சொற்களை எண்ணுகையில் ஹைபன் விலக்க: வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை அமைக்கையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களுக்குள், டாகுமெண்ட்டை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கு ஏற்படும். பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகள், மொழி பெயர்ப்பு ஆவணங்கள் போன்றவற்றில் இந்த கட்டுப்பாட்டினைப் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதற்கென டாகுமெண்ட்டினை உருவாக்குகையில், பல நிலைகளில் மொத்த சொற்களின் எண்ணிக்கையினை, வேர்ட் கவுண்ட் (Word Count) என்ற டூல் மூலமாகப் பார்ப்போம். இதில் ஹைபன் என்னும் சொற்களுக்கு இடையேயான கோடுகளால், பிரச்னை ஏற்படும். இவற்றைத் தனிச் சொற்களாக எடுத்துக் கொண்டு இந்த டூல் செயல்படும். இவற்றை விலக்கி, சொற்களை எண்ண ஒரு சிறிய செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். அதனை இங்கு காணலாம்.
ஆங்கிலத்தில் கூட்டு சொற்கள் (compound words) மூன்று வகைப்படும். முடிக்கப்பட்ட கூட்டு (எ.கா. ‘firefly’), ஹைபன் அமைக்கப்பட்டது (எ.கா. ‘daughterinlaw’) மற்றும் மாற்றமில்லாமல் அமைவது (எ.கா. ‘post office’). இந்தக் கூட்டுச் சொற்களில், பொருள் மாறாமல் இருக்க ஹைபன் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக old furniture shop என்பதில், கடை பழையதா, அங்கு விற்கப்படும் பொருட்கள் பழையனவா என்று சரியாகக் காட்ட வேண்டும். இதனை old furnitureshop மற்றும் old furniture shop எனவும் எழுதலாம். இது போன்ற சொற்களில், ஹைபன் ஒரு சொல்லாக எடுக்கப்பட்டு எண்ணப்படும். இதனைத் தவிர்க்க கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
1. Edit மெனுவில் இருந்து Replace என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+Hஅழுத்தவும். இப்போது வேர்ட், Find and Replace டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. அடுத்து More பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Use Wildcards என்ற செக் பாக்ஸில் டிக் அடிக்கவும்.
4. இப்போது Find What என்ற பாக்ஸில் ([Az]{2,})([Az]{2,}) என என்டர் செய்திடவும்.
5. தொடர்ந்து Replace With பாக்ஸில் \1 \2 என அமைக்கவும். இதில் 1 என்பதற்குப் பின் அடுத்த ஸ்லாஷ் முன்பாக ஒரு ஸ்பேஸ் விடப்பட்டுள்ளது. இதனைச் சரியாக அமைக்கவும்.
6. இனி Replace All என்பதில் கிளிக் செய்திடவும். Find and Replace தொடர்ந்து டயலாக் பாக்ஸை மூடவும்.
இனி டூல்ஸ் மெனுவில், வேர்ட் கவுண்ட் (Word Count) என்ற டூலைத் தேர்ந்தெடுத்து அழுத்தி சொற்களின் எண்ணிக்கையைப் பெறவும்.
டாகுமெண்ட்டில் உள்ள ஹைபன்கள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டதே எனப் பதற்றம் அடைய வேண்டாம். பழைய ஹைபன்கள் கிடைக்கும் வரை கண்ட்ரோல் +இஸட் கீகளை அழுத்தவும். டாகுமெண்ட் பழைய நிலைக்குச் செல்லும்.
பின்னணி நிறத்தை மாற்றலாம்: வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர் பலர் தங்கள் கண் பார்க்கும் சக்தியில் மாற்றம் இருப்பதாகச் சொல்லக் கேட்கலாம். இதற்குக் காரணம் பெரும்பான்மையானவர்கள் வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களைப் பார்ப்பது தான் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு மைக்ரோசாப்ட் மாற்று வழி ஒன்று வைத்துள்ளது. பின்னணி மற்றும் எழுத்துக்களின் நிறத்தை மாற்றி வைத்தும் இயக்கும் வகையில் இவ்வழி உள்ளது. முதலில் Start, All Programs, Microsoft Word வழியாக சென்று வேர்ட் பைல் ஒன்றைத் திறக்கவும். பின்னர் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபைத் தட்டி புதிய விண்டோ பெறவும். அதில் முதலாவதாக "Blue background, white text.” என்று இருக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வேர்ட் டாகுமென்ட் திறந்தால் அது நீலக் கலரில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களைக் காட்டும்.
ஆட்டோ பார்மட் எங்கு உள்ளது?
வேர்ட் புரோகிராம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலம் தொடங்கி, அதன் ஆட்டோ பார்மட் டூல் பல வகை திருத்தங்களை மேற்கொள்ள உதவி வந்தது. குறிப்பிட்ட டெக்ஸ்ட் அல்லது முழு டாகுமெண்ட்டினைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர், Format | AutoFormat கிளிக் செய்தால், வேர்ட் நாம் அமைத்து வைத்த பார்மட்டில், அந்த டெக்ஸ்ட்டினை அமைத்துத் தரும்.
இந்த வசதி தந்த டூல், வேர்ட் 2007க்குப் பின்னர், நீக்கப்பட்டதாகக் காட்சி தந்தது. ஏனென்றால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், வேர்ட் புரோகிராமினை வடிவமைத்தவர்கள், இந்த டூலை அநேகம் பேர் பயன்படுத்தவில்லை என்று கருதி, எடுத்துவிட்டனர். அதனாலேயே, வேர்ட் 2007 தொகுப்பிலும், ரிப்பன் கிளிக் செய்து அதன் மெனுக்களில் தேடினாலும், இந்த டூல் கிடைப்பதில்லை. ஆனால், உண்மையிலேயே, இந்த டூல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்த நீங்கள் ஆர்வம் உடையவராக இருந்தால், தேடி அமைத்துக் கொள்ளும்படி மைக்ரோசாப்ட் விட்டுவிட்டது.
டெக்ஸ்ட் ஒன்றில் ஒரே கிளிக் செய்து, நாம் விரும்பும் வடிவமைப்பை, ஸ்டைலை டாகுமெண்ட்டில் அமைத்திட உதவும் இந்த ஆட்டோ பார்மட் வசதியினை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்திடவும். பின்னர், Word Options என்பதில் கிளிக் செய்தால், வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது புறத்தில், Customize என்னும் ஆப்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
3. அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், Choose Commands பயன்படுத்தவும். இங்கு கிடைக்கும் பட்டியலில், Commands Not In The Ribbon என்பதனைக் கிளிக் செய்திடவும்.
4. இங்கு தரப்பட்டுள்ள டூல்களில், கீழாகச் சென்று AutoFormat என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. தொடர்ந்து பட்டனை அழுத்தவும். இப்போது இந்த கட்டளை டயலாக் பாக்ஸின் வலது பக்கம் இருக்கும் கட்டத்திற்கு மாறிக் கொள்ளும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது இந்த கட்டளை, Quick Access Toolbarல் கிடைக்கும். ஆபீஸ் பட்டனுக்கு வலது புறத்தில் ரிப்பனுக்கு மேலாக கிடைக்கும். இனி ஆட்டோ பார்மட் டூலை எப்போது விருப்பப்பட்டாலும் பெற்றுக் கொள்ளலாம்.
எக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், எனக்கு இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட எப்படி செட் செய்திட வேண்டும் என்பதனை இங்கு பார்க்கலாம்.
முதலில் டாஸ்க் பாரில் உங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகான் எங்குள்ளது எனப் பார்க்கவும். அல்லது ஸ்டார்ட் கிளிக் செய்து Windows Explorer என சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். ஐகான் கிடைத்தால், வலது கிளிக் செய்து கிடைக்கும் கீழ்விரி பட்டியலில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Shortcut என்ற டேப்பின் கீழ், குறிப்பாக Target என்பதனை அடுத்து உள்ள டெக்ஸ்ட் இன்புட் பாக்ஸைக் கவனிக்கவும். இங்கு நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொடக்க நிலையில் திறக்க விரும்பும் போல்டரின் முகவரியினை %windir%\explorer.exe என்பதனை அடுத்து டைப் செய்திடவும். இதற்கு இன்னொரு எளிய வழியும் உண்டு. நீங்கள் விரும்பும் போல்டருக்கு பிரவுஸ் செய்து சென்று, அதன் அட்ரஸ் பாரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Copy address as text என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, பின்னர் டெக்ஸ்ட் இன்புட் பாக்ஸில் அப்படியே பேஸ்ட் செய்துவிடவும். இதன் பின்னர், Apply என்பதில் கிளிக் செய்து, அதன் பின்னர் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறந்தால், நீங்கள் செட் செய்த போல்டர் தயாராகத் திறக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். மீண்டும் மாற்ற வேண்டும் எனில், மேலே சொன்ன அதே நிலைகளில் சென்று மாற்றவும்.