மொபைல் சாதனங்கள் – ஒரு சிந்தனை--விண்டோஸ் 7 டிப்ஸ்

06 Oct,2014
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன. பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன. நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதற்கு, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, அலுவலக நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்கு எனப் பல பரிமாணங்களில் இவை உங்களுக்குத் துணை புரிகின்றன.

 

ஸ்மார்ட் போன் ஒன்று இணைய இணைப்புடன் இருந்தால், கூகுள் மேப் மூலம், நமக்குத் தெரியாத எந்த ஊரிலும், நாம் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். நம் தெருவின் முனையில் இருக்கும் மாரியம்மன் கோவில் குறித்துச் சொல்லி, கூகுள் மேப் வழி காட்டும்.
கைகளில் வைத்துப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள், அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும், அல்லது டேப்ளட் பி.சி.யாக இருந்தாலும், மக்களின் வாழ்வினையும், வேலையையும் முழுமையாக மாற்றிவிட்டது என டிஜிட்டல் தொழில் பிரிவில் செயல்படுவோர் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டு நம் வசதிகளை அதிகப்படுத்தி உள்ளன.
கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சாதனங்கள், நமக்குத் தேவைப்படும் அனைத்தையும்கொண்டுள்ளன. தொலைபேசி, கேமரா, உடனடியாக செய்தி அனுப்பும் இன்ஸ்டண்ட் மெசேஜ் சிஸ்டம், மியூசிக் பாக்ஸ், திசை காட்டி, சீதோஷ்ண நிலை குறித்த எச்சரிக்கை தரும் சிஸ்டம், தொலைக்காட்சி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்தும் 10 கோடி பேரில், 7 கோடியே 20 லட்சம்பேர், சமுதாய வலைத்தளங்களை, தங்கள் மொபைல் சாதனங்கள் வழியாகவே இணைத்துக் கொள்கின்றனர் என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதே போல, இணையம் பயன்படுத்தும் பல கோடி மக்களில், 89 சதவீதத்தினர் மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் கண்டறியப் பட்டுள்ளது.
எத்தனையோ சிறு வயது மாணவ மாணவியர், தாங்கள் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி தங்கள் கல்வி மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த தகவல்களைத் தங்கள் நண்பர்களுடன் எளிதாகவும், விரைவாகவும் பகிர்ந்து கொள்வதாகப் பெருமை பட்டுக் கொள்வது இன்று சகஜமாகிவிட்டது. இவை மட்டுமின்றி, தங்களின் வகுப்பு பாடங்கள் குறித்த பாடங்களை வகுப்புத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஒருவருக்கொருவர் பாடத்தில் உள்ள கருத்துக்களைப் பகிர்ந்து விளக்கிக் கொள்ளுதலையும் மொபைல் போன் வழியாக மேற்கொள்வதாகவும் பல சிறு வயது மாணவர்கள் கூறி உள்ளனர்.
தொழில் ரீதியாகவும், டேப்ளட் பி.சி.க்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை மெதுவாகப் பிடித்து வருகின்றன. உலக அளவில், மொபைல் ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பி.சி.க்களும் தொடர்ந்து விற்பனையில் உயர்ந்து வருகையில், கம்ப்யூட்டர்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, குறைந்து வருகிறது.
ஆனால், இந்தியா போன்ற நாடுகளில், இணைய இணைப்பு மற்றும் தொலை தொடர்புக்குத் தேவையான அலைக்கற்றைக்கான கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதால், மற்ற நாடுகளில் ஏற்பட்டு வருவதைப் போல வளர்ச்சி, இந்த நாடுகளில் ஏற்படுவதில்லை. குறிப்பாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மொபைல் சாதனங்களில், ஸ்ட்ரீமிங் முறையில் தரும் தொழில் நுட்பம், இன்னும் இங்கு வளர்ச்சி அடையவில்லை. தொலை தொடர்பு தருவதில், சராசரி வேகத்தில், உலக அளவில் இந்தியா 119 ஆவது இடத்தையே பெற்றுள்ளது. 4ஜி அலைக்கற்றை சேவை கிடைக்கும் என்ற தகவல் இன்னும் தரப்பட்ட உறுதிமொழியாகவே உள்ளது. இதற்கான காரணம், இந்தியாவில் 15 கோடியே 30 லட்சம் பேர் வயர்லெஸ் இணைப்பு பெற்று டேட்டா பரிமாற்றம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இரண்டு கோடியே 53 லட்சம் பேர் மட்டுமே, வயர்லெஸ் பிராட்பேண்ட் பயன்படுத்துகின்றனர். இந்த வகைப் பயனாளர் எண்ணிக்கை அதிகமானால்தான், தகவல் தொலை தொடர்பு நிறுவனங்கள், நவீன தொலைதொடர்பு சாதனங்களை அமைப்பதில் முதலீடு செய்திட துணிந்து முன்னுக்கு வருவார்கள். ஆனால், இது விரைவில் நடக்கும். 1990 ஆம் ஆண்டு வாக்கில், மொபைல் போன் பயன்பாடு அறிமுகமானபோது, தெருவோர காய்கறி விற்பனை செய்திடும் பெண்மணியும், வீடுகளில் வேலை உதவி செய்வோரும், மொபைல் போன் பயன்படுத்துவார்கள் என்று கனவில் கூட எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம்.
மாறிவரும் வாழ்க்கை முறை: மொபைல் சாதனங்கள் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளன. பரிசுப் பொருட்கள், மொபைல் போன் மூலம் இணையதளங்களில் பார்க்கப்பட்டு, நண்பர்களுக்கு வழங்கப்படுகின்றன. உணவுப் பண்டங்கள் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆர்டர் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. வாட்ஸ் அப் மூலமே, அனைத்து உரையாடல்களும், போட்டோ பகிர்தலும், ஏன், வர்த்தகமும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இது ஒரு குடும்பத்தில் உள்ளவர்களிடையே, உறவுப் பாலத்தைத் தகர்ப்பதாக, ஒரு குடும்பத் தலைவி கருத்து தெரிவிக்கிறார்.
ஒரே ஹாலில் அமர்ந்து இயங்கும் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் கைகளில் வைத்து இயக்கும் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களால், தனித் தனித் தீவுகளாக இயங்குகின்றனர்.
வயதான மூதாட்டி, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவருடைய மகன்களில் இருவர் டேப்ளட் பி.சி.யில், கேம்ஸ் விளையாடிக் கொண்டுள்ளனர். ஒரு மகள் தன் தோழியுடன் தான் எடுத்த சேலையின் போட்டோவினை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி, கருத்து கேட்டு தொடர்ந்து மெசேஜ் அனுப்புகிறார். மற்ற இருவர், தங்கள் பள்ளி நண்பர்களுடன் மொபைல் போனில், மெசேஜ் மூலம் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்கள் அனைவரும், ஒரு வீட்டில் ஒரே ஹாலில் தான் உள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், மெட்ரோ நகரங்களில் 19 சதவீத பள்ளி மாணவர்கள், ஒரு நாளில் மூன்று முதல் ஆறு மணி நேரம் மொபைல் போன் பயன்படுத்தி வந்தனர். இப்போது இது 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், மொபைல் போன் பழக்கத்திற்கு அடிமையாவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது.
இது அவர்களின், வாழ்க்கை முறையையும், மற்றவர்களுடன் பழகும் தன்மையினையும் வெகுவாகப் பாதிக்கிறது. மொபைல் போனில் அதிக நேரம் செலவழிப்போர், மனித இனத்துடன் கூடிய நல்ல உறவினை விடுத்தே இருக்கின்றனர் என்று உளவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் எச்சரித்துள்ளனர். இந்த நிலை மோசமான ஒரு சூழ்நிலைக்கு நம்மைத் தள்ளக் கூடாது எனவும் இவர்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால், அதற்கு என்னதான் வழி? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.விண்டோஸ் 7 டிப்ஸ்டாஸ்க் பார் ட்யூன் அப்: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

