இணையத்தை வளர்த்த வல்லுநர்கள்-கம்ப்யூட்டர் பைல்களின் பின் பெயர்

25 Aug,2014
 

             


நீர் மட்டுமல்ல, இணையம் இன்றியும் இந்த உலகம் வாழாது என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகிறோம். நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர், முக்கிய சில திருப்பங்களை இணைய வளர்ச்சியில் ஏற்படுத்தி பங்காற்றியுள்ளனர். அவர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் இங்கு காணலாம்.
1. மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreesen): Mosaic என்னும் பிரவுசரை உருவாக்கியவர். முதல் நிலையில், இணையத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றதில், இந்த பிரவுசருக்கு இடம் உண்டு. பின்னால், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற இணைய பிரவுசரை உருவாக்குவதில் இவர் அதிகம் துணை புரிந்தார். 1990 ஆம் ஆண்டுவாக்கில், இணையப் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்த போது, இந்த பிரவுசரின் இடமும் முதல் இடத்தில் இருந்தது.
2. விண்ட் செர்ப் (Vint Cerf): இணையத்தை உருவாக்கிய தந்தை என, Bob Kahnஎன்பவரோடு சேர்த்து அழைக்கப்படுபவர் விண்ட் செர்ப். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணி அதிகம் உதவியது. இவர் அமைத்த MCI mail சிஸ்டம் தான் இன்றைய மின் அஞ்சல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது. இணைய பெயர்களை வரையறை செய்திடும் ICANN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers என்னும் அமைப்பினை உருவாக்கிய முன்னோடி இவர்.

 

 
3. இராபர்ட் பாப் கான் (Robert “Bob” Kahn): இவருடைய தோழரும் உடன் பணியாற்றியவருமான விண்ட் செர்ப் போல இவரும் இணையத்தை உருவாக்கிய தந்தை என அழைக்கப்படுகிறார். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணியும் அதிகம் உதவியது. இவர் ஆய்வுகளை மேற்கொள்ள உதவியாக Corporation for National Research Initiatives (CNRI) என்னும் அமைப்பினை உருவாக்கினார். இந்த அமைப்பு நெட்வொர்க் தொழில் நுட்பத்தில் அதிகக் கவனம் செலுத்தியது.
4. லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் (Larry Page and Sergey Brin): ஆய்வுத் திட்டமாக முதலில் கூகுள் என்ற ஒன்றைத் தொடங்கியவர்கள் இவர்கள். அப்போது ஸ்டான்போர்ட் பல்கலையில் மாணவர்கள். இவர்கள் உருவாக்கிய கூகுள் கட்டமைப்பு இணையப் பயனாளர்கள் தகவலைத் தேடி அறிவதில் புதிய வழிகளை மாற்றிக் காட்டியது. இன்று Google.com என்பது இணையத்தின் மாறா நிலை தளமாக இயங்கி வருகிறது.
5. ஜிம் கிம்சி (Jim Kimsey): இணைய சேவை வழங்குவதில் உலகிற்கே முன்னோடியாக விளங்கும் AOL நிறுவனத்தை நிறுவி, அதன் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றியவர். ஒரு சமயம், இந்நிறுவனத்தின் இணைய சேவையைப் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருந்தது. இணையத்தில் ஒருவருக் கொருவர் நேரடியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் internet chat மற்றும் instant messaging இவர் நிறுவனத்தால் பிரபலமாகியது. மேலும், தங்களுக்கேற்ற வகையில் இணைய தளத்தினை உருவாக்கிய வழிகளும் இவர் தந்தவையே.
6. ஹெடி லமார் (Hedy Lamarr): இவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த நடிகை. 1930 முதல் 1950 வரை பிரபல நடிகையாக இருந்தவர். இவர் ஜார்ஜ் அன் தெய்ல் (George Antheil) என்பவருடன் இணைந்து அலைவரிசையைத் தாண்டி தகவல்கள் அனுப்பும் முறையைக் கண்டறிந்தார். அதுவே பின்னாளில், வயர் இணைப்பு இல்லாத இணையத்திற்கு அடிகோலியது.
7. ஜெப் பெஸோஸ் (Jeff Bezos): அமேஸான் நிறுவனத்தை உருவாக்கிய அதன் தலைமை நிர்வாகி. இணைய வழி வர்த்தகத்தினைக் கொண்டு வந்து இன்று பல நாடுகளில் அதனையே நடைமுறையாகக் கொண்டு வந்தவர். இணைய வர்த்தகத்தில் நம்பிக்கை வைத்திடும் பழக்கத்தினை இவரது நிறுவனம் மக்களிடையே விதைத்து ஊன்றியது. இணையம் வழி மக்கள் எதனையும் வாங்கலாம் என்ற சித்தாந்தத்தை மக்கள் நம்பும்படி வளர்த்தது இந்த நிறுவனம் தான்.
8. ரே டாம்லின்சன் (Ray Tomlinson): 1970 ஆம் ஆண்டுகளில், ARPANET என்னும் மின் அஞ்சல் கட்டமைப்பினை உருவாக்குவதில் பெரிதும் உதவியவர். பயனாளரையும், அவருக்கான சர்வர் கம்ப்யூட்டரையும் "ர்” என்ற அடையாளம் இட்டு வேறுபடுத்தி அஞ்சல் முகவரி யினை முதல் முதலில் அமைத்துப் பயன்படுத்தியவர் இவரே.
9. இலன் மஸ்க் (Elon Musk): X.com என்ற நிதி சார்ந்த இணைய தளத்தின் தலைவர் இவரே. Confinity என்ற நிறுவனத்தை வாங்கி, பின்னாளில் Paypal என்னும் இணைய நிதி நிறுவனத்தை உருவாகியவர் இவர். இதில் இவருக்கு Max Levch in, Peter Thiel, Luke Nosek, மற்றும் Ken Howery. ஆகியோர் துணைபுரிந்தனர்.
10. டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee): இன்றைய இணையத்தை அதன் தொடக்க நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி, மாற்றங்களை அறிமுகப்படுத்தியவர்கள் பலர். இதில் world wide web என்ற கட்டமைப்பினை உருவாக்கிய டீம் பெர்னர்ஸ் லீ என்பவருக்குச் சிறப்பான இடம் உண்டு. இணையத்தில் டேட்டா பரிமாற்றத்திற்கான அடிப்படை வழிமுறையான Hypertext Transfer Protocol (HTTP) என்பதனை உருவாக்கித் தந்தவர் இவர்.

கம்ப்யூட்டர் பைல்களின் பின் ஒட்டுப் பெயர்


கம்ப்யூட்டர்களில் நாம் பயன்படுத்தும் பைல்களின் பெயர்கள் இரு பிரிவுகளாக அமைக்கப்படுகின்றன. முதல் பகுதி பைலுக்கான விளக்கம் தரும் வகையில் பெயரைக் கொண்டு இருக்கும். அடுத்த பகுதி பைல் எக்ஸ்டன்ஷன் பெயராக இருக்கும். எந்த சாப்ட்வேர் கொண்டு பைல் உருவாக்கப்பட்டது என்பதனை அது சுட்டிக் காட்டும். இரண்டு பிரிவுகளை முற்றுப் புள்ளி ஒன்று பிரித்து அமைக்கும். எடுத்துக்காட்டாக, July report.doc என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் புரோகிராம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பைல் ஆகும். .doc என்னும் துணைப் பெயரைக் கொண்டு இதனை நாம் அறிந்து கொள்கிறோம். இதே போல Umbrella.mp3 என்பது ஒரு மியூசிக் பைல். இதன் துணைப் பெயர் மூலம் இதனை மியூசிக் இயக்கும் எந்த புரோகிராமும் திறந்து இயக்கும் என்பதனை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
விண்டோஸ் சிஸ்டமானது, மாறா நிலையில், பைல்களை நிர்வகிப்பதை எளிமையாக்க, பைல் பெயரின் பின் பகுதியைக் காட்டுவதில்லை. இதில் இன்னும் ஒரு சிக்கல் உள்ளது. முற்றுப் புள்ளி பைலின் பெயரையும், வகையையும் பிரித்தாலும், பேரில் எத்தனை புள்ளிகளையும் வைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக July report.doc என்பதை July.report.doc என்றும் அமைத்துக் கொள்ளலாம். இதனை விண்டோஸ் காட்டும் போது July.report என்று மட்டுமே காட்டும்.
பைல் எக்ஸ்டன்ஷன்களை மாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, July.report என்பதை July.report.doc என மாற்றினால், அது July.report. doc.doc என்றே இருக்கும். இனி, இவற்றின் பைல் எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்பட வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய சிஸ்டங்களில் பார்க்கலாம். இவை காட்டப்பட வேண்டும் என்றால், நாம் அதற்கேற்ற வகையில் சில அமைப்புவழிகளை மாற்ற வேண்டும்.
முதலில் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எப்படி அமைப்பது என்பதைக் காணலாம்.
1. முதலில் Windows Explorer ஐத் திறந்து கொள்ள வேண்டும். பின், இடது மேல்புறமாக Organize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து மெனுவில் Folder and search என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு திறக்கப்படும் விண்டோவில், View என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். பின் கீழாகச் சென்று, ‘Hide file extensions for known file types’ என்று இருப்பதன் முன்னால் உள்ள சிறிய பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
அடுத்து விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் வழிகள்:
1. முதலில் Windows Explorer (இங்கு இதன் பெயர் File Explorer) ஐத் திறந்து கொள்ள வேண்டும். இங்கு View டேப் மீது கிளிக் செய்திடவும்.
2. அடுத்து, File name extensions என்று இருப்பதில் டிக் செய்திடவும். டிக் செய்யப்பட்டால், பைல் எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்படும். இது விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் இருப்பதற்கு நேர் மாறானது என்பதனை அறியலாம்.


கூகுள் தேடல்கள் – சில வரையறைகள்கூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்கு ஒவ்வாத பல தகவல்கள் பட்டியலிடப் படுகின்றனவா? எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா? தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம். கீழே தரப்பட்டிருப்பவற்றை நீங்கள் மனப்பாடம் செய்து இயக்க வேண்டிய அவசியமில்லை. தேடல் வரையறைகள் நினைவிற்கு வர இயலாத சூழ்நிலையில் http://support.google.com/websearch/bin/answer.py?answer=35890 என்ற தளம் சென்று இவற்றை அறிந்து கொள்ளலாம்.
1. குறிப்பிட்ட சொல் மட்டும்: நாம் சொற்கள் அடங்கிய சில சொல் தொகுதிகளைத் தருகையில், அடிப்படைத் தேடலில் அவை எந்த வரிசையில் இருந்தாலும், அந்த டெக்ஸ்ட் உள்ள தளம் காட்டப்படும். அப்படி இல்லாமல், குறிப்பிட்ட வரிசையில் சொற்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே தேவை எனில் என்ன செய்திட வேண்டும்? எடுத்துக்காட்டாக, "nor custom stale her infinite variety” என்ற வரிசையில் உள்ள ஷேக்ஸ்பியர் வரியினைக் கொண்டுள்ள டெக்ஸ்ட் உள்ள பக்கம் மட்டுமே வேண்டும் எனில், இந்த சொற்களை மேற்கோள் குறிகளுக்குள் தர வேண்டும். அப்படிக் கொடுக்கையில், இந்த வரிசையில் உள்ள சொற்றொடர்கள் உள்ள பக்கங்கள் மட்டுமே பட்டியலிடப்படும்.

 

எனவே, இது போன்ற கட்டாயமான தேவை இருந்தால் மட்டுமே மேற்கோள் குறிகளுக்குள் தேடல் சொற்களை அமைக்க வேண்டும். சாதாரணத் தேடலில் அமைத்தால், பல முக்கிய தளங்களை நாம் காணாமல் இழக்க வேண்டியதிருக்கும்.
2. சொல்லை விலக்கி அளிக்க: குறிப்பிட்ட ஒரு சொல்லுடன், இன்னொரு குறிப்பிட்ட சொல் இல்லாதவை மட்டுமே நமக்குத் தேவையாய் இருக்கும். எடுத்துக்காட்டாக, மெட்ரோ நகரங்களைப் (metro cities) பற்றி தேடுகிறீர்கள். இப்போது வந்திருக்கும் விண்டோஸ் 8 தொகுப்பில் மெட்ரோ என்ற யூசர் இன்டர்பேஸ் முதலில் தரப்பட்டது. எனவே நீங்கள் metro cities என்று அளிக்கையில், விண்டோஸ் 8 குறித்த தளங்களும் காட்டப்படும். இதனைத் தவிர்த்து நகரங்களை மட்டும் பெற, Metro Cities windows என ஒரு சிறிய டேஷ் அடையாளத்தை (மைனஸ்) தேவையற்ற சொல்லுடன் இணைக்க வேண்டும். இதே போல ஒரு குறிப்பிட்ட தளத்தில் உள்ள எதுவும் வேண்டாம் என்றால், அந்த தளத்தின் பெயருக்கு முன்னால், site: எனக் கொடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, tamil kings site: wikipedia.org எனக் கொடுக்கலாம்.
3. இணைச் சொற்களுடன் தகவல்: மேலே காட்டப்பட்டதற்கு எதிராக, ஒரு சொல்லைப் போன்றே பொருள் உள்ள இணைச் சொற்களும் (Synonyms) காட்டப்பட வேண்டும் எனில், (~) குறியீட்டினைச் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ~food facts எனக் கொடுத்தால், நல்ல உணவிற்கான பிற சொற்களுடன் தேடல் தகவல்கள் தரப்படும்.
4. குறிப்பிட்ட தளத்தினுள் மட்டும்: உங்களுக்கான தேடல் குறிப்பிட்ட தளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் எனில், சொல்லுக்குப் பின்னால் site: என்ற சொல்லுடன், அந்த தளத்தின் யு.ஆர்.எல். தரப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, chrome site:support.google.com எனக் கொடுக்கலாம். இவ்வாறு கொடுக்கையில் chrome என்ற சொல் support.google.com என்ற தளத்தில் இடம் பெறும் இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
5. எந்த சொல்லானாலும் சரி: குறிப்பிட்ட தேடல் சொல் தொகுதியில் ஓர் இடத்தில், எந்த சொல் வந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினால், தேடலுக்கான சொல் தொடரில், அந்த இடத்தில் ஆஸ்டெரிஸ்க் குறியீட்டைத் தரலாம். எடுத்துக் காட்டாக "a * saved is a * earned” என அமைக்கலாம்.
6.எந்த சொல்லுக்கான விடையும் வேண்டும்: சில சொற்களைக் கொடுத்துத் தேடச் சொல்கையில், அவற்றில் இரண்டில் எந்த சொல் இருந்தாலும் வேண்டும் என எண்ணினால், அந்த இரண்டு சொற்களுக்கிடையில் "OR” எனப் பெரிய எழுத்துக்களில் தர வேண்டும். எடுத்துக்காட்டாக olympics location 2014 OR 2018 எனத் தரலாம். இவ்வாறு தருகையில், ஒலிம்பிக்ஸ் நடைபெற்ற இடம் 2014 ஆம் ஆண்டு அல்லது 2018 ஆம் ஆண்டு என இரண்டு ஆண்டுகளுக்குமான தேடல் நடைபெற்று விடை கிடைக்கும். இந்த குறியீடு இல்லை என்றால், இரண்டு சொற்களும் இடம் பெறும் தள விடைகள் மட்டுமே கிடைக்கும். இந்த தேடல் குறியீட்டில் என்பதற்குப் பதிலாக "|” என்ற குறியீட்டினையும் அமைக்கலாம்.
7. ரேஞ்ச் அமைக்க: விலை, ஆண்டு, நேரம், காலம் குறிப்பிடுகையில், இதிலிருந்து இது வரையிலானது வரை தேடுக என்று நாம் அமைக்க விரும்புவோம். அப்போது ரேஞ்ச் அமைப்பில் உள்ள இரண்டுக்கும் இடையே இரு புள்ளிகளை அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலான விலை ரேஞ்சில் உள்ள கேமராக்கள் குறித்து அறிய camera Rs.50..Rs.100 என அமைக்கலாம்.Share this:

india

india

danmark

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

NEAR REJSE. DK 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies