Steam மியூசிக் பிளேயரின் பீட்டா பதிப்பு வெளியீடு-பார்மட்டிங் ஷார்ட்கட்
26 Sep,2014
Steam மியூசிக் சேவையில் புதிய மியூசிக் பிளேயரினை அறிமுகம் செய்துள்ளதாக Valve நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒன்லைனில் ஹேம் விளையாடும்போது பாட்டுக்களை கேட்டு ரசிக்கும் வசதியினை இச்சேவை வழங்கிவருகின்றது.
Steam கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் புதிய பீட்டா பதிப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Steam தளத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் இவ்வசதி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பார்மட்டிங் ஷார்ட்கட்
எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண்டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து அழுத்தினால் 15.45 என்ற நேரக் குறியீட்டை 3:45 PM என மாற்றும். Ctrl + Shift + # என்ற கீகள் 11/4/2007 என்ற நாள் குறியீட்டை 4Nov07 என மாற்றும். Ctrl + Shift + $ என்ற கீகள் 50 என உள்ள எண்களை கரன்சியுடன் ($50.00) சேர்த்துக் காட்டும்.