 

ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் தான் பிடிக்கிறது. இவர்கள் புதிய வடிவத்தைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்த எனக்கு, டாஸ்க் பார் ப்ராப்பர்ட்டீஸ் பார்த்த போது பழைய வகைக்கு மாறிக் கொள்ளலாம் என்று தெரிய வந்தது. நீங்களும் விரும்பினால் கீழ்க்கண்டபடி அதனை செட் செய்திடலாம்.
டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Taskbar buttons என்ற கீழ் விரி மெனுவினைக் காணவும்.
இதில் Combine when taskbar is full என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அந்த புரோகிராம் பெயருடன் நீளமான சதுரத்தில், முன்பு காட்டப்பட்டது போல காட்சி அளிப்பதனைக் காணலாம்.
டாஸ்க்பார் ஹாட் கீ: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.
டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் வரிசையாகக் காட்டப்படும்.
டாஸ்க்பாரில் உள்ள ஐட்டம் ஒன்றில், கண்ட்ரோல் + ஷிப்ட்+கிளிக் செய்தால், அந்த புரோகிராம் அட்மினிஸ்ட்ரேட்டர் திறப்பது போலத் திறக்கப்படும்.
இதே போல டாஸ்க் பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட் + கிளிக் செய்தால், அதற்கான புரோகிராம் இயக்கத்தை இன்னொரு விண்டோவில் திறக்கும்.
டாஸ்க்பார் ஐட்டம் ஒன்றில் ஷிப்ட + ரைட் கிளிக் செய்தால், அந்த புரோகிராமிற்கான விண்டோ மெனு காட்டப்படும்.
கால்குலேட்டர்: பொதுவாக விண்டோஸ் சிஸ்டத்தில் கால்குலேட்டர் ஒன்று அக்செசரீஸ் பட்டியலில் தரப்படும். இது சாதாரணமான கணக்குகளைப் போட்டுப் பார்க்க பயன்படும். கூட்டல், பெருக்கல், கழித்தல் மற்றும் வகுத்தல் கணக்குகளை இதில் மேற்கொள்ளலாம்.
விண்டோஸ் 7 தொகுப்புடன் கிடைக்கும் கால்குலேட்டரில் பல புதிய சிறப்புகள் உள்ளன. விண்டோஸ் 7 ஸ்டார்ட் மெனு மேலாக உள்ள சர்ச் பாரில் CALC என டைப் செய்து என்டர் அழுத்தவும். உடன் கால்குலேட்டர் கிடைக்கும். இதன் மேலாக உள்ள View என்பதில் கிளிக் செய்திடவும். இதன் நேர் கீழாக கால்குலேட்டர் கட்டமைப்பை மாற்றிக் காணும் வகையில் ஆப்ஷன்ஸ் தரப்படும். இவை standard, scientific, programmer மற்றும் statistics என நான்கு வகைகளில் கிடைக்கும்.
மேலும் View>Worksheets என்ற பிரிவில் சென்றால் நம் கடன் தொகைக்கான மாதம் கட்ட வேண்டிய தொகையினைக் கணக்கிடும் வசதி உள்ளதனைப் பார்க்கலாம்.
விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள் இந்த கால்குலேட்டரை இயக்கிப் பாருங்கள். பின் சாதாரண கணக்குகளுக்கான கால்குலேட்டரை மூட்டை கட்டி வைத்திடுவீர்கள்Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies