தை கம்ப்யூட்டருக்குத் தேவையான Alternating Current மின்சாரமாக மாற்றுகிற வேலையை இன்வெர்ட்டர் செய்கிறது. வழக்கமான மின் இணைப்பு தடைப்பட்டவுடன்,பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் இதனால் கம்ப்யூட்டருக்கு மின்சாரம் கிடைக்கிறது.
பேட்டரி தனது சக்தியை இழந்தால் என்ன செய்ய?
மின் இணைப்பு துண்டானவுடன், கம்ப்யூட்டருக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் பொறுப்பு பேட்டரியின் மேல் விழுகிறது. மின்சக்தியைத் தரத் தொடங்கும் பேட்டரி கொங்சம் கொஞ்சமாக தனது மின்சக்தியை இழந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் வழக்கமான மின்சாரம் வந்துவிட்டால் கவலையில்லை. யுபிஎஸ்ஸில் உள்ள பேட்டரி சார்ஜர், பேட்டரியை சார்ஜ் செய்ய ஆரம்பித்து விடும்.
மின் இணைப்பு துண்டாகி, பேட்டரியினால் கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருக்கிறது. வழக்கமான மின் இணைப்பு இன்னும் வரவில்லை என வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட அளவுக்கும் கீழ் பேட்டரியின் சக்தி இறங்கி விட்டால், பலத்த ஒலியை எழுப்பி உங்களை யுபிஎஸ் எச்சரிக்கும். அப்போது கம்ப்யூட்டரை ஆப் செய்யுங்கள். யுபிஎஸ்ஸையும் ஆப் செய்யுங்கள்.
எவ்வளவு நேரம் யுபிஎஸ்ஸால் மின் இணைப்பு துண்டான சூழ்நிலையில் தாக்கு பிடிக்க முடியும்?
அது உங்களது யுபிஎஸ்ஸின் பேக்கப் நேரத்தைப் பொறுத்தது. 5 நிமிட பேக்கப் யு.பி.எஸ்.ஸால், மின்சாரம் துண்டான பின்பு 5 நிமிடங்கள் தாக்கு பிடிக்க முடியும். அதிக நேரம் பேக்கப் கொண்ட யுபிஎஸ் என்றால் அதன் விலை சற்று கூடுதலாக இருக்கும். பேட்டரியும் பெரியதாக இருக்கும்.
பேட்டரி நேரம் போக யுபிஎஸ்ஸில் வேறு ஏதாவது கவனிக்க வேண்டிய விஷயம் உள்ளதா?
எவ்வளவு Kilo Volt Ampere திறன் கொண்ட யுபிஎஸ் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கம்ப்யூட்டருக்கு 0.5கேவிஎ யுபிஎஸ் போதும். பல கம்ப்யூட்டர்களை யுபிஎஸ்ஸில் இணைப்பதாக இருந்தால் அதிக கேவிஏ கொண்ட யுபிஎஸ்ஸை வாங்க வேண்டும்.
என்ன பேட்டரியைப் பயன்படுத்துகிறார்கள்?
கார்களுக்கு பயன்படுத்துகிற பேட்டரி, லெட்ஆசிட் பேட்டரி, நிக்கல்காட்மியம் மற்றும் மூடப்பட்டு பராமரிப்பு தேவையற்ற பேட்டரி எனப் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் மோசமானது கார் பேட்டரி. பெரும்பாலான சிறு யுபிஎஸ்களில் SMF (Sealed Maintenace Free) பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. 5 முதல் 7 வருடங்கள் வரை இவை உழைக்கும்.
யு.பி.எஸ். ஸில் பிரிவுகள் உண்டா?
Online, Offline or Line interactive என மூன்று வித யுபிஎஸ்கள் கிடைக்கின்றன. மின் இலாகா வழங்கும் மின்சாரம் நேரடியாக கம்ப்யூட்டருக்கு ஆஃப் லைன் யுபிஎஸ்ஸில் வழங்கப்படுகிறது. மின்சாரம் தடைப்பட்டால் மட்டுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் மூலம் கம்ப்யூட்டருக்கு சீரான மின்சாரம் செல்லும். மின் இலாகா வழங்கும் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருந்தாலும், ஆன் லைன் யுபிஎஸ் எப்பொழுதுமே பேட்டரி மற்றும் இன்வெர்ட்டரை சார்ந்தே உள்ளது. இவை வழங்குற மின்சாரம் மட்டுமே கம்ப்யூட்டருக்கு அனுப்படும். Ferroresonat Transformer கொண்ட இன்டெராக்டிவ் யுபிஎஸ் சீரான வோல்டேஜை கம்ப்யூட்டருக்கு வழங்கும்.
எது மலிவானது?
ஆஃப்லைன் யுபிஎஸ்தான் மலிவானது. ஆன்லைன் யுபிஎஸ்ஸின் விலை சற்று கூடுதல். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட விலையில் இன்டராக்டிவ் யுபிஎஸ் கிடைக்கும்.
பிரின்டரை யுபிஎஸ்ஸில் இணைக்கலாமா?
யு.பி.எஸ் ஸின் திறன் மற்றும் இணைக்கிற பிரின்டரைப்பொறுத்து இதற்கான விடை உள்ளது. பொதுவாக லேசர் பிரின்டரை யு.பி.எஸ்.ஸில் இணைக்கக் கூடாது. மற்ற பிரின்டர்களை இணைக்கலாம். ஆனால் உங்களிடம் அதிக கே.வி.ஏ. கொண்ட யுபிஎஸ் இருக்க வேண்டும்Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies