எம்.எஸ். ஆபீஸ் முக்கிய ஷார்ட் கட் கீகள்=எக்ஸெல்: ஒர்க் ஷீட்களில் ஹெடர் மற்றும் புட்டர்
02 Oct,2014
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
வேர்ட் தொகுப்பு:
Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.
Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய இடைக்கோட்டினை அமைக்கிறது. இதனால் ஹைபன் அமைக்கப்பட்ட இரு சொற்களும் பிரிக்கப்பட மாட்டா.
Ctrl + T: பாராக்களை ஒரு ஹேங்கிங் இன்டென்ட் எனப்படும் முன் இடைவெளியிட்டு அமைக்கிறது.
Ctrl + Shift + T: மேலே சொன்ன பாரா ஹேங்கிங் இன்டென்ட் இருப்பின் அதனை நீக்குகிறது.
எக்ஸெல் தொகுப்பு:
Shift + F11 : அப்போதைய ஒர்க் புக்கில் புதிய ஒர்க் ஷீட் ஒன்றை இணைக்கிறது.
Alt + Shift + F1 : மேலே சொன்ன அதே வேலையை மேற்கொள்கிது. ஆம், இந்த இரண்டு ஷார்ட்கட் கீகளும் ஒரே வேலையைச் செய்கின்றன. நீங்கள் எதனை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.
அவுட்லுக்:
Ctrl + Shift + H: கர்சருக்கு வலது பக்கம் உள்ள சொல்லை அழிக்கிறது.
Ctrl + F: தேர்ந்தெடுத்த மெசேஜை பார்வேர்ட் செய்கிறது.
Ctrl + Alt + F: தேர்ந்தெடுத்த மெசேஜை ஒரு அட்டாச்மெண்ட் ஆக அனுப்புகிறது.
Ctrl + R: தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜுக்கு பதில் அனுப்புகிறது.
Ctrl + Shift + R: தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜுக்கு பதிலை அனைவருக்கும் அனுப்புகிறது.
எக்ஸெல்: ஒர்க் ஷீட்களில் ஹெடர் மற்றும் புட்டர்
எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது.
ஒன்று அல்லது இரண்டு ஒர்க் ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும். அதுவே, பல ஒர்க் ஷீட்கள் அடங்கிய ஒர்க்புக்காக அமைந்து, அவை அனைத்திலும் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பதாக இருந்தால், அந்த வேலை சற்று நேரம் எடுக்கும் செயலாக அமையும். இதனை எப்படிச் சந்திப்பது எனப் பார்க்கலாம். இது ஒன்றும் கடினமான வேலை அல்ல. அனைத்து ஒர்க் ஷீட்களையும் ஒரு குழுவாக எண்ணி செயல்பட்டால், இது மிகவும் எளிதாக அமையும்.
1. முதலில் எந்த ஒர்க் ஷீட்களில் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பது என்பதனை முடிவு செய்து கொள்ளவும்.
2. அந்த வரிசையில் உள்ள முதல் ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், கடைசி ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கும் வரை ஷிப்ட் கீயை அழுத்திப் பிடிக்கவும். இப்போது பல ஒர்க் ஷீட்கள் தேர்ந்தெடுக்கப்படும். இதனை உணர்த்திக் காட்ட, எக்ஸெல் புரோகிராம், Group என்ற சொல்லை தன் டைட்டில் பாரில் காட்டும்.
4. இனி, நீங்கள் விரும்பியபடி, ஹெடர் அல்லது புட்டரை அமைக்கவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த ஒர்க் ஷீட்கள் அனைத்தும் அதே போல் அமைக்கப்படுவதனைக் காணலாம்